துன்பம் என்னும் பேராசானிடம் படிப்போம்!
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

நல்லாசிரியர்கள்கூட பலவகை உண்டு; காரணம் மனித சுபாவம் என்பது மனிதருக்கு மனிதர் மாற்ற மானதுதானே! ஒவ்வொரு மனிதனுக்கும் உள்ள மூளையின் அளவு - எடை ஒரே மாதிரிதான் என்றாலும், சிந்திக்கும் தன்மை  ஒத்த வயதுள்ளவர்களிடையே கூட ஒரே மாதிரி இருப்பதில்லையே! சுபாவம் என்பதன் விளைவு.

எவ்வளவு பெரிய துயரத்தைச் சந்தித்தாலும் ஒரு சொட்டு கண்ணீர் கூட விடாது மனக்கட்டுப்பாட்டை பயிற்சியாக்கிக் கொண்ட மனிதர் களையும் பார்க்கிறோம். ஒன்றுமில் லாமல் ஒரு சிறிய காயம், சில துளி இரத்தம் சொட்டுவதைக்கூட பார்த்து சகிக்காது; ஓ வென்று கதறி அழுது புலம்பி, கண்ணீர்க் கடலையே பொங் கவிட்டு தங்கள் துயர அனுபவங்களால் உலகைக் கூட்டி விடுவோரையும் காண்கிறோம்.

காரணம், மனங்கள் வேறுபடு கின்றன. அதற்கேற்ப அவரவர் குணங் களும் மாறுபடுகின்றன!

துன்பங்கள் என்பவை முக்கியமாக இரு வகை; எதிர்பார்த்த துன்பங்கள், எதிர்பாராது திடீரென்று நம்மைத் தாக்கும் இடி, மின்னல் போல வந்து நம்மை அதிர்ச்சிக்கும், துயரத்துக்கும் ஆளாக்கும் ஏவுகணை துன்பம்! மற்றொரு வகை.

எப்படியிருந்த போதிலும் துன்பம் என்பது ஒரு கண்டிப்பு நிறைந்த பேராசான் ஆகும்! கண்டிப்பு என்பது துவக்கத்தில் கசப்பு; பிறகோ நிரந்தர இனிப்பு!

அண்மையில் ஒரு நூலைப் படித்தேன். ரெய்னர் மரியார ரில்கேயின் அந்தப் பொன்மொழி போன்ற அறிவுரை மிகவும் சிறந்த பாடமாக நமக்கெல்லோருக்குமே அமையும் என்பது உறுதி!

... உங்கள் உள்ளத்தில் தீர்வின்றி இருக்கும் அனைத்தின்மீதும் பொறுமை யுடன் இருங்கள்.
பூட்டிய அறைகள் போலவும், அன்னிய மொழி நூல்கள் போலவும், உங்களுக்குள் எழும் கேள்விகளை நேசிக்க முயற்சி யுங்கள். உடனுக்குடன் (ரெடிமேட்) விடைகளைத் தேடாதீர்!

விடை உங்களுக்குக் கிடைக்காமல் இருப்பதற்குக் காரணம் அதற்கேற்றாற் போல் உங்களால் வாழ முடியாது என்பதாலேயே!

அப்பொழுதுதான் அந்த வினாவின் ஆழத்தைப் புரிந்து வாழ்ந்து அனுபவிக்க வேண்டும்.

இனி எதிர்காலத்தில், ஒரு வேளை உங்களை அறியாமலேயே நீங்கள் அந்த விடைகளைக் கண்டு அனுபவித்து பயன் பெறக்கூடியவர்களாகவும் இருக்கக் கூடும்!

எனவே தான் வள்ளுவர் ஒரு குறளில் பொதுத் தொண்டு செய்பவர்களுக்கு மட்டுமல்ல, தனி வாழ்க்கையில் அறநெறி யாளர்களாக, மனத் தூய்மையாளர்களாக உள்ளவர்களுக்கு அறிஞர் அண்ணா சொன்னதைப் போல கையில் காசில்லாத வர்களாயினும் மனதில் மாசில்லாதவர் களாக வாழும் நண்பர்கள் அமைதி யுடன் எவ்வகை துன்பங்கள் தொடர்ந்து கொட்டினாலும் அதன் வலியைப் பொருட்படுத்தாது, வளர முடியும். வாழ முடியும்.

துணிந்து இன்பம் (பொது மக் களுக்கு - பிறருக்கு - தன்னைத் தவிர மற்றையோருக்கு) பயக்கும் வினை செய்து மகிழும் மாந்தர்களாக மானுட வாழ்வை அமைப்பதே அறிவார் தொழில்!

இந்த சிறந்த பண்பு நலனை நாம் வளர்த்துக் கொள்ள நமக்கு  அவ்வப் போது கிடைக்கும் பேராசான்தான் துன்பம் என்பது.

துவண்டு விடாமல் சற்று வளைந்து, பிறகு நிமிர்தலில்தான் நம் அறிவும், ஆற்றலும் நம் பயனுறு விளைச்சலைக் கொண்டு சேர்க்கும்!

இருட்டு வந்த பிறகுதானே வெளிச் சத்தின் பெருமை விளங்குகிறது - அதுபோல!.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner