தேவை "வருமுன்னர் காக்கும்" நடவடிக்கைகள்! 3600 நீர் நிலைகள் புனரமைக்கப்படுமா?
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தேவை "வருமுன்னர் காக்கும்" நடவடிக்கைகள்!
3600 நீர் நிலைகள் புனரமைக்கப்படுமா?

சென்னை, நவ.1 வடகிழக்குப் பருவ மழை துவங்கும் நேரத்திலும் நீர்நிலைகள் இன்ன மும் சீர்செய்யப்படாமல் இருப்பதால் போரூர் -பூவிருந்தவல்லி இடையிலான புற நகர்ப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர். 3600 நீர்நிலைகளை மேம்படுத்தி வெள்ள நிர்வாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று வல்லு நர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இது குறித்து தி இந்து ஆங்கில நாளேடு (28.10.2016) அன்று இதழில் வெளியிட்டுள்ள சிறப்புச் செய்திகளில் தெரிவிக்கப்பட்டிருப்ப தாவது:

இங்கே இன்னமும் அதே பழைய கதைதான் நடந்து வருகிறது என்று மணப்பாக்கத்தைச் சேர்ந்த விரக்தி யடைந்த ஒருவர் தெரிவித்துள்ளார். சென்னையின் மேற்குப் பகுதியில் போரூக்கும் - பூவிருந்தவல்லிக்கும் இடைப்பட்ட புறநகர்ப் பகுதிகள் ஆண்டு தோறும் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்து அப்பகுதியில் வசிக்கும் மக்கள் கூறிய போது, இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

மணப்பாக்கம், முகலிவாக்கம், கோலப்பாக்கம், மவுலிவாக்கம் மற்றும் ராமாபுரம் ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் வெள்ளத்தடுப்புநடவடிக்கைகள் எடுப்பதை அரசிடம் விட்டுவிட்டனர். அரசு அமைப் புகளோ தீவிரமான வெள்ளத் தடுப்பு நடவடிக்கை களில் போதுமான அளவுக்கு ஈடுபடவில்லை.

இப்பகுதிகளில் வசித்து வரும் பணியாளர் களும், ஓய்வூதியதாரர்களும், புதிதாக இந்தப் பகுதிக்கு வந்து நிரந் தரமாகத் தங்கி விட்டவர் களும் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக, மென் பொருள் நிறுவனங்களுடன் பொருளா தார மண்டலங்கள் அமைக்கப்பட்டதால் அளவுக்கு மீறிய ரியல் எஸ்டேட் துறையின் வளர்ச்சி ஏற்பட்ட தைக் கண்டிருந்ததால் வடகிழக்கு பருவ மழை தொடங்கவிருக்கும் நாளைக் குறித்து அச்சம் அடைந்துள்ளனர்.

"2005 ஆம் ஆண்டிலும் அதற்கு அடுத்த ஆண்டிலும் நாங்கள் மிகவும் வேதனையடைந்தோம். கடந்த 10 ஆண்டு களாக எந்த வளர்ச்சியும் ஏற்பட வில்லை. அதன் மோசமான விளைவு களைத் தான் 2015 ஆம் ஆண்டு பார்த் தோம் என்று மனப்பாக்கத்தில் வசிக் கும் மூத்த குடிமகனான ஆர்.நடராஜன் தெரிவித்துள்ளார்.

அந்தப் புயல் வெள்ளத்தின் போது அவரால் 3 நாட்களுக்கு அவருடைய வீட்டின் தரைத் தளத்திற்கு வரவே முடியவில்லை. முகலிவாக்கம் கால் வாய்மூலம் அடித்துக் கொண்டு வரப் பட்ட குப்பைக் கூளங்கள் மற்றும் கழி வுகள் நிறைந்திருந்த வீட்டை சீர்படுத்த அவருக்கு ஒருவார காலம் பிடித்தது.

"நான் அதிர்ஷ்டம் செய்தவர்களில் ஒருவனாக இருந்தேன். ஆனால் சில ரால் ஒருவாரம் வரை தங்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியவில்லை என்று கூறியுள்ளார்.

சென்னை சுற்றுச் சாலை அமைக்கப் பட்டதாலும், பெருமளவிலான மிக உயர்ந்த குடியிருப்புக் கட்டிடங்கள் மற்றும் அலுவலக வளாகங்கள் கட்டப் பட்டதாகவும், இயற்கையாக அடை யாறில் மழைநீர் சென்று கலக்கும் வழிகள் அடைபட்டு  விட்டன என்று இப்பகுதிகளில் வசிப்பவர்கள் கருது கின்றனர்.

14 கிலோ மீட்டர் நீளமான மணப் பாக்கம் கால்வாயை, இப்பகுதியில் வசிப்பவர்கள் குழு ஒன்று சுதந்திரமான ஆய்வு ஒன்றை நடத்தியது. இந்த கால்வாய்தான் போரூர் ஏரிநிரம்பியபின் வெளியேறும் தண்ணீரை அடையாறு ஆற்றில் கொண்டு வந்து சேர்க்கும் நீர் வழியாகும். அதேபோல் இரண்டரைக் கிலோ மீட்டர் தூரத்திற்கு மழை நீரைக் கொண்டு வந்து மனப்பாக்கத்தில் ஆற் றுடன் சேர்க்கும் முகலிவாக்கம் கால் வாயையும் அவர்கள் ஆய்வு செய்தனர்.

அவர்களுடைய கருத்துப்படி, ஆக் கிரமிப்புகளும் வண்டல்கள் சேர்ந்ததும், தாவரங்கள் வளர்ந்திருப்பதும் தண்ணீர் ஓட்டத்தைத் தடுத்து விடுகின்றன. இது வெள்ளப் பெருக்கு ஏற்பட காரணமாகி வருகிறது. அரசு தூர்வாரும் பணிகளை போர்க்கால அடிப் படையில் மேற் கொள்ள வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். ஆனால் சில ஊழியர்களும், எர்த்மூவர் எந்திரங்களும் மட்டுமே பயன்படுத்துவதன் மூலம் நாங்கள் அதிருப்தி அடைந்துள்ளோம். இது போதுமானதல்ல" என்று இப்பகுதி யில் வசிப் பவர்கள் சொல்கின்றனர்.

மணப்பாக்கம் கால்வாய் சில இடங் களில் 40 அடி அளவுக்கு ஆழமாகவும், ஆக்கிரமிப்புகள் காரணமாக சில பகுதி களில் 6 அடிக்கும் குறைவான ஆழத் துடன் காணப்படுகிறது என்று அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்நிலையில் வடகிழக்குப் பருவமழை தொடங்கும் காலம் நெருங்கிவிட்டது. இந்நிலையில் அரசு, கால்வாய்களை புனரமைக்காமல் அருமையான காலத்தை வீணாக்கி விட்டது என்றும் அவர்கள் புகார் கூறி யுள்ளனர்.

இதற்கிடையில், கவலை கொண்ட குடிமக்களின் குழு ஒன்று சென்னை யிலும் அதன் புறநகர் பகுதிகளிலும் உள்ள 3600 நீர்நிலைகளைப் புனர மைப்பது தொடர்பாக மேற்கொள்ளப் பட வேண்டிய பணிகள் குறித்த ஆவணம் ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதனை வெளியிட்ட "மிட்ஸ்" அமைப்பின் பேராசிரியர் எஸ்.ஜனக ராஜன் நகர்புற மற்றும் புறநகர் பகுதி களில் தண்ணீர் ஆற்றலை நீர்நிலைத் தன்மைகளுக்கேற்ப கையாள வேண் டிய அவசியத்தை வலியுறுத்தியுள்ளார். சென்னையிலும் காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களிலும் அத னைப் பின்பற்ற வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

சென்னை நகரில் ஏற்பட்ட வெள் ளத்தின் பல்வேறு அம்சங்கள் குறித்து ஆய்வு நடத்திய ஒரு குழு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் 80 சதவீதம் அளவுக்கு நகர்ப்புற மய மாக்கப்பட்டு இருப்பதால் நீர்நிலைகள் பாதுகாக்கப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என்று அவர் வலி யுறுத்தியுள்ளார்.

ஆனால் இதற்கான நீர் மற்றும் பூகோள மேம்பாட்டுக்கான வரைப் படத்தை இன்னமும் தயாரிக்க வில்லை. நீர் நிலைகளை காப்பதற்கும் அவை தொடர்பான சட்டப்பிரச்சி னைகளைத் தீர்ப்பதற்கும் நடவடிக்கை கள் எடுக்கப்பட வேண்டும் எனறு அந்நிகழ்ச்சியில் பேசியவர்கள் வலி யுறுத்தியுள்ளனர்.

அவற்றைப் பரா மரிக்க மக்கள் குழுக்களை அமைக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரி யுள்ளனர். இது தொடர்பாக அரசு ஒரு விரிவான கணக்கெடுப்பு (சர்வே) நடத்தி, தகவல் களைச் சேகரித்து, தூர்வாரவும், ஆக்கிரமிப்புகளை அகற் றவும் திட்டமிடவும் கோரிக்கை வைத் துள்ளனர். அத்துடன் பழவேற்காட் டையும் முட்டுக்காட்டையும் பக்கிங் காம் கால்வாய் இணைக்கும் வகையில் வழி ஏற்படுத்தி அதை நீர் வழியாகப் பயன்படுத்தவும், அதில் கழிவுநீர் கலக் காமல் தடுக்கவும் வேண்டும் என்றும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள் ளனர்.

எனினும் நீர்வளத்துறை அதிகாரிகள் இதுபற்றி கூறும் போது, மணப்பாக்கம் மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் வெள்ளம் ஏற்படுவதற்குக் காரணமாக இருந்த தவறுகள் அனைத்தும் சரி செய்யப்பட்டு விட்டன.

எனவே, மக்கள் அச்சமடையத் தேவை யில்லை என்று சொல்கின்றனர். திருநீர்மலைக் கும், ஜாபர்கான்பேட்டைக்கும் இடை யேயுள்ள 25 கிலோ மீட்டர் நீளத்திற்கு அடையாறு ஆறு சீரமைக்கப்பட்டுள் ளது. எனவே, குடியிருப்புப் பகுதி களான எல்.அன்ட் டி காலனி, ஆர்.ஜி.எல். காலனி, ஐ.ஏ.எஸ். மற்றும் அய்.பி.எஸ். அதிகாரிகள் காலனி போன்றவை இந்த ஆண்டு பாதிக்கப் படமாட்டா.
மிதவைகளைப் பயன்படுத்தி தாவரங்களை அகற்றியும், தூர்வாரியும், கரைகளை உயர்த்தியும் 60 முதல் 70 மீட்டர் அளவுக்கு அனகாபுத்தூரில் ஆறு சீரமைக்கப்பட்டுள்ளது.

மணப் பாக்கம் பாலம் வரை கான்கிரீட் சுவர் எழுப்பப்பட்டது என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர். சில பகுதிகளில் மத குகள் அமைக்கப்பட்டிருப்பதாகவும் அவர்கள் சொல்கின்றனர். இருந்த போதிலும், ஜாபர்கான் பேட்டைக்கும் அடையாறு முகத்துவாரம் வரை உள்ள 12கி.மீ. தூரம் சீரமைக்கப்பட வேண்டி யுள்ளது.  இவ்வாறு "தி இந்து" ஆங்கில நாளேடு தனது சிறப்புச செய்திகளில் தெரிவித்துள்ளது..
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner