தஞ்சாவூர் இடைத்தேர்தல்: திராவிடர் கழக பொறுப்பாளர்களை சந்தித்து ஆதரவு திரட்டினார் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தஞ்சாவூர், அக்.28 தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நவம்பர் 19ஆம் தேதி நடைபெற இருக்கின்றதை முன்னிட்டு தஞ்சாவூர் பகுதி அனைத்துக் கட்சி பிரமுகர் களையும் திருச்சி மாவட்ட திமுக செயலா ளரும் முன்னாள் அமைச்சருமான கே.என். நேரு அவர்கள் தலைமையில் திமுக பொறுப் பாளர்கள் சந்தித்து வருகின்றனர்.

27.10.2016 அன்று 12 மணியளவில் தஞ்சாவூர் திராவிடர் கழக பொறுப்பாளர்களை சந்தித்து ஆதரவு திரட்டினர்.

தஞ்சை மாவட்டத் தலைவர் சி.அமர்சிங், கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார், தலைமைச் செயற்குழு உறுப்பினர் இரா.குண சேகரன் ஆகியோருக்கு முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு சால்வை அணிவித்து சிறப்பு செய்தார்.

முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு அவர் களுக்கு கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார், மாவட்டத் தலைவர் சி.அமர் சிங், தலைமைச் செயற்குழு உறுப்பினர் இரா.குணசேகரன், மண்டலத் தலைவர் ஜெயராமன், மண்டல செயலாளர் மு.அய் யனார் ஆகியோர் சால்வை அணிவித்து சிறப்பு செய்தனர்.

நிகழ்வில் தஞ்சை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் திருவையாறு சட்டமன்ற உறுப் பினர் துரை.சந்திரசேகரன், திருச்சி மாவட்ட (வடக்கு) செயலாளர் காடுவெட்டி தியாக ராசன், திருச்சி மாநகர திமுக செயலாளர் அன்பழகன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் து.செல்வம், தஞ்சை மாநகர திமுக செயலாளர் டி.கே.சி.நீலமேகம், முன் னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.டி.மகேஷ் கிருஷ்ணசாமி, முன்னாள் நகர்மன்ற தலைவர் இறைவன், மாநில மகளிரணி செயலாளர் அ.கலைச்செல்வி, கழகப் பேச்சாளர் பூவை. புலிகேசி, மாநகரத் தலைவர் வ.ஸ்டாலின், மாநகர செயலாளர் சு.முருகேசன், மாநகர அமைப்பாளர் வெ.ரவிக்குமார், மாநகர துணைத் தலைவர் டேவிட், மாநகர இணைச் செயலாளர் நரேந்திரன், மாவட்ட அமைப் பாளர் ப.தேசிங்கு, மாநகர துணைச் செயலாளர் பழக்கடை கணேசன், மாநகர இளைஞரணி துணைத் தலைவர் அ.பெரியார்செல்வன், இரா.மோகன்தாஸ், சவுந்தர்ராசன், பெரியார் பெருந்தொண்டர் இராமலிங்கம், நெல்லுப் பட்டு இராமலிங்கம் உள்ளிட்ட ஏராளமான கழகத் தோழர்கள் கலந்து கொண்டு சிறப் பித்தனர்.

தஞ்சாவூர் தொகுதியில் திமுக வேட்பாளர் டாக்டர் அஞ்சுகம் பூபதி அவர்களை வெற்றி பெறச் செய்ய தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் கட்டளைப்படி முழு மூச்சுடன் உழைப்போம் என உறுதியளிக்கப் பட்டது.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner