குண்டர் தடுப்புச் சட்ட கைதுகளில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடம்! தேசிய குற்றப் பதிவு ஆவணக் காப்பகம் தகவல்!
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, அக். 29- தேசிய குற்றப் பதிவு ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் இந்தியாவிலேயே குண்டர் தடுப்புச் சட்டம் போன்ற தடுப்புச் சட்டங்களைப் பயன் படுத்தி கைது செய்வதில் தமிழ் நாடு காவல்துறைதான் முதலி டத்தில் உள்ளது என்பது தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து "தி இந்து" ஆங்கில நாளேடு,  (27.10.2016) இதழில் வெளியிட்டுள்ள சிறப்புச் செய்தியில் குறிப்பிட் டிருப்பதாவது:-

"தமிழ்நாடு காவல்துறை இந்தியாவின் பிற மாநிலங் களில் உள்ள காவல்துறையின ரைவிட சந்தேகத்துக்குரியவர் களை முன் கூட்டியே கைது செய்வதற்குப் பயன்படுத்தக் கூடிய, மாநிலத்தில் உள்ள குண்டர் தடுப்புச் சட்டத்தைப் பயன்படுத்தி கைது செய்வதில் நாட்டிலேயே முதல் இடத்தில் உள்ளது.

இதுகுறித்து, தேசிய குற்றப் பதிவு ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள புள்ளி விவ ரங்களில் குறிப்பிடப்பட்டிருப் பதாவது:-

2015ஆம் ஆண்டில் தமிழக காவல்துறை 21 பெண்கள் உள்பட 1,268 பேரை சந்தேகத் தின் பேரில் இந்த (குண்டர் தடுப்புச்) சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளது. தெலுங் கானாவில் 339 பேரும், கர்நாட கத்தில் 232 பேரும், குஜராத்தில் 219 பேரும் இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். "தடா" எனப்படும் "தீவிரவாதி கள் மற்றும் அழிவு நடவ டிக்கைகள் (தடைச்) சட்டத் தின்" (அச்சட்டம் அமலில் இருந்த காலத்தில்) கீழ் இம் மாநிலத்தில் 69 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

கள்ளச்சாராயம் காய்ச்சு வோர், போலி மருந்து தயாரிப் போர், வனத்துறை குற்ற வாளிகள், வன் முறையில் ஈடுபடுவோர், கடத்தலில் ஈடு படுவோர், மணல் கடத்தல் காரர்கள், குடிசைகளை அப கரிப்போர் திருட்டு வி.சி.டி. வெளியிடுவோர் ஆகியோருக்கு எதிரான தமிழ்நாடு அபாயகர நடவடிக்கைகள் தடைச் சட் டம் - 1982ல் கொண்டு வரப்பட் டது. இது குண்டர் தடுப்புச் சட்டத்தைப் போல் பாரம்பரிய மாகக் குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களை ஓராண்டு வரை சிறையில் அடைக்க உத் தரவிடுவதற்கு காவல் துறை யினருக்கு அதிகாரம் அளிக் கிறது.

சில ஆண்டுகளுக்கு முன்பு, வலைதளங்கள் வழியாக நடத்தப்படும் "சைபர் கிரைம்" குற்றங்களும், பாலியல் ரீதி யான குற்றங்களும் இந்தச் சட் டத்தின் எல்லைக்குள் கொண்டு வரப்பட்டன.

மாநிலத்தில் கைது செய்யப் பட்டுள்ள 1,268 பேரில் 62 பேர் பட்டதாரிகளாகளாகவும் முது நிலைப் பட்டதாரிகளாகவும் உள்ளனர். சந்தேகத்திற்குரிய ஒருவரை கைது செய்வதற்கான உத்தரவு மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியராலும், மாநகர்களில் காவல் துறை ஆணையர்களாலும் பிறப்பிக் கப்படுகின்றன.

சந்தேகத்திற்கு உரிய ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கொடியக் குற்றங்களில் ஈடு பட்டு, அவரின் சுதந்திரமான நடமாட்டம் பொது அமை திக்குப் பாதிப்பை ஏற்படுத்தி னால் இந்தச் சட்டம் பயன் படுத்தப்படுகிறது.
இந்த கைது மூலம் ஓராண்டு காலத்திற்கு சிறை யில் அடைக்கப்படுவதாக அறி விக்கப்பட்டாலும் ஆலோ சனைக் குழுவின் மூலம் அவர்களில் பெரும்பாலோர் முன் கூட்டியே விடுவிக்கப் பட்டு விடுகின்றனர்.
எனினும் 481 கைதிகள் ஓராண்டு காலத்தை நிறைவு செய்துவிட்ட போதிலும் முந் திய ஆண்டில் கைது செய்யப் பட்டவர்கள் உள்பட 1,799 பேர் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டுள்ளனர்" என்று காவல்துறை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

எனினும், இந்த கைது நடவடிக்கை மனித உரிமை ஆர்வலர்களால், காவல்துறை யினர் சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்துவதாக விமர்சிக் கப்படுகிறது. ஆலோசனைக் குழுவால் பெரும்பாலும் முன் கூட்டியே விடுதலை செய்யப் படுவது, நடைமுறை வழக்கப் படியே மேற்கொள்ளப்படு கிறது.

தேசிய குற்றப்பதிவு ஆவ ணக் காப்பகம் வெளியிட்டுள்ள புள்ளி விபரங்களின்படி, இளம் குற்றவாளிகளுக்கான சீர்திருத்தப்பள்ளிகளில் அடைக் கப்பட்டுள்ள 816 பேரில், 510 பேர் தமிழ்நாட்டில் அடைக்கப் பட்டுள்ளனர்.
இவ்வாறு  செய்தியில் தெரி வித்துள்ளது..
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner