அதிக தெளிவான நிழற்படங்களை எடுக்க 2 செயற்கைக் கோள்களை அனுப்பியது சீனா
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

அதிக தெளிவான நிழற்படங்களை எடுக்க
2 செயற்கைக் கோள்களை அனுப்பியது சீனா

பீஜிங், டிச.29 அதிக தெளிவான நிழற்படங்களை எடுக்க உதவும் 2 தொலை உணர்வு செயற்கைக் கோள்களை சீனா புதன்கிழமை வெற்றிகரமாக விண்வெளிக்கு செலுத்தியது.

இதுகுறித்து சீன அரசு செய்தி நிறுவனமான ஸின்ஹாவ் புதன் கிழமை வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:

ஷான்ஸி மாகாணத்தில் உள்ள டையூவான் செயற்கைக் கோள் செலுத்தும் மய்யத்திலி ருந்து புதன்கிழமை காலை 11.23 (பெய்ஜிங் நேரப்படி) மணிக்கு “லாங் மார்ச் 2டி’ ஏவுகணை மூலம் 2 தொலை உணர்வு செயற் கைக் கோள்கள் வெற்றிகரமாக விண்வெளிக்கு செலுத்தப்பட் டன.

இந்தச் செயற்கைக்கோள்கள் அதிக தெளிவான (0.5 மீட்டர் தெளிவில்) நிழற்படங்களை விண்ணிலிருந்து எடுத்து அனுப் பும் திறன் வாய்ந்தது என்று அந்தச் செய்தியில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

முன்னதாக, சீன அரசு செவ் வாய்க்கிழமை வெள்ளை அறிக் கை ஒன்றை வெளியிட்டது. அதில், “உலகத்தில் ஓரிடத்தை துல்லியமாக வானில் இருந்து அறிய உதவும் 35 செயற்கைக் கோள்களை 2020-ஆம் ஆண்டுக்குள் செலுத்த திட்டமிடப்பட்டு வருகிறது.

நிலவில் ஆய்வு மேற்கொள்ள லூனார் ப்ரோப் கருவியை 2018-ஆம் ஆண்டு சீனா செலுத்தும். இதைத் தவிர, விண்வெளிக்கு மனிதர்களை அனுப்புவது, நிரந் தர விண்வெளி மையம் அமைப் பது, செவ்வாய் கிரகத்தை அடை வது போன்ற திட்டங்களும் உள்ளன என்று அந்த அறிக் கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது..
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner