தூதரக அதிகாரிகள் வெளியேற்றப்பட்ட விவகாரம்: அமெரிக்கா கருத்து
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தூதரக அதிகாரிகள் வெளியேற்றப்பட்ட விவகாரம்: அமெரிக்கா கருத்து

வாஷிங்டன், அக்.29 தூதரக அதிகாரிகளை நாட்டை விட்டு வெளியேறுமாறு இந்தியாவும், பாகிஸ்தானும் பரஸ்பரம் உத்தரவிட்டது குறித்து கருத்து தெரிவித்துள்ள அமெரிக்கா, இந்த விவகாரத்தில்சம்பந்தப்பட்ட நாடுகள்தான் தீர்வு காண வேண்டும் என்று கூறியுள்ளது.

இந்திய ராணுவத் தகவல் களை உளவு பார்த்த பாகிஸ்தான் தூதரக அதிகாரி மெஹமூத் அக்தரை 48 மணி நேரத்துக்குள் நாட்டை விட்டு வெளியேறுமாறு இந்திய அரசு உத்தரவிட்டது. இதற்கு பதில்நடவடிக்கையாக பாகிஸ்தானில் உள்ள இந்தியத் தூதரகத்தில் பணியாற்றி வந்த அதிகாரி சுர்ஜித் சிங்கை அங்கி ருந்து வெளியேறுமாறு அந்நாட்டு அரசு தெரிவித்தது.

பதான்கோட், உரி தாக்குதல் சம்பவங்களைத் தொடர்ந்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீ ருக்குள் அதிரடியாக நுழைந்த இந்திய ராணுவம், அங்கிருந்த பயங்கரவாத முகாம்களை அழித் தொழித்தது.

இதையடுத்து இரு நாடுகளுக் கும் இடையேயான உறவில் விரிசல் அதிகரித்தது.

அய்.நா. சபை உள்ளிட்ட சர்வதேச அரங்குகளில் இந்தி யாவும், பாகிஸ்தானும் மாறி மாறி குற்றம்சாட்டி வந்த நிலை யில், தற்போது தூதரக அதிகாரிகள் மீது இரு நாடுகளும் பரஸ்பரம் நடவடிக்கை எடுத்துள்ளன.

இந்த விவகாரம் குறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி, வாஷிங்டனில் ஊடகங் களிடம் வெள்ளிக்கிழமை கூறிய தாவது:

தூதரக அதிகாரிகளை வெளி யேறுமாறு பிறப்பிக்கப்பட்ட உத்தரவானது இரு நாடுகளின் இறையாண்மை தொடர்பான முடிவு.
இந்த விவகாரத்தை இந்தியா மற்றும் பாகிஸ்தானிடமே விட்டு விடலாம்.

அந்த இரு நாடுகளும் ஆலோ சித்தோ, பேச்சுவார்த்தை நடத்தி யோ அல்லது வேறு சில சுமுக நடவடிக்கைகள் மூலமாக வோ இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும் என்றார் அவர்..
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner