தமிழகத்தில் தேர்தல் நடைபெறும் 3 தொகுதிகளிலும் திமுக வெற்றி உறுதி மு.க.ஸ்டாலின் பேச்சு
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தர்மபுரி, நவ.3 தர்மபுரி மாவட்ட திமுக செயலாளர் தடங்கம் சுப்ரமணி எம்எல்ஏ மகன் தாமரைசெல்வனுக்கும், சேலம் மாவட்டம் ஓமலூர் தாலுகா பெரியவடகம்பட்டி சண்முகம்  மகள் நிஷாந்திக்கும், தர்ம புரியில் நேற்று (2.11.2016) திருமணம் நடந்தது.

திருமணத்தை நடத்தி வைத்து, திமுக பொருளாளரும், தமிழக சட்ட மன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் பேசியதாவது: தமிழகத் தில் ஒரு ஆட்சி நடந்து கொண்டிருக் கிறது. அந்த ஆட்சி செயல்படாமல் உள்ளது. கடந்த அய்ந்தாண்டும் இவர் களே ஆட்சி செய்தனர். அது காணொலி காட்சி ஆட்சியாக இருந்தது. தற்போது அந்த காணொலி காட்சி ஆட்சியும் இல்லை.  அப்போலோ மருத்துவ மனைக்கு அமைச்சர்கள் செல்கின்றனர். பத்திரிகை, டிவிகளுக்கு பேட்டியளிக் கின்றனர். உண்மை நிலவரங்களை சில பத்திரிகைகள், டிவிக்கள் செய்தியாக வெளியிடுவதில்லை. மூடி மறைக்கின் றன. முதல்வர் உடல்நலம் பெற வேண்டி, திமுக தலைவர் கலைஞர் தான் முதன் முதலாக அறிக்கை வெளியிட்டார். அர சியலில் கருத்து வேறுபாடுகள் இருக்க லாம், கொள்கைகள் இருக்கலாம். அதை மறந்து, முதல்வர் நலம் பெற வேண்டி கலைஞர் அறிக்கை வெளியிட்டார்.

2 நாட்களுக்கு முன்பு தொழில்துறையிலே தமிழ்நாடு எந்த நிலையில் இருக்கின்றது என்பதை பற்றி மத்தியில் இருக்கக்கூடிய தொழில் கொள்கை மேம்பாட்டு துறையின் சார்பில் ஒரு ஆய்வு அறிக்கையை ஆதாரத்தோடு வெளியிட்டிருக்கிறார்கள். 36 மாநிலங் களில் இன்றைக்கு தமிழ்நாடு 18ஆவது இடத்தில் இருக்கின்றது. ஏற்கெனவே தொழில்துறையில் 2ஆவது, 3ஆவது இடத்திலே இருந்த தமிழ்நாடு, திமுக ஆட்சியிலே முதலிடம் பிறகு இரண்டா மிடத்திற்கு கூட வந்திருக்கின்றது. ஆனால் இன்றைக்கு 18ஆவது இடத்திற்கு தள்ளப் பட்டிருக்கிறது என வேதனையோடு குறிப்பிட்டு இருக்கிறார்கள். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில், தமிழகத்தில் அரசியல் கட்சிகளிடையே ஒற்றுமை இல்லை. கர்நாடகாவில் அரசியல் கட்சியினர் ஒற்றுமையாக உள்ளனர். அதனால் தமிழகத்தில் விவசாய சங்கங்களை ஒன்றிணைத்து திமுக ஆலோசனை நடத்தி, ஆர்ப்பாட்டம், போராட்டங்கள் நடத்தியது.

கடந்த 5 ஆண்டாக தமிழகம் அய்சியூ வார்டில் இருந்தது. கோமாவில் இருந்தது என்று பேசி வந்தேன். இப்போது அதை பற்றி பேசினால் சரி வராது. தமிழக அரசு எந்தவித செயல் பாடுமின்றி முடங்கி, கோமா நிலையில் கிடக்கிறது. திமுகவுக்கு தற்போது 89 எம்எல்ஏக்கள் உள்ளனர். வரும் 19ஆம் தேதி நடக்க இருக்கும் தஞ்சை, அரவக் குறிச்சி, திருப்பரங்குன்றம் இடைத்தேர் தலுக்கு பின்னர், திமுகவுக்கு மேலும் 3 சட்டமன்ற உறுப்பினர்கள் கிடைப்பர். அதன்மூலம் சட்டப்பேரவையில் திமுகவின் பலம் 92 ஆக உயரும். தமிழகத்தில் ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்களுக்காக போராடும் ஒரே இயக்கம் திமுக தான். இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

இந்நிகழ்வில் முன்னாள் அமைச் சர்கள் துரைமுருகன், ஏ.வ. வேலு, டி.எம். செல்வகணபதி மற்றும் திமு.க. மாவட்ட கழக நிர்வாகிகள் பங்கேற்று சிறப்பித்தனர்..
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner