மவுலிவாக்கம் 11 மாடி கட்டடம் மூன்றே நொடியில் தகர்ப்பு
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை.நவ.3 சென்னை போரூர் அருகே மவுலிவாக்கத்தில் ஆபத் தான நிலையில் இருந்த 11 மாடி கட்டடம் புதன்கிழமை (நவ.2) இரவு 6.50 மணிக்கு இம்ப்ளோசன் என்ற நவீன தொழில் நுட்பத்தின் மூலம் வெடி வைத்து தகர்க்கப் பட்டது.

கட்டிடத்தின் தூண்கள் அனைத்திலும் துளையிடப் பட்டு வெடிமருந்து நிரப்பப் பட்டது. ரிமோட்டை இயக்கிய 3 வினாடியில் மவுலிவாக்கம் கட்டடம் தரைமட்டம் ஆனது. கட்டடம் இடிந்ததும் மவுலி வாக்கம் முழுவதும் புகை மண்டலம் சூழ்ந்தது. கட்டடம் இடிக்கப்பட் டவுடன் மணலில் கட்டிய சிற்பம் போல சரிந்து விழுந்தது.

சென்னை போரூரை அடுத்த மவுலிவாக்கத்தில் தனியார் கட்டுமான நிறுவனம், தலா 11 மாடிகள் கொண்ட 2 அடுக்கு மாடி குடியிருப்புகளை கட்டி வந்தது. இதில், ‘பிளாக் பி’ என்ற 11 மாடி கட்டடம், கடந்த 2014ஆ-ம் ஆண்டு ஜூன் 28-ஆம் தேதி திடீரென இடிந்து தரை மட்டமானது. இந்தவிபத் தில் 61 பேர் இறந்தனர்.

27 பேர் படுகாயமடைந்தனர். அதன் அருகில் உள்ள மற்றொரு 11 மாடிக் கட்டடமும் தரமற்று இருக்கலாம் என்று கருதி அதை இடிக்க உச்சநீதிமன்றம் உத்தர விட்டது.அதன்படி, புதனன்று பகல் 2 மணி முதல் 4 மணிக்குள் கட்டடம் முழு மையாக இடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. மழையின் காரணமாக இரவு6.50 மணிக்கு கட்டிடம் இடிக்கப்பட்டது. பாதுகாப்பு நடவடிக்கையாக, 100 மீட்டர் சுற்றளவில் உள்ள கட்டடங்கள், வீடுகளில் வசிப் பவர்கள் வெளியேற்றப்பட்ட னர். தமிழகத்தில் 11 மாடி கட்டடம் வெடி வைத்து தகர்க் கப்பட்டது இதுவே முதல் முறையாகும். கட்டடம் தகர்ந்து விழுந்தவுடன் பெரும் தூசு மண்டலம் உருவானது. அருகில் உள்ள வீடுகளிலும் தூசு படிந் துள்ளது..
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner