நேபாளத்தில் இந்திய புதிய ரூபாய் நோட்டுகளுக்கு தடை
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

நேபாளத்தில் இந்திய புதிய ரூபாய் நோட்டுகளுக்கு தடை

காத்மாண்டு, நவ.25 இந்தியா அறிவிக்கை வெளியிடாததால் நேபாளத்தில் புதிய 500, 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது

நேபாள நாட்டில் மக்கள் இந்திய பணம் ரூ.25 ஆயிரம் வரை வைத்திருக்க அனுமதி உண்டு. இந்தியாவில் இப்போது 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டு புதிய 500 மற்றும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அறிமுகப் படுத்தப்பட்டு உள்ளது. ஆனால் இந்த புதிய ரூபாய் நோட்டு களுக்கு அங்குள்ள நேபாள ராஷ்டிர வங்கி தடை விதித் துள்ளது. அவை அங்கீகாரமற்றது, கள்ளத்தனமானது என்று வங்கி யின் செய்தி தொடர்பாளர் நாரா யண் பவுடெல் கூறியுள்ளார்.

இந்தியா அன்னிய செலா வணி மேலாண்மை சட்டப்படி அறிவிக்கை வெளியிட்டால் தான் அவை நேபாளத்தில் சட்டப் பூர்வமானதாகும் என்றும் அவர் கூறியுள்ளார். பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகளுக்கும் அங்கு கடந்த ஆண்டு வரை தடை விதிக்கப்பட்டு இருந்தது. பிரதமர் மோடி கடந்த ஆண்டு நேபாளத் துக்கு பயணம் சென்ற பின்னரே அந்த தடை விலக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது..
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner