‘ரஷ்ய ராணுவ விமான விபத்துக்கு குண்டு வெடிப்பு காரணம் அல்ல’ : விசாரணைக்குழு தலைவர் தகவல்
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

‘ரஷ்ய ராணுவ விமான விபத்துக்கு குண்டு வெடிப்பு காரணம் அல்ல’ : விசாரணைக்குழு தலைவர் தகவல்

மாஸ்கோ, டிச.30 அண்மையில் ரஷ்ய ராணுவ விமானம் விபத்துக்கு உள்ளான தற்கு குண்டு வெடிப்பு காரணம் அல்ல என்று அது குறித்து விசாரிக்க அமைக்கப் பட்டுள்ள குழுவின் தலைவர் வியாழக் கிழமை தெரிவித்தார்.

ரஷ்ய விமானப் படை பாதுகாப்புக் கண்காணிப்புக் குழுவின் தலைவரும் விபத்து விசாரணைக் குழுவின் தலை வருமான செர்கேய் பைனடோவ் செய்தி யாளர்களிடம் கூறியதாவது:

விபத்துக்குள்ளான விமானத்தில் குண்டு வெடிப்பு போன்ற எதுவும் நிகழவில்லை என்பது உறுதியாகியுள்ளது. அந்த விபத்துக்கு குண்டு வெடிப்பு காரணம் இல்லை என்பதை உறுதியாகக் கூற முடியும். ஆனால் குண்டு வெடிப்பு மூலம்தான் பயங்கரவாத சம்பவம் நிகழும் என்று கூற முடியாது. எனவே முழுமை யான விசாரணை அறிக்கை வரும் வரை எந்த முடிவுக்கும் வர இயலாது. விசாரணை அறிக்கை வெளியாக ஒரு மாத காலம் ஆகலாம் என்றார்.

முன்னதாக, ரஷ்ய போக்குவரத்துத் துறை அமைச்சர் மாக்ஸிம் சொகோலோவ் கூறியதாவது: இதுவரை நடைபெற்ற விசாரணையின் அடிப்படையில், அந்த விமானம் அல்லது என்ஜின் இயல்பு நிலையில் செயல்படவில்லை என்பது தெரிகிறது. ஆனால் நாம் எந்த அவசர முடிவுக்கும் வந்துவிட முடியாது. செய்தி யாளர்கள் எச்சரிக்கையுடன் தகவல்களை வெளியிட வேண்டும் என்றார்..
 

இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner