மேட்டூர் அணையில் நீர்திறப்பு குறைப்பு ஒரு போக சாகுபடியும் பாதிக்கும் அபாயம்
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மேட்டூர் அணையில் நீர்திறப்பு குறைப்பு ஒரு போக சாகுபடியும் பாதிக்கும் அபாயம்

திருச்சி, அக்.31 மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளதால்  விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

மேட்டூர் அணையில் இருந்து சம்பா, குறுவை பரு வத்துக்காக டெல்டா மாவட் டங்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படும். கர்நாடகாவில் இருந்து காவிரி நீர் ஒப்பந்தப்படி தண்ணீர் திறக்காததால் குறுவை பருவம் பொய்த்தது. இதை யொட்டி, சம்பா பருவத்துக்காக வினாடிக்கு 12,000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. ஆனால், பருவ மழை பெய்ய துவங்கிவிட்டதாக கூறி 28ஆம் தேதி மாலை முதல் திடீரென தண்ணீரின் அளவு 4,000 கனஅடியாக குறைக்கப்பட்டது.

அணையின் நீர் இருப்பு 15.55 டிஎம்சி. காவிரியில் 100 கன அடியும், வெண்ணாற்றில் 3702 கனஅடியும், கல்லணை கால் வாயில் 1214 கனஅடியும், கொள்ளிடத்தில் 504 கனஅடியும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு 4,000 கனஅடியாக குறைக்கப்பட்டதால் டெல்டா விவசாயிகள் கவலை அடைந் துள்ளனர்.

இதுகுறித்து கடைமடை விவசாயிகள் கூறியதாவது: 3 போகம் விளைந்த பாசன பகுதி களில் இப்போது ஒரு போகம் கூட விளைவிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேட்டூர் அணை திறக்கப்பட்டு 35 நாளாகியும் பெரும்பாலான இடங்களுக்கு தண்ணீர் வந்து சேரவில்லை.

பெரும்பான்மை யான பகுதியில் நேரடி நெல் விதைப்பு செய்யப்பட்ட விதை கள் 50 நாளாகியும் முளைக் காமலே உள்ளது. இந்தவேள யில், தண்ணீர் பாதியாக குறைத் திருப்பதால் கடைமடைக்கு காவிரி வர வாய்ப்பில்லை. எனவே விவசாயிகள் வருமான இழப்பு ஏற்பட்டு செய்வதறியாது உள்ளனர். எனவே, விவசாயிகளுக்கு ஏக் கருக்கு ரூ.30,000 நிவாரணம் வழங்க வேண்டும்.

மேலும், வடகிழக்கு பருவமழை துவங்கி விட்டதாக சென்னை வானிலை மய்யம் அறிவித்தபோதிலும் டெல்டாவை பொருத்தவரை மழை பெய்யவில்லை. ஒரு சில பகுதிகளில் பயிரிடப் பட்டுள்ள சம்பா பயிர், தண் ணீர் இல்லாததால் இன்னும் பாதி முளைக்காமல் உள்ளது. ஒரு சில வயல்களில் முளைத் துள்ளது. பருவ மழைக்குள் உரமிட வேண்டும். ஆனால் பயிர்கள் சரியாக வளராததால் உரமிடும் பணி பாதிக்கப்பட் டுள்ளது. இதனால் சம்பாவுக்கு பருவ மழை பெய்தாலும் பயன் இருக்காது. இவ்வாறு விவசாயிகள் கூறினார்கள்..
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner