பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் நடத்திய சமூகப் பணித்துறை மாணவர்களின் பழங்குடி மக்கள் வாழ்வியல் ஆய்வு முகாம்
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் நடத்திய
சமூகப் பணித்துறை மாணவர்களின்
பழங்குடி மக்கள் வாழ்வியல் ஆய்வு முகாம்

தஞ்சாவூர், அக்.27 தஞ்சாவூர் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் ஊரக வளர்ச்சி உயராய்வு மய்யம் மற்றும் சமூகப்பணித்துறை சார்பில் நடத்தப்பட்ட பழங்குடியினர் வாழ்வியல் ஆய்வு முகாம் 18.10.2016 முதல் 22.10.2016 வரை நீலகிரியின் மலையில் நடைபெற்றது.

முதல்நாள்

முகாமின் முதல் நாள் “வனமும் வள மும்” என்ற தலைப்பில் துவங்கப்பட்டது. இந்த முகாமிற்கு சிறப்பு விருந்தினராக திராவிடர்கழக பொருளாளர் மற்றும் நீலகிரி மாவட்டத்தின் தமிழ்நாடு மருத்துவ துறையின் முன்னாள் இணை இயக்கு நருமான மருத்துவர்  பிறைநுதல் செல்வி, அவர்கள் மரக்கன்றுகள் நட்டு முகாமை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். அவர்தம் உரையில்:

நீலமலையின் வரலாறு பற்றியும் காடுகளின் முக்கியத்துவத்தையும், தற் போது உள்ள இயற்கை சூழ்நிலையையும் எடுத்துரைத்தார். அவரை தொடர்ந்து கோத்தகிரி அய்லண்ட்  அறக்கட்டளையின் செயலாளர் அல்போன்ஸ்ராஜ் பருவநிலை மாற்றம் குறித்தும் உலக வெப்ப மயமாகு தலுக்கு காடுகளின் அழிவே காரணம் என்றும் இயற்கையை பாதுகாத்து வனங் களை வளப்படுத்துவதன் மூலம் வளமான வாழ்வை மேம்படுத்தலாம் என்றும் எடுத் துரைத்தார்.

இதனைத் தொடர்ந்து பள்ளி யில் பயின்று வரும் மாணவ, மாணவி யர்க்கு தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ளும் முறைகள் பற்றியும் கல்வியின் முக்கியத்துவம் பற்றியும் முனைவர் ஆனந்த் ஜெரார்டு செபாஸ்டின் உரையாற்றி னார்.

கிராமமக்கள் முன்னிலையில் வனங் களின் பாதுகாப்பு மற்றும் முக்கியத்துவம் குறித்த கலைநிகழ்ச்சிகள் சமூகப்பணித் துறை மாணவர்களால் நடத்தப்பட்டது.

இரண்டாம் நாள்

மய்யக்கருவான “சுத்தம், சுகாதாரம்- - தூய்மை இந்தியா” என்ற கருவோடு நடூர் பழங்குடி கிராமத்திற்கு சென்று அங்குள்ள கிராமமக்களிடம் இயற்கை விவசாய முறைகள் பற்றியும், இயற்கை உரங்களின் பயன்பாடுகள் பற்றிய விழப்புணர்வினை எடுத்துரைத்தார்.

இவ்விழாவில் தமிழ்நாடு ஆதிவாசி களின் கூட்டமைப்பின் அமைப்பாளர்  ரெங்கநாதன் கலந்து கொண்டு ஆதிவாசி மக்களுக்கான உரிமைகளும் சட்ட ரீதியான பிரச்சினைகள் பற்றியும் விரிவாக எடுத் துரைத்தார்.

கிராமத்தில் சுகாதார பணிகளை சமூகப் பணித்துறை மாணவர்கள் மேற்கொண் டனர்.

மூன்றாம் நாள்

தஞ்சாவூர் சைல்டு லைன் நகர ஒருங் கிணைப்பாளர் ஞானராஜ் சைல்டுலைன் செயல்பாடு மற்றும் குழந்தைகளுக்கான சட்டத்திட்டங்கள் குறித்து தெளிவாக உரையாற்றினார்.

இதை தொடர்ந்து குழந்தைகளின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பில் மிகவும் பங்கு வகிப்பது பெற்றோரா? ஆசிரியரா? சமுதாயமா? ஏன்ற தலைப்பின் கீழ் சிறப்பு பட்டிமன்றம் பள்ளி மாணவ, மாணவி களிடையே நடைபெற்றது. மேலும் வளர்இளம் பருவ மாணவர்களிடையே குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் பாலியல் வன்கொடுமை பற்றி தஞ்சாவூர் சைல்டு லைன் நோடல் நிறுவன இயக் குனர் முனைவர் ஆனந்த் ஜெரார்டு செபாஸ் டின் கருத்துரை வழங்கினார். அதனை தொடர்ந்து ‘கோமல்’ என்ற குறும்படத்தின் மூலமாக நல்லதொடுதல், கெட்டதொடுதல் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

நான்காம் நாள்

மனநலமும் நல்வாழ்வும் என்ற தலைப்பில் வளரிளம் பெண்கள் எதிர் கொள்ளும் பிரச்சினைகள் அதனால் ஏற் டும் மனநல சம்பந்தமான விளைவு களை பற்றி அன்னை நாகம்மையார் குழந்தைகள் இல்லத்தின் மனநல ஆலோசகர் ஹேமலதா கருத்துரை வழங்கினார். அதே சமயம் வளரிளம் ஆண்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் பிரச்சனைகள் பற்றி ஆண்களுக்கான ஆலோசனைகள் மற்றும் கருத்துகளை பல்கலைக்கழக பேராசிரியர் முனைவர் ஆனந்த் ஜெரார்டு அவர்கள் கருத்துரை வழங்கினார்.

அய்ந்தாம் நாள்

விழாவின் சிறப்பு விருந்தினர் சித்தா மற்றும் ஹோமியோபதி மருத்துவர்  ஆஷா அவர்கள் இன்றைய சூழலில் இயற்கை உணவின் முக்கியத்துவத்தையும், இயற் கை மருத்துவத்தின் மகத்துவத்தையும் விரி வாக எடுத்துரைத்தார்.

இந்த விழாவில் சமூகப்பணித்துறை நான்காம் ஆண்டு மாணவர் ஆண்டோ மது  வரவேற்புரை வழங்கியும், நன்றி யுரையை நான்காம் ஆண்டு மாணவர் கலைவாணனும் வழங்கினார்.

இந்த முகாமின் மூலம் 500 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளும், 100 க்கும் மேற் பட்ட பழங்குடி குடும்பங்களும் பெரியார் மணியம்மை பல்கலைக்கழக சமூகப் பணித்துறை மாணவர்களின் வாயிலாக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச் சிகள் சென்றடைந்தன.

இந்த முகாமின் நிகழ்வுகளை இத் துறையின் ஆராய்ச்சி மாணவர் தொல்.முகிலன் அவர்கள் ஒருங்கிணைத்தார்..
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner