சிறுவாணி ஆற்றின் குறுக்கே அணை கட்ட கேரள அரசுக்குத் தடை
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, நவ.3 சிறுவாணி ஆற்றின் குறுக்கே அட்டப்பாடி பள்ளத்தாக்கில் கேரள அரசு அணை கட்ட மேற்கொண்ட நடவடிக்கைகளை நிறுத்தி வைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், மத்திய சுற்றுச்சூழல், வனம் பருவநிலை மாற்ற அமைச்சக வல்லுநர் மதிப்பீட்டுக் குழு தனது 96-ஆவது கூட்டத்தில், கேரள அரசின் கோரிக் கையை ஏற்று, அட்டப் பாடி பள்ளத்தாக்கில் அணை கட்டும் திட்டத்திற்கான சுற்றுச்சூழல் தாக்க மதிப் பீட்டிற்கு நிலையான ஆய்வு வரம்புகளை மத்திய அரசு வழங்கலாம் என்று அளித்த பரிந்துரையை தற்போது மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது.

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான நடுவர் மன்ற இறுதி ஆணையை எதிர்த்து தமிழ்நாடு அரசால் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகள் முடிவுறும் வரையிலும் அல்லது தமிழ்நாடு அரசின் இசைவினைப் பெறும் வரையிலும் வல்லுநர் மதிப்பீட்டுக் குழுவின் பரிந் துரையை நிறுத்தி வைப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து தமிழ்நாடு அரசுக்கு மத்திய அரசு கடிதம் அனுப்பியுள்ளது.மத்திய அரசின் வனம், சுற்றுச்சூழல் பருவநிலை மாற்ற அமைச்சகத்தின் கீழ் உள்ள வல்லுநர் மதிப் பீட்டுக்குழு அட்டபாடி அருகே சிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரள அரசு அணை கட்ட ஆய்வு நடத்த அனுமதி அளிக்கலாம் என்று மத்திய அரசுக்கு பரிந்துரை செய்திருந்தது. இக்குழு தமிழ்நாட்டின் கருத்தினைப் பெறாமல் முடிவெடுத்துள்ளது என்று தமிழக அரசு கூறியதோடு அணை கட்டுவ தற்காக ஆய்வு நடத்த கேரள அரசுக்கு மத்திய அரசு அனுமதி அளித்ததற்கும் எதிர்ப்பு தெரிவித்தது. இப்பிரச்சனையில் பிரதமர் உடனடியாக தலையிட்டு, வல்லு நர் மதிப் பீட்டுக்குழு, அளித்த பரிந் துரையை உடனடியாக திரும்பப் பெற மத்திய சுற்றுச் சூழல், வனம் பருவநிலை மாற்ற அமைச்சகம் மற்றும் அதனைச் சார்ந்த முகமைகளுக்கு அறிவுறுத்தும்படி தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கேட்டுக் கொண்டார்.

காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நதிநீர் முறைப்படுத்தும் குழு நடைமுறைக்கு வரும் வரையிலும் மற்றும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப் பட்ட வழக்குகள் இறுதியாக்கம் செய்யப்ப டும் வரையிலும், கேரள மற்றும் கர்நாடக அரசுகள் எந்த ஒரு திட்டத்தையும் மேற் கொள்வதற்கு மத்திய அரசுஅனுமதி அளிக்கக் கூடாது என்றும் முதல்வர் கூறியிருந்தார்.முதல்வர் இது தொடர்பாக அரசினர் தனித் தீர்மானம் ஒன்றும் கடந்த செப்டம்பர் மாதம் 2ஆம் தேதி தமிழ்நாடு சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டது.இதையடுத்து சிறுவாணி ஆற்றின் குறுக்கே அட்டப்பாடி பள்ளத்தாக்கில் கேரள அரசு அணை கட்ட மேற்கொண்ட நடவடிக்கை களை நிறுத்தி வைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது..
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner