சாலை விபத்துக்களை தடுக்க புதிய கண்டுபிடிப்பு பள்ளி மாணவி சாதனை
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சாலை விபத்துக்களை தடுக்க புதிய கண்டுபிடிப்பு
பள்ளி மாணவி சாதனை

தரங்கம்பாடி, அக். 31 -நாகை மாவட்டம், மயிலாடுதுறை புனித பவுல் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வருபவர் தரங்கம்பாடியைச் சேர்ந்த நிரஞ்சனா.

ஆம்புலன்ஸ் வாகனத்தில் உயிருக்குப் போராடிக்கொண்டு செல்பவர்களைப் பாதுகாக்கும் வகையிலும், தொடர் சாலை விபத்துகளைத் தவிர்க்கும் வகை யிலும், 2 புதிய படைப்புகளை கண்டு பிடித்துள்ளார்.

கண்டுபிடிப்பு குறித்து நிரஞ் சனா கூறுகையில், ஆம்புலன்ஸ் வாகனத்தில் உயிருக்கு போரா டும் நிலையில் நோயாளிகளை கொண்டு செல்லும் போது சாலையில் உள்ள வேகத் தடையில் வேகத்தை குறைக் கும் போது ஏற்படும் நேர விரயத்தாலும், வேகத்தடையில் ஏறி, இறங்கும் போது ஏற்படும் அதிர்வுகளாலும் சில நேரங் களில் உயிருக்குப் போராடுப வர்கள் இறக்கும் நிலை ஏற்படுகிறது.

ஹைட்ராலிக் தொழில் நுட்பத்துடன் வேகத் தடை மற்றும் ஆம்புலன்ஸ் களில் சென்சார் கருவிகளை பொருத்திக் கொள்வதால் ஆம் புலன்ஸ் வேகத்தடை அருகே வரும் போது 20 மீட்டருக்கு முன்பு வேகத்தடை உள்வாங்கி கொள்ளும் என்றார். ஆம்பு லன்ஸ் வேகத்தடையை கடந்த பின்பு தானாக வேகத்தடை மீண்டும் மேல் எழும்பும். இத னால் நோயாளிகள் ஆம்புலன் ஸில் இறக்க நேரிடுவதை தவிர்க்கலாம்.

மேலும் முக்கியப் பிரமுகர் கள்வரும் போது அவர்களுக்காக வேகத்தடையை அப்புறப்படுத் துவதையும் தவிர்க்கலாம். இத னால் வீண் செலவும் குறையும். அதே போன்று ஆபத்தான வளைவுகளால் ஏற்படும் விபத் தைத் தவிர்க்கும் வகையில் வாகனங்கள் உற்பத்தியின் போது சென்சார் கருவி மற்றும் எச்சரிக்கை ஆடியோ பதிவைப் பொருத்திக் கொண்டு, வளை வுகளில் அமைக்கப்படும் சென் சார் கருவிகளால் வளைவுக்கு 20 மீட்டருக்கு முன்பு வாகன ஓட்டியை எச்சரிக்கும் வகை யில் ஆடியோ பதிவு ஒலிப்ப தால் விபத்துகள் வெகுவாக குறையும்.

குறிப்பாக இரவு நேரங் களில் வாகன ஓட்டுநர்கள் கவனத்தை திசை திருப்பாமல் செயல்பட வைக்கும் வகையில் இந்த படைப்புகளை உருவாக் கியுள்ளேன் என்றும் அவர் கூறினார்.நிரஞ்சனாவின் இந்த கண்டுபிடிப்பை தமிழக அரசு ஊக்குவிக்க வேண்டுமென சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்..
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner