பொதுமக்கள் ஒப்புதலுடன் இலங்கையில் புதிய அரசமைப்புச் சட்டம்
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பொதுமக்கள் ஒப்புதலுடன்  
இலங்கையில் புதிய அரசமைப்புச் சட்டம்

கொழும்பு, நவ.20 “அனைத்து அரசியல் கட்சிகளுடன் ஆலோசித்த பிறகே புதிய அரசமைப்புச் சட்டம் கொண்டுவரப்படும்; அந்தச் சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்க பொதுமக்களுக்கு வாய்ப்பளிக்கப் படும்‘’ என்று இலங்கை பிரதமர் ரணில் விக்கிரம சிங்கே, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நேற்று (சனிக்கிழமை) உறுதி யளித்தார்.

இலங்கையில் 1978-ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட அரசமைப்புச் சட்டத்துக்கு மாற்றாக புதிய அரசமைப்புச் சட்டம் கொண்டு வரப்படவுள்ளது. அதற்காக, அனைத்துக் கட்சிகளையும் சேர்ந்த உறுப்பினர்களைக் கொண்டு 21 பேர் கொண்ட தேர்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, புதிய அரசமைப்புச் சட்டத்தைக் கொண்டுவருவதற்கான பணிகள் கடந்த ஜனவரியில் தொடங்கப்பட்டன.

அந்தப் புதிய சட்டத்தில், சிறுபான்மை தமிழ்ச் சமூகத்தினருக்கு அரசியல் அங்கீகாரம் வழங்குவதற்கான அம்சங்கள் இடம்பெற வேண்டும் என்று இலங்கை அரசு விரும்புகிறது.

இந்த நிலையில், புதிய அரசமைப்புச் சட்டத்தில் இடம்பெற வுள்ள அம்சங்கள் குறித்து ஆய்வு செய்வதற்கு அமைக்கப்பட்டுள்ள 6 துணைக் குழுக்கள், தங்களது அறிக்கைகளை பிரதமரிடம் அளித்திருந்தன.

அந்த அறிக்கைகளை நாடாளுமன்றத்தில் ரணில் விக்கிரமசிங்கே, சனிக்கிழமை தாக்கல் செய்தார். அப்போது, ரணில் விக்கிரமசிங்கே கூறியதாவது:

புதிய அரசமைப்புச் சட்டம், இன்னமும் இறுதி செய்யப்பட வில்லை. அதில், அதிபரின் நேரடி ஆட்சி முறை வேண்டுமா? வேண்டாமா? என்பது குறித்து முடிவு செய்யப்படவில்லை. புதிய அரசமைப்புச் சட்டம் மக்களின் ஒப்புதலுடன் நிறைவேற்றப்படும் என்றார் ரணில்.
முன்னதாக, புதிய அரசமைப்புச் சட்டத்துக்கு ஒப்புதல் பெறுவதற்கு பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கூறினார். புதிய அரசமைப்புச் சட்டத்தை வடிவமைப்பதில் மக்களின் பங்களிப்பும் இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்..
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner