காலாவதியாக்கப்பட முடியாத கருத்து மாத்திரை இதோ!
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மருந்துகளை நாம் எடுத்துக் கொள்ளும் போது, மிகுந்த கவனம் செலுத்தவேண்டிய ஒரு அம்சம், அம் மருந்துகள் காலாவதி ஆகாதவை தானா என்று உறுதி செய்து கொண்டு, பிறகு அதை நம் உட லுக்குள் செலுத்தவேண்டும்.  நுஒயீசைல னயவந என்பதை நாம் வாங்கியுவுடன் இப்போதெல்லாம் ளுவசயீள பட்டை 10 மாத்திரை ஒரு அட்டை என்பது போல் வரும் நிலையில், அது அச்சிடப்பட்ட பகுதியை முதலில் அலட்சியமாகக் கிழித்தெறிந்துவிட்டு, பிறகு அதன் காலாவதியின் தகவல்கள் அறி யாமல் தவிக்கும் நிலையும் ஏற்பட்டு விடுகிறது சிற்சில நேரங்களில். சிறு செய்தி என்றாலும் கவனத்துடன் செயல்படவேண்டிய செய்தி அல்லவா?

காலாவதியாகும் நிலை வாழ்க் கையில் பலவற்றிற்கும் உண்டு.

ஏன் நட்புகள், காதல் உறவுகள், வாழ்க்கைப் பயணங்கள் கூட பலவும் காலாவதியாகிவிட்டு, அதிலிருந்து விடுதலை தேடி அலையும் நிலை, உயிருக்குயிராய் பழகியவர்களிடையேகூட உருவாகி விடுகின்றதே! வாழ்க்கையில் நாமறிந்தவரை - காலாவதி ஆகாத நிலை இரண்டே இரண்டிற்குத்தான் உண்டு.

ஒன்று இன்பம் மற்றொன்று துன்பம்.

இவை இரண்டும் நம் வாழ்வில் மாறிமாறி வந்து கொண்டே இருப்பவை. இவைகளுக்கு காலாவதி முத்திரை பதிக்கவே முடியாது!   எவ்வளவு வசதி, வாய்ப்புப் பெற்றவர் வாழ்விலும் இன்பமும் துன்பமும் ஏன் நம்மைப் பாடாய்ப்படுத்துகின்றன என்று அங்கலாய்த்துக் கொள்பவர்கள் பலர் உள்ளனர்!

இன்பத்தின் நுகர்வை மனிதர்கள் எப்போது சிறப்பாக அனுபவிக்க முடியும்?

துன்பத்தினைத் தொடர்ந்து அதனை ஏற்று, அதற்குத் தக்க விடை கொடுத்து, இன்பத்தினைத் துய்க்கும் நிலையில் தானே, இன்பம் கூட சுவைக்கும்?

சிலருக்கு வாழ்நாள் முழுவதும் துன்பத் தால் சலிப்பு, விரக்தி அப்படியே  மூழ்கி விட்டதால் அவர்களால் இன்பம் என்று ஒன்று இருக்கிறது என்பதே கூட மறந்து விடுகிறது!

துன்பத்தால் காய்ச்சி அடித்துப் பதப்படுத்தப்பட்டவர்கள் தான், பிறகு வாழ்க்கையில் எந்த சோதனைகளையும் எதிர் கொள்ளும் இயல்பைப் பெறமுடியும்!

தந்தை பெரியார் அவர்கள் பொதுக் கூட்டங்களில் கூறுவார்கள்; வாழ்க வாழ்க என்று என்னைப் பார்த்து சில தோழர்கள் கூறும்போதோ, அல்லது நானே வெட்கப்படக் கூடிய அளவுக்குப் புகழுரைகளைக் கூறுவதைக் கேட்டு நான் மிகப் பெரிய மகிழ்ச்சியையோ, இன் பத்தையோ வரவழைத்து அனுபவிக்க மாட்டேன்; காரணம் சொன்னவர்கள் மீதுள்ள வருத்தமோ, அவநம்பிக்கையோ அல்ல. பின்னே என்னவென்றால் என்னை வாழ்க என்று சொல்பவர்களை விட ஒழிக இவன் நாசமாகப் போக மாட்டானா என்று சபிப்பவர்கள் பலர் உண்டே! அதற்காக நான் எவ்வளவு வருத்தப்பட்டு அழ வேண்டும். என் பணி நடக்குமா? எனவேதான் எனக்கு வாழ்க கோஷத்தாலும் மகிழ்ச்சி இல்லை; ஒழிக கோஷத்தாலும் நான் ஒதுங்கிவிடமாட்டேன்.

இரண்டையும் நான் அலட்சியப் படுத்தி, என் பணியில் எனக்கென்ற ஈடுபாட்டினால் எல்லையற்ற இன்பம் பெறுகிறேன். அது கூட பொது நலத் திற்காக என்று கூடச் செய்ய மாட்டேன். என் சுயநலத்திற்காகவே - எனக்கு அதுதானே எதிலும் பெற முடியாத இன்பத்தைத் தருகிறது? என்பார்கள்.

எவ்வளவு அடக்கம்!

எத்தகைய மிகப் பெரிய பாடம்!

காலாவதி ஆக்கப்பட முடியாத கருத்து மாத்திரை அல்லவா இது?.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner