500 கிலோ உடல் எடையைக் குறைக்க இந்தியா வரும் எகிப்து பெண்
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

500 கிலோ உடல் எடையைக் குறைக்க
இந்தியா வரும் எகிப்து பெண்

கெய்ரோ, டிச. 11- எகிப்தைச் சேர்ந்த 36 வயதுப் பெண் எமான் அகமது ஆப்த் ஆட்டி. இவரது உடல் 500 கிலோ எடை உள்ளது.
இதனால் அவரால் அன்றா டப் பணிகளை செய்ய முடிய வில்லை. எழுந்து நிற்க முடியா மலும், நடக்க முடியாமலும் அவதிப்படும் அவர் படுத்த படுக்கையாகவே இருக்கிறார்.

உடல் எடையைக் குறைக்க பல்வேறு கிசிச்சை மேற்கொண் டும் பலனில்லை. இந்த நிலை யில் இந்தியாவில் மும்பை மருத்துவர் முபஷல் லக்தா வாலா என்பவரிடம் அதிநவீன அறுவை சிகிச்சை மூலம் உடல் எடையைக் குறைக்க முடிவு செய்தார்.

அதற்காக அனுமதி கேட்டு கெய்ரோவில் உள்ள இந்திய தூதரகத்தில் விண்ணப்பித்தார். ஆனால் அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. அதை தொடர்ந்து சிறுநீரக மாற்று சிகிச்சைக்காக மருத்துவமனை யில் இருக்கும் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவரா ஜுக்கு எமானின் மருத்துவர் டுவிட்டரில் கடிதம் எழுதி யுள்ளார்.

அதில், எமானின் உயிரைக் காப்பாற்ற அவரது அறுவை சிகிச்சைக்காக இந்தியா வர உதவுமாறு கோரிக்கை விடுத் துள்ளார். அவரது கோரிக்கை ஏற்கப்பட்டால் உடல் எடை யைக் குறைக்கும் அறுவை சிகிச்சைக்காக அவர் கெய்ரோ வழியாக மும்பை வருவார்..
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner