இத்தாலி அருகே கடலில் தவித்த 2,200 புலம்பெயர்ந்தோர் மீட்பு
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

இத்தாலி அருகே கடலில் தவித்த 2,200 புலம்பெயர்ந்தோர் மீட்பு

ரோம், நவ.7 மத்திய தரைக்கடல் வழியாக ரப்பர் படகுகள் மூலம் அய்ரோப்பாவுக்குள் ஊடுருவ முயன்ற 2,200 பேரை மீட்டுள்ள இத்தாலிய கடலோரக் காவல் படையினர், பத்து  உடல்களையும் கண்டெடுத்துள்ளனர்.

உள்நாட்டுப் போரால் நிலைகுலைந்துள்ள ஈராக், சிரியா, லிபியா, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்தும், வறுமையால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்பிரிக்க நாடுகளில் இருந்தும் தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் அய்ரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர்.

பல்வேறு நாடுகளுக்கு கடல் கடந்து செல்லும் இந்த அகதிகள், ரப்பர் படகுகள் போன்றவற்றில் பாதுகாப்பற்ற முறையில் பயணம் செய்கின்றனர்.

மத்திய தரைக்கடல் வழியாக இவ்வாறு அகதிகளை அளவுக்கு அதிகமாக ஏற்றிச் செல்லும் படகுகள், நடுக்கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி பலத்த உயிர்ச் சேதத்தை ஏற்படுத்தி வருவது தொடர்கதை ஆகி வருகிறது. சமீப காலமாக அய்ரோப்பிய நாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ள மக்களின் எண் ணிக்கை மட்டும் சுமார் 21 லட்சத்தை எட்டியுள்ளது.

இதுதவிர, கடந்த ஆண்டில் மட்டும் இத்தாலி நாட்டுக்கு புகலிடம் தேடி வரும் வழியில் சுமார் அய்யாயிரம் பேர் காணா மல் போனதாகவும், கடலில் மூழ்கி இறந்துவிட்டதாகவும் தெரி கின்றது. இருப்பினும், உள்நாட் டில் பசி, பஞ்சத்தால் பாதிக்கப் பட்டுள்ள லிபியா உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த மக்கள் இன்றும் அடைக் கலம் தேடி அய்ரோப்பிய நாடு களுக்கு அகதிகளாக படை யெடுத்தபடியாகவே உள்ளனர்.

அன்காரா நாட்டு கடல் எல்லை வழியாக கிரீஸ் நாட்டுக் குள் நுழைந்து விடாமல் அங் கிருந்து பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட அய்ரோப்பிய நாடு களுக்கு சென்று அங்கே அகதி களாக குடியேறி விடலாம் என்பது இவர்களின் விருப்பமாக உள்ளது.

இந்நிலையில், நேற்று மட் டும் மத்திய தரைக்கடல் வழியாக 13 ரப்பர் படகுகள், இரு இயந் திரப் படகுகள் மூலம் இத்தாலி நாட்டு கடல் எல்லையை கடக்க முயன்ற சுமார் 2200 பேரை இத்தாலி  கடலோரக் காவல் படையினர் மிலன் நகரை ஒட்டியுள்ள கடல்பகுதியில் தடுத்து நிறுத்தி மீட்டுள்ளனர்.

பத்து உடல்களையும் கண் டெடுத்துள்ளனர். இதைப்போன்ற ஆபத்தான கடல் பயணங்களின் மூலம் கடந்த 2015-ஆம் ஆண்டில் பலியானவர்களின் எண்ணிக்கை 3,777 ஆக உள்ள நிலையில், இந்த ஆண்டின் முதல் பத்து மாதங் களில் மட்டும் சுமார் 4200 குடி யேறிகள் மத்திய தரைக்கடல் பகுதியில் மூழ்கி உயிரிழந்துள் ளது, குறிப்பிடத்தக்கது.



.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner