கேளிக்கை மய்யமாகச் செயல்படும் அய்.நா. சபை: டிரம்ப் விமர்சனம்!
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கேளிக்கை மய்யமாகச் செயல்படும் அய்.நா. சபை: டிரம்ப் விமர்சனம்!

வாஷிங்டன், டிச.28 உறுப்பி னர்கள் கூடிக் களிக்கும் கேளிக்கை மய்யமாக அய்.நா. சபை விளங்கு வதாக அமெரிக்க அதிபர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட் டுள்ள டொனால்ட் டிரம்ப் விமர் சித்துள்ளார்.

பாலஸ்தீனத்தின் மேற்குக் கரைப் பகுதியில் யூதக் குடி யிருப்புகளை இஸ்ரேல் அமைத்து வருவதற்குக் கண்டனம் தெரிவித்து அய்.நா. பாதுகாப்புக் கவுன்சில் கடந்த வெள்ளிக்கிழமை தீர்மானம் நிறைவேற்றியது.

இஸ்ரேலுக்கு எதிரான இதுபோன்ற தீர்மானங்களை வழக்கமாக தனது “வீட்டோ’ அதிகாரத்தைக் கொண்டு தோற் கடிக்கும் அமெரிக்கா, இதற்கான வாக்கெடுப்பைப் புறக்கணித்தது.

இதன் காரணமாக அந்தத் தீர்மானம் நிறைவேற அமெரிக்கா மறைமுகமாக உதவியது.

ஒபாமா அரசின் இந்த முடி வுக்குக் கண்டனம் தெரிவித்து, சுட்டுரை (டுவிட்டர்) வலைதளத் தில் டொனால்ட் டிரம்ப்
கூறியதாவது:

அய்.நா. சபையின் மூலம் பல பயனுள்ள காரியங்களை ஆற்ற முடியும். ஆனால் தற்போதுள்ள நிலையில், அந்த அமைப்பின் உறுப்பினர்கள் கூடி, பொழுது போக்கும் கேளிக்கை மய்யமாக மட்டுமே அது செயல்பட்டுக் கொண்டிருப்பது வேதனையளிக் கிறது என்று தனது பதிவில் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கெனவே, அமெரிக்க அதிபராக தான் ஜனவரி மாதம் 20-ஆம் தேதி பதவியேற்ற பிறகு அய்.நா.வின் செயல்பாட்டில் மாற்றங்கள் இருக்கும் என்று டொனால்ட் டிரம்ப் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் அய்.நா. வைப் பற்றிய அவரது விமர்சனம், அந்தக் கூற்றை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக “வாஷிங்டன் போஸ்ட்’ நாளிதழ் தெரிவித்துள்ளது.

தனது புதிய அரசில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நிக்கி ஹேலியை அய்.நா.வுக்கான அமெரிக்கத் தூதராக டொனால்ட் டிரம்ப் தேர்ந்தெடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner