இந்திய தூதரக இணையதளங்களை காப்பாற்றிய 17 வயது ஜப்பான் சிறுவன்
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

இந்திய தூதரக இணையதளங்களை காப்பாற்றிய 17 வயது ஜப்பான் சிறுவன்

டோக்கியோ, நவ.19 இந்திய தூதரக வலைதளத்தில் இருந்த தொழில்நுட்ப குறைபாடு களை சுட்டிக்காட்டிய 17 வயது ஜப்பான் சிறுவனுக்கு வெளியுறவுத்துறை அமைச் சகம் நன்றி தெரிவித்துள்ளது.

கபூஸ்கய்(17) என்னும் பெயரில் இணையதளங்களில் இயங்கும் 17 வயது ஹேக்கர் சிறுவன் இந்திய தூதரக வலைதளங்களில் இருந்த தொழில்நுட்பக் குறைபாடுகளை வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கு சமீபத்தில் சுட்டிக்காட்டியிருந்தான்.

இதனைப் பார்த்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கபூஸ்கய் அறிவுரையின்படி வலைதளங்களின் பாதுகாப்பு அம்சங் களை மேம்படுத்தியது. மேலும், இதனை சுட்டிக்காட்டிய ஹேக்கர் சிறுவனுக்கு தனது நன்றியையும் கடிதத்தின் மூலமாக தெரிவித்துள்ளது.

இந்திய வெளியுறவுத்துறையின் பாராட்டை தனது டுவிட்டரில் இணைத்துள்ளார் மாணவன் கபூஸ்கய். அதில், “என்னுடைய நோக்கம் ஹேக்கர்களிடமிருந்து வெப்சைட்களை காப்பாற்றுவது மட்டுமே. அதனால் நான் ஒரு ஹேக்கர் என்பதை பொருட்படுத்தவில்லை” என தெரிவித்துள்ளார்.


பாகிஸ்தானில் பணிபுரியும் 100 துருக்கி ஆசிரியர்கள் வெளியேற உத்தரவு

இஸ்லாமாபாத், நவ.19 சர்வதேச பள்ளிகளில் பணிபுரியும் 100 துருக்கி ஆசிரியர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று பாகிஸ்தான் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

துருக்கியில் கடந்த ஜூலை மாதம் ஆட்சியை கவிழ்க்க திடீர் ராணுவ புரட்சி நடைபெற்றது. இந்த புரட்சியை அதிபர் ரிஷப்தாயிப் முறியடித்தார்.

இந்த புரட்சிக்கு அமெரிக்காவில் வசித்து வரும் மதகுரு பெதுலாகுலான் தான் காரணம் என்று அதிபர் ரிஷப்தாயிப் குற்றம் சாட்டினார். இவரது ஆதரவாளர்கள் நடத்தும் சர்வதேச பள்ளிகள் பல பாகிஸ்தானில் செயல்பட்டு வருகின்றன. இங்கு துருக்கியை சேர்ந்த ஆசிரியர்கள் பணியாற்றி வருகிறார்கள். அவர்கள் துருக்கிக்கு எதிராக செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த நிலையில் துருக்கி அதிபர் ரிஷப்தாயிப் பாகிஸ்தானில் 2 நாள் சுற்றுப்பயணமாக வந்துள்ளார். அவர் பிரதமர் நவாஸ்செரீப்பை சந்தித்து பேசினார். அப்போது பாகிஸ்தானில் செயல்படும் அந்த பள்ளி ஆசிரியர்கள் தொடர்பாக நவாஸ்செரீப்பிடம் பேசியதாக தெரிகிறது.

இதையடுத்து இந்த பள்ளிகளில் பணிபுரியும் 100 துருக்கி ஆசிரியர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று பாகிஸ்தான் அரசு உடனடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது..
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner