அமெரிக்காவில் பிஜேபி அதிபரா? முஸ்லிம்கள் குடியேறக் கட்டுப்பாடு
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

அமெரிக்காவில் பிஜேபி அதிபரா?
முஸ்லிம்கள் குடியேறக் கட்டுப்பாடு

வாஷிங்டன், டிச.23 அமெரிக் காவில் முஸ்லிம்கள் குடியேறக் கட்டுப்பாடு விதிக்கப்படும் என அமெரிக்க அதிபராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் சூசகமாகத் தெரிவித்துள் ளார்.

துருக்கியில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல் குறித்து ஃபுளோரிடாவில் செய்தியாளர் களிடம் அவர் கூறியதாவது:

அய்ரோப்பாவிலும், துருக்கி யிலும் நடைபெற்ற தாக்குதல்கள் மிகவும் பயங்கரமானவை. அங்கு புலனாய்வு அமைப்புகள் இருந் தும், இத்தகைய தாக்குதல்கள் நடைபெற்றிருப்பது மிகவும் பயங்கரமானது.

இந்தத் தாக்குதல்கள் மனித குலத்தின் மீதானவை. அவமான கரமானவை. இத்தகைய தாக்கு தல்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.
இந்தத் தாக்குதல்கள் குறித்து அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா விடம் நான் இதுவரை பேச வில்லை என்றார்.

இந்தத் தாக்குதல்களுக்குப் பின்னர், முஸ்லிம் பதிவேடு உரு வாக்குதல் அல்லது அமெரிக்கா வில் முஸ்லிம்கள் குடியேறு வதற்குத் தடை விதிப்பது போன்ற உங்களது திட்டங்கள் குறித்து மறு ஆய்வு செய்வீர்களா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு அவர், “எனது திட்டம் குறித்து உங்களுக்குத் தெரியும். (முஸ்லிம்கள் குறித்து) நான் கூறிவருவது 100 சதவீதம் சரி என்பதையே இந்தத் தாக்கு தல்கள் நிரூபிக்கின்றன’ என்றார்.

அமெரிக்காவில் முஸ்லிம்கள் குடியேறக் கட்டுப்பாடு விதிப்பது அல்லது முஸ்லிம் பதிவேடுகளை உருவாக்குவது எனும் திட்டத்தில் டிரம்ப் உறுதியாக இருப்பதாக இந்தப் பேட்டிக்குப் பின்னர் “வாஷிங்டன் போஸ்ட்’ பத்திரி கையில் குறிப்பிடப்பட்டுள்ளது..
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner