யேமனில் 48 மணி நேர போர் நிறுத்தம்
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

யேமனில் 48 மணி நேர போர் நிறுத்தம்

யேமன், நவ.20 யேமனில் 48 மணி நேர போர் நிறுத்தத்தை சவூதி கூட்டுப் படை அறிவித்தது.

இந்தப் போர் நிறுத்தம் சனிக்கிழமை உள்ளூர் நேரப்படி நண்பகல் 12 மணி முதல் நடை முறைக்கு வரும் என்று தெரிவிக் கப்பட்டது.

இது தொடர்பாக கூட்டுப் படை சார்பில் சவூதி தலைநகர் ரியாதில் வெளியிடப்பட்ட அறிக் கையில் தெரிவிக்கப்பட்டிருப்ப தாவது:

யேமன் அரசுக்கு எதிராக சண்டையிட்டு வரும் கிளர்ச்சி யாளர்களின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு மருந்துகள் உள் ளிட்ட உதவிப் பொருள்களைக் கொண்டு சேர்க்கும் விதமாக 48 மணி நேர சண்டை நிறுத்தத்தை கூட்டுப் படை அறிவிக்கிறது. இது சனிக்கிழமை உள்ளூர் நேரப்படி நண்பகல் 12 மணி முதல் நடைமுறைக்கு வரும்.
கூட்டுப் படை இந்தப் போர் நிறுத்தத்தை எந்த விதத்திலும் மீறாமல் முற்றிலும் கடைப் பிடிக்கும்.

கிளர்ச்சியாளர்கள் தங்கள் தரப்பில் முழுமையாக இந்தப் போர் நிறுத்தத்தை கடைப் பிடித்தால், இதனை மேலும் நீட்டிக்க சவூதி கூட்டுப் படைத் தலைமை தயாராக இருக்கிறது.

ஆனால், கூட்டுப் படையின் சண்டை நிறுத்த அறிவிப்பைத் தவறாகப் பயன்படுத்திக் கொள் ளும் விதத்தில் கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்களில் ஈடுபட்டால், தக்க பதிலடி கொடுக்கப்படும்.

சண்டை நிறுத்த காலத்தில் கூட்டுப் படையின் கண்காணிப்பு விமானங்கள் தொடர்ந்து பறக் கும். கடல் வழியாக எந்த ஆயுதப் படகுகளும் யேமன் கரையை அடைய விட மாட்டோம். எனவே கடல் பகுதி முற்றுகை தொடரும் என்று சவூதி கூட்டுப் படை அறிவித்துள்ளது..
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner