ஆசிய பசுபிக் பொருளாதார மாநாடு தொடங்கவுள்ள பெரு நாட்டில் ஆர்ப்பாட்டம்
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ஆசிய பசுபிக் பொருளாதார மாநாடு
தொடங்கவுள்ள பெரு நாட்டில் ஆர்ப்பாட்டம்

லிமா, நவ.19 ஆசிய பசிபிக் பொருளாதார மாநாடு பெரு நாட்டில் தொடங்க உள்ள நிலையில், அந்நாட்டில் அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் வலு வடைந்துள்ளது.

தென் அமெரிக்க கண்டத்தின் வட மேற்கே பசுபிக் கடலை ஒட்டியுள்ள நாடு பெரு. பெட்ரோ பாப்லோ குசின்ஸ்கி பெரு நாட் டின் அதிபராக உள்ளார்.

பெரு நாட்டின் தலைநகர் லிமாவில் 28-ஆவது ஆசிய பசிபிக் பொருளாதார கூட்டுறவு அமைப்பு உறுப்பு நாடுகளிடை யேயான இரண்டு நாள் கூட்டம் இன்று தொடங்கவுள்ளது.

இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா மற்றும் 20 சர்வதேச நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

இந்நிலையில், சரியாக சம் பளம் வழங்கப்படவில்லை என்று கூறி ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள் லிமா நகரின் வீதிகளில் நேற்று பேரணியாக சென்று அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதேபோல், மீனவர்களும் தங்களால் கடலுக்குள் மீன் பிடிக்க முடியாத நிலை உள்ளதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆசிய பசுபிக் பொருளாதார மாநாடு நடைபெறும் இந்த சூழ் நிலையில் தங்களது கோரிக்கை களை அரசு கவனத்தில் கொள் ளும் என்று போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்கள் தெரிவித் துள்ளனர்..
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner