தாம்பரத்தில் டிசம்பருக்குள் ரயில் முனையம் மேலாளர் தகவல்
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தாம்பரத்தில் டிசம்பருக்குள்
ரயில் முனையம்
மேலாளர் தகவல்

சென்னை, அக். 29- தாம்பரம் ரயில் நிலையத்தில் 3-ஆவது ரயில் முனையம் டிசம்பர் இறு திக்குள் செயல்படத் தொடங் கும் என்று தெற்கு ரயில்வே பொது மேலாளர் வசிஷ்ட ஜோரி தெரிவித்தார்.

சென்னையில் எழும்பூர், சென்ட்ரல் ஆகிய இரு ரயில் முனையங்கள் செயல்பட்டு வரும் நிலையில், ரூ.35 கோடி யில் தாம்பரம் ரயில் நிலையத் தில் 3-ஆவது ரயில் முனையம் அமைக்கும் பணிகள் தொடங் கப்பட்டன.

இந்த நிலையில், மின் கம் பிகள் இணைப்பு, ரயில் பெட் டிகளை சிரமமில்லாமல் கொண்டு செல்ல துணை பாதைகளுக்கான தண்டவாளங்கள், துணை மின் நிலையம், குடிநீர் இணைப்பு உள்ளிட்ட பணிகள் நடை பெற்றுவருகின்றன.
இவற்றை வசிஷ்ட ஜோரி, கோட்ட மேலாளர் அனுபம் சர்மா உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்.

அப்போது, வசிஷ்ட ஜோரி கூறியதாவது:-

பெரும்பாலான பணிகள் நிறைவு பெறும் நிலையில் உள்ளன. பருவ மழை காரண மாக தேக்கநிலை ஏற்படாமல் பணிகள் விரைவில் நிறைவேற் றப்பட்டு, டிசம்பர் இறுதிக்குள் செயல்படத் தொடங்கும்.

மழைக் காலத்தில் தாம்பரம் ரயில் நிலையத்தில் தண்டவா ளங்கள் மூழ்காமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப் படும் என்றார்..
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner