பாராட்டத்தகுந்த சாதனை! பெரியார் மணியம்மை பல்கலைக்கழக தேசிய மாணவர் (விமான) படையின் மாணவர் சாதனை
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பாராட்டத்தகுந்த சாதனை!
பெரியார் மணியம்மை பல்கலைக்கழக
தேசிய மாணவர் (விமான) படையின் மாணவர் சாதனை

வல்லம்.நவ.4 பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத் தில் நான்காம் ஆண்டு மின்னணு மற்றும் மின்னணுவியல் துறை யில் பயிலும்  சுபம் பாஜ்பேய் தேசிய மாணவர் படை யின் மூலம் இளையோர் கலாச் சார பரிவர்த்தனை ரஷ்யாவில் நடை பெறும் முகாமிற்கு தேர்ந்தெடுக் கப்பட்டு 15.10.2016 அன்று ரஷ்யா தலைநகரம் மாஸ்கோ சென்று 03.11.2016 நேற்று தஞ்சைக்கு வந்த அவரை பல்கலைக் கழக துணை வேந்தர் கர்னல் பேரா.நல்.இராமச் சந்திரன்,

பதிவாளர் ச.சிறீதரன், முதன்மையர்கள், இயக்குநர்கள், பேராசிரியர்கள் தேசிய மாணவர் படையின் குரூப் கமாண்டர் கர்னல் கே.பி.ஜெய்ராஜ், குரூப் கேப்டன் அலெக்ஸ்மேத்யூ, கர் னல் பி.குமார் ஆகியோர் சுபம் பாஜ்பாய்யை வரவேற்று பாராட் டுகளை தெரிவித்தனர்.

தேசிய மாணவர் படையின் குரூப் கமாண்டர் கர்னல் கே.பி. ஜெய்ராஜ் அவர்கள் மாணவரை பாராட்டும் போது அவர் எவ்வாறு தேர்தெடுக்கப்பட்டார் என்றும் அவரது அரிய உழைப்பு, முயற்சி தன்னம்பிக்கையினால் தேர்ந்தெ டுக்கப்பட்டார் என்று தெரிவித்தார்.

ரஷ்யாவில் நடைபெற்ற கலாச்சார பரிமாற்றம் நிகழ்ச் சிக்கு இந்தியாவில் உள்ள 14 லட்சம் தேசிய மாணவர் படையைச் சார்ந்த மாணவர்களில்  25 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டனர். இவர்களில் மூன்று மாணவர்கள் மட்டும் தமிழ் நாட்டை சார்ந்த மாணவர்கள் என்று குறிப்பிட்டு அதில் சுபம் பாஜ்பாய் என்று பாராட்டினார்.

பல்கலைக்கழக துணை வேந்தர் கர்னல் பேரா.நல்.இரா மச்சந்திரன் அவர்கள் உரையாற் றும் போது சுபம் பாஜ்பாய் உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள லக்னோவைச் சேர்ந்த ஒரு சாதாரண விவசாய குடும்பத்தை சார்ந்தவர் என்றும் குடும்பத்தில் இவர் முதல் பட்டதாரி என்றும் கூறினார்.

இப்பல்கலைக்கழகத்தில் தேசிய மாணவர் படையில் தரப்படை மற்றும் விமானப் படை பிரிவும் உள்ளது. பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் வாய்ப்பை உருவாக்கி கொடுத்து அவருக்கு பயிற்சியும் கொடுத்து அவரது முயற்சினால் ரஷ்யா சென்று நமது கலாச்சாரத்தையும் பண்பாடுகளையும் மற்றும் ரஷ்யா மக்களின் கலாச்சாரம் மற்றும் பண்பாடுகளையும் அறிந்துகொண்டனர்.

சுபம் பாஜ்பேய் பாராட்டி தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.  பாராட்டினை ஏற்றுக் கொண்டு சுபம் பாஜ்பாய் உரை யாற்றும் போது பெரியார் மணி யம்மை பல்கலைக்கழக நான்காம் ஆண்டு மின்னணு மற்றும் தொழில்நுட்ப துறையில் பயின்று வருகிறேன். நான் என் னுடைய கல்வி பயிலும் காலத்திலிருந்தே  தேசிய மாணவர் படையில் சேர வேண்டும் என்பது ஒரு கனவாக இருந்தது.

ஆனால் நான் மிகவும் மெலிந்த தேகமும், உயரம் சற்று குறைவாக உள்ளவன் அதனால் எனக்கு நம் பிக்கை சற்று குறைவாக இருந்த காரணத்தினால் பள்ளியில் தேசிய மாணவர் படையில் சேராதிருந் தேன். நான் பணிரெண்டாம் வகுப்பு பயின்று முடித்தவுடன் பெரியார் மணியம்மை பல் கலைக் கழகத்தில் முதலாம் ஆண்டு மின்னணு மற்றும் தொழில்நுட்ப துறையில் சேர்ந்தேன். அதுதான் என்னுடைய வாழ்க்கையில் முதல் திரும்பு முனையாக இருந்தது.

மேலும் நான் இப்பல்கலைக் கழகத்தில் பயின்றதனால் எனக்கு தமிழ் மொழி மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றை கற்றுக்கொள்ள முடிந்தது. நான் இரண்டாம் ஆண்டு பயிலும் பொழுது தேசிய மாணவர் படையில் (விமானப் பிரிவு) சேர்ந்தேன். அப்பொழுது குடியரசு தின அணிவகுப்புக்கான தேர்வு நடைபெற்றது. அத்தேர் விலும் நான் கலந்து கொண்டு தேர்வுற்றேன்.

இதற்கு மிகவும் உறுதுணையாக எனது பல்கலைக் கழக மேலாண்மை குழு உறுப்பி னர்களும், பல்கலைக்கழக வேந் தர், துணைவேந்தர், பதிவாளர் மற்றும் முதன்மையர்கள், இயக் குநர்கள், தேசிய மாணவ படை ஆசிரியர்களும் மிகவும் உறு துணையாக இருந்தார்கள்.

அதனால்தான் என்னால் தேசிய அளவிலும், உலகளவிலும் சாதிக்க முடிந்தது. இளையோர் கலாச்சார பரிவத்தனை முகாமில் (ஸிussவீணீ) கலந்துகொண்டேன். முகாமில் நான் கற்றுக்கொண்ட அனுபவங்கள் மிகவும் பயனுள்ள தாக இருந்தது.

ஒவ்வொரு ஆண்டு தேசிய மாணவர் படை மாணவர்களை அயல்நாடு செல்லும் இந்த முகா மிற்காக தேர்வு செய்வார்கள்.

இவ்வாண்டும் இந்த முகா மிற்கு செல்வதற்காக இருபத்து அய்ந்து தேசிய மாணவர் படை மாணவர்களை மற்றும் இரண்டு அதிகாரிகளும் தேர்வு செய் தார்கள்.

பத்து நாட்கள் தேசிய மாண வர் படை இயக்குநர் பொது அவர்களின் கீழ் எங்களுக்கு சிறப்பு பயிற்சி புதுடில்லியில் நடந்தது. பிறகு நாங்கள் ரஷ்யா வில் உள்ள மாஸ்கோ தலை நகருக்கு பயணமானோம்.

எங்களை முதல் தேசிய மாணவர் படை பள்ளியிலிருந்து வரவேற்றார்கள். அங்கிருந்து எங்களுடைய பயிற்சி முகாம் ஆரம்பமானது.

நாங்கள் பல்வேறு தேசிய மாணவர் படை பள்ளிகளுக்கு சென்றோம். ரஷ்யா குடியரசு தலைவர் மாளிகை அவர் பணி யாற்றும் இடம் மற்றும் இந்திய தூதரகம் ஆகிய பல்வேறு அருங்காட்சியகங்களுக்கும் சென் றோம்.

மேலும் இந்திய தூதர் சிறீபங்கஜ் சரன் அவர்களை சந்தித்தோம் என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார்.  இறுதியாக பல்கலைக்கழக தேசிய மாணவர் படை சார்ந்த லெப்டினெட் பி.விஜயலெட்சுமி நன்றி கூறினார்..
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner