ராஜகுருவா சோ ராமசாமி?
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மின்சாரம்

2011 சட்டப் பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்ற அ.இ.அ.தி.மு.க. செல்வி ஜெயலலிதா தலைமையில் ஆட்சி அமைத்தது. அமைச்சரவைக்கு ஆளுநர் சுர்ஜித்சிங் பர்னாலா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். (16.5.2011)

இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப் பினர்கள், பல்வேறு கட்சிகளின் தலை வர்கள், அதிகாரிகள், பிரமுகர்கள் பங்கேற் றனர்.

முதல் வரிசையில் துக்ளக் ஆசிரியர் திருவாளர் சோ ராமசாமி அமர்ந்து கொண்டு செய்த அட்டகாசங்கள் சாதாரண மானவையல்ல.  லூட்டி அடித்தார் என்றே கூறவேண்டும். அட்டாணிக் கால் போட்டுக் கொண்டு,அடிக்கடி கைகளைத் தட்டிக் கொண்டு, அட்டகாசமாகச் சிரித்துக் கொண்டு ஒரேயடியாகத்தான் கும்மாளம் போட்டார்.

தொலைக்காட்சியில் இதனைப் பொதுமக்கள் பார்த்துக் கொண்டுதான் இருந்தனர்.

செல்வி ஜெயலலிதா தலைமையில் அமைந்துள்ள அ.இ.அ.தி.மு.க. ஆட்சிக்குத் தான்தான் சூத்திரதாரி என்பது போலவும், தான்தான் ராஜகுரு என்பது போலவும் காட்டிக் கொண்டார். மக்களை நம்ப வைக்க இப்படி ஒரு ஏற்பாட்டைத் தனக்குத் தானே செய்து கொண்டு, திட்டமிட்ட வகையில் தான் அப்படி நடந்து கொண்டார் என்றே தெரிகிறது.

1971 ஆம் ஆண்டு தேர்தலில் தி.மு.க. 184 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில், இதே பல்கலைக் கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில்தான் அமைச்சரவை பதவி ஏற்றது. (15.3.1971).

ஒருவர்கூட ஆண்டவன் பெயரால் உறுதிமொழி ஏற்கவில்லை.

அந்த நிகழ்ச்சியிலேயே தந்தை பெரியார் அவர்கள் சிறப்பாக அழைக்கப்பட்டு, முதல் அமைச்சர் கலைஞர் முதல் அத்தனை அமைச்சர்களும் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டு ஒவ்வொருவரும் தந்தை பெரியார் அவர்களின் அருகில் வந்து  வணக்கம் தெரிவித்த காட்சியெல் லாம் மனக் கண் முன் நிழலாடுகிறது.

அப்பொழுது கனம் ராஜாஜி அவர்கள் இவ்வாறு எழுதினார். மதம், சம்பிரதாயக் கட்டுப்பாடுகள், தெய்வ பக்தி இவற்றின் முழு எதிரி என்று தம்மை முழு மூச்சுடன் பகிரங்கப்படுத்திக் கொள்பவரின் ஆசியும்.

அனுக்கிரகமும் பெற்றுப் பதவிப் பிரமாணம் செய்து கொண்டிருக்கிறது (கல்கி 4.4.1971) தமிழக மந்திரி சபை என்று ஆத்திரம் அடைக்க எழுதினார் ஆச்சாரியார் ராஜாஜி.

அந்த நிலை எங்கே? இந்த நிலை எங்கே?

முதல் அமைச்சர் ஜெயலலிதாவைச் சுற்றி ஒரு பார்ப்பன ஒளிவட்டம் என்னும் தோற்றத்தை உருவாக்குவார்

சோ-.- இவர் நெஞ்சம் என்பது பூணூல் மஞ்சம் என்பது  அனைவருக்கும் தெரியும்.

ஜெயலலிதா அவர்கள் கூட தனிப்பட்ட எந்த ஒருவர் வீட்டுக்கும் செல்வது கிடையாது -_ சோ ராமசாமி வீட்டைத் தவிர. இந்த அந்நியோன்னியத்தைக் கூட தம் இனத்துக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளப் பார்ப்பார் சோ.

மக்கள் ஆதரவு என்றால் ஜாதி ரீதியான வலை வீச்சு என்று கலைஞரைக் குற்றம் சாற்றி இவ்வார துக்ளக்கில்  (25_-5_-2011) தலை யங்கம் தீட்டியுள்ளார். அதே நேரத்தில் செல்வி ஜெயலலிதா அவர்கள் ஏன் சீரங்கம் தொகுதியைத் தேர்ந்தெடுத்தார் என்பது பற்றி எழுத வேண்டியது தானே?

சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ் வதிக்குக் கையாளாக இருந்து, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களைப் பேட்டி கண்டார். சங்கராச்சாரியார் கேட்கச் சொன்ன கேள்விகளையெல்லாம் ஆசிரியர் வீரமணி அவர்களிடம் கேட்டவர் இந்த சோ. எம்.ஜி.ஆருக்குக் கையாளாக இருந்து அ.தி.மு.க. பொருளாளராக இருந்த  சவுந்தர பாண்டியன்பற்றி உளவு பார்த்தார். எவ்வளவு பெரிய பார்ப்பன வெறியர் இவர் என்பதற்கு இதோ ஓர் உதாரணம்.

கேள்வி: சட்டசபையில் அ.தி.மு.க.வைச் சேர்ந்த ஓ.பன்னீர்செல்வம் பிராமண பாஷையில் பேசுவது யாரைக் கிண்டல் செய்ய?

சோவின் பதில்: தெரியவில்லை. இதையே தி.மு.க.வினர் யாராவது செய்திருந் தால் கடுமையாகக் கண்டித்திருப்பேன். இப்பொழுது ஏன் இப்படிச் செய்தார்? என்ற கேள்விதான் என் மனதில் எழுகிறது. விடை தெரியவில்லை.

(துக்ளக் 22_-7_-2009 பக்கம் 14)

இதற்கு விளக்கம் தேவையா? இங்குப் பேசுவது குமுறுவது சோவின் பூணூல் தானே!

தமிழர்களின் கல்விக் கண்ணில் மண்ணை அள்ளிப் போடுவதில் முதல் ஆளாக இருக்கக் கூடியவர்தான் இந்த சோ. அதனால்தான் 1952 இல் ஆச்சாரியார் கொண்டு வந்த குலக்கல்வித் திட்டத்தை - அரை நேரம் படித்தால் போதும், அரை நேரம் அப்பன் தொழிலைச் செய்ய வேண்டும் என்ற மனுதர்மத் திட்டத்தை இப்பொழுதும் ஆதரித்து எழுதுகிறார் என்றால் தெரிந்து கொள்ளலாமே.

(துக்ளக் 15-7-1988)

எதற்காக செல்விஜெயலலிதா அவர் களை இவர் ஆதரிக்கிறார்? ஜெயலலிதா பற்றி சோவின் கணிப்பு என்ன?

திராவிடப் பாரம்பரியம் என்றால் என்ன பொருள் என்பது, அந்தப் பாரம்பரியத்தினர் வெளிப்படையாக நம்பாத தெய்வத் திற்குத்தான் வெளிச்சம். அப்படி ஒரு விளக்க முடியாத பாரம்பரியமுள்ள இரண்டு அரசியல் கட்சிகளில் ஒன்றுக்குத் தலைமையேற்ற ஜெயலலிதா யார்? அந்தப் பொருளற்ற பாரம்பரியத்திற்குச் சற்றும் சம்பந்தமில்லாதவர். அந்தப் பாரம்பரியத் தினால் எந்த ஒரு சமூகம் மிகக் கடுமை யாகவும், கேவலமாகவும் எதிர்க்கப் பட்டதோ, அந்தச் சமூகத்தைச் சேர்ந்தவர்.

சரி, இப்படிப்பட்ட பாரம்பரியத்திற்குத் தலைமை ஏற்பதற்காக அவர் தனது நம்பிக்கைகளை மாற்றிக் கொண்டாரா என்று கேட்டால் கிடையாது.

கோவில், அர்ச்சனை, பிரசாதம் ஒரு புறம்; தீவிரவாதம் தமிழைப் பற்றியதாக இருந்தாலும், அதை நசுக்கவே முயற்சிப்பேன் என்ற முனைப்பு ஒரு புறம்; தொழிலாளிகளுக்கும் கடமைகளும், பொறுப்புகளும் உண்டு என்பதை நிலை நாட்டத் தயங்கமாட்டேன் என்ற தீர்மானம் மற்றொரு புறம்; மைனாரிட்டி மக்களின் உரிமைகள் காக்கப்பட வேண்டும் என்றாலும், அதற்காக மெஜாரிட்டி மக்களின் உரிமைகள் மறுக்கப்பட வேண்டும் என்பதை ஏற்க முடியாது என்ற நிலைப்பாடு இன்னொரு புறம்.

இப்படி எந்தப் பக்கம் நோக்கினாலும் சரி, பொருளற்ற திராவிடப் பாரம்பரியத்தின் கோஷங்களை ஜெயலலிதா ஏற்கவில்லை. தன்னுடைய நம்பிக்கைகளை அந்தப் பாரம்பரியம் ஏற்கும்படி செய்தார். இது சமீப காலஅரசியல் அற்புதம்!

(துக்ளக்: 21-_-9_-2005) என்று விலாவாரியாக செல்வி ஜெயலலிதா பற்றி திருவாளர் சோ ராமசாமி எழுதித் தள்ளியுள்ளார்.

இதன் மூலம் என்ன சொல்ல வருகிறார்?

ஜெயலலிதா திராவிட பாரம்பரியத்துக் குச் சம்பந்தமே இல்லாதவர். அவற்றை ஏற்றுக் கொள்ளாதவர். அவரது நம்பிக்கை திராவிட பாரம்பரியத்துக்கு எதிரானது. மாறாக தனது நம்பிக்கைகளை திராவிட பாரம்பரியத்தினை ஏற்கச் செய்தவர் என்று பச்சையாக - பார்ப்பனத்தனமாக செதிர் காயாக உடைத்துச் சொல்லிவிட்டார்.

இது -_ செல்வி ஜெயலலிதாவுக்குப் பாராட்டா _ இகழ்ச்சியா? என்பதை சம்பந் தப்பட்ட வர்கள்தான் தெரிந்துகொள்ள வேண்டும். சோ, ஜெயலலிதாவை ஆதரிப் பதற்குக் காரணமே இந்தக் கண்ணோட்டம் தான். இதனை மாண்புமிகு ஜெயலலிதா அம்மையார் புரிந்து கொள்வாரா என்று தெரியவில்லை.

உண்மையான திராவிடப் பாரம் பரியத்தாரும், அய்யா, அண்ணா கொள்கை புரிந்தோரும் உணர்ந்து கொள்ள வேண்டும். முக்கியமாக தமிழர்களும் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

கடைசி செய்தி:

என் ஆலோசனையைக் கேட்டு யாரும் உருப்பட்டதில்லை! --_ சோ ராமசாமி.

ரஜினிபற்றிய ஆங்கில நூல் வெளி யீட்டு விழாவில்தான் இப்படிப் பேசினார். (சென்னை 2008 மார்ச்சு).

முதல்வர் ஜெயலலிதா இவரிடம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது..
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

Comments  

 
#32 yeskharthick123 2012-11-08 10:37
Minsaram, you are doing good politics! keep it up.
இக்கருத்துக்கு உங்கள் கருத்து .?
 
 
#31 அன்பன் 2012-09-09 16:19
இங்கு யாரும் தனி நபர் விமரிசனம் செய்யவில்லை. தனி நபர் கருத்துக்களுக்க ுப் பதிலளிப்பதைத் தனி நபர் விமரிசனமாக எடுத்துக் கொள்வது ஒரு வகையான இயலாமையே.மற்றும் இப்பொழுதும் "எங்கே பிராமணன்" என்று அறங்கேற்றிக் கொண்டிருப்பவர்க ளுக்குப் பதிலிருக்கும் பொழுது, அவர்களது இனம், இன வரலாற்றைச் சுட்டிக்காட்டாம ல் இருக்க முடியுமா?இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் 18 தேசிய இனத்தவர்களில் தமிழரும் ஒரு தேசிய இனத்தவர் என்று அங்கீகரிக்கப் பட்டுள்ளது. அந்தத் தமிழ் மொழியில் ஊடகம் நடத்தி வயிரு வளர்ப்பவர், " தமிழ்த் தேசியம் ஒரு பேத்தல்" என்று கூறுவதற்கு உறிமை இருக்கும் பொழுது, அவருக்குப் புறியும் படியாக அவரின் இனத்தச் சுட்டிக்க் காட்டினால் என்ன தவறு. மேலும் ஆரியம் தவறான கற்பனை என்கிறார்கள். நேரு அவர்களே மாக்ஸ் முல்லர் தத்துவத்தை ஒத்துக் கொண்டார்.ஆரியன் இன்வேஷன் என்று எத்தனையோ வரலாற்று ஆசிரியர்கள் ஒத்துக் கொண்டனர். இன்னும் இந்தியாவில் ஆரியம் அரங்கேற்றப் பட்டுக் கொண்டுள்ளது என்பதற்கு "எங்கே பிராமணன்" புகழ் சோ.ராமசாமியே சான்று.
இக்கருத்துக்கு உங்கள் கருத்து .?
 
 
#30 thamesraja 2012-09-05 21:21
a person is a sensible person if he does not get emotional and attack only others point of view. if he starts to attack his caste, creed, then he is an insane. he cannot control his emotions. when u want to attack aryan ideology (u presume to be incorrect), you can attack them with arguments. do not attack the person directly. this media should be used respectfully and open discussions not for personal and emotive expletives. there are person like me who can easily attack and disprove periyar & veeramani's thoughts and writings. i will disprove them wrong. but that does not mean , i should hate them or attack their personal life. UNDERSTAND PLEASE
இக்கருத்துக்கு உங்கள் கருத்து .?
 
 
#29 அன்பன் 2012-09-04 11:33
தமிழ்வாணன் அவர்களே,
காரல் மார்க்ஸின் பொதுவுடமைத் தத்துவம் பின்பு அவரின் சீடர்களாலே சூழலுக்கு ஏற்ப மாற்றியமைக்கப் பட்டது. அதனால் பொதுவுடமைத் தத்துவம் தவறு என்றும், மார்க்ஸ் கையாலாதவர் என்று கூற முடியுமா? அஃதே அண்ணா அவர்களும் கருத்து வேறுபாடு கொண்டு பிறிந்த பொழுது தி.க.வின் ஆரிய எதிர்ப்பையும், இந்திய தேசிய அமைப்பின் எதிர்ப்பையும் கைவிடவில்லை. ஆரிய எதிர்ப்பினரும், தமிழ் இன உணர்வாளர்களும், திராவிடதேசிய உணர்வாளர்களும் எல்லா மதத்திலும் இருந்தனர். கடவுள் மறுப்பை கையில் எடுத்தால், பொது எதிரியான ஆரியர்களை வெல்ல தமிழ் சமுதாயத்தை ஒன்றிணைக்க முடியாது என்ற காரணத்தினால் அவர் கடவுள் மறுப்புக்கு அழுத்தம் கொடுக்கவில்லை.அதில் வெற்றியும் கண்டார். பி டி ராஜன் குடும்பத்தினர், , மற்றும் குன்றக் குடி ஆதீனம் போன்ற ஆதீனங்கள், ஆரியர் அல்லாத இந்துக்கள், முகமதியர்கள், கிரித்தவர்கள் பலரும் ஆரிய எதிற்ப்பினைக் கையில் எடுத்தனர் என்பது உண்மை. இந்தி எதிற்புப் போர் ஒன்றே சான்று. அண்ணா கடவுள் மறுப்பைக் காட்டிலும் ஆரிய எதிற்புக்கும் வடவர் ஆதிக்க எதிர்ப்புக்கும் முன்னுறிமை கொடுத்தார் என்பதுதான் உண்மை.
இக்கருத்துக்கு உங்கள் கருத்து .?
 
 
#28 அன்பன் 2012-09-04 11:14
Quoting tamilvanan:
திராவிடமணி அவர்களே
விடுதலை மேல் உள்ள பற்று வெறித்தனமாக மாறக்கூடாது. சோவின் கருத்தை மறுத்து பேசலாம் அதற்காக அவரின் பிறப்பை சிறுமை படுத்தி பேசலாமா. பெரியார் பொங்கி எழுந்ததே ஜாதியை வைத்து சிறுமை படுத்தக்கூடாது என்றுதானே. அதே தவறை நீங்களும் செய்யலாமா.

பிராமணர் ஒரு சாதியினர் அல்ல.அவர்கள் மத்திய ஆசியாவிலிறுந்து இந்தியாவிற்குள் நுளைந்த ஆரிய இனம். இனத்துக்கும் சாதிக்கும் வேறுபாடு அறிய முதலில் முயலுங்கள்.
இக்கருத்துக்கு உங்கள் கருத்து .?
 
 
#27 அன்பன் 2012-09-04 11:01
தமிழ்வாணன் அவர்களே,
காரல் மார்க்ஸ் எப்படி பொதுவுடமைத் தத்துவத்தை வடிவமைத்தாரோ, அதுபோன்று கடவுள் மறுப்பை வடிவமைத்தவர் பெரியார்.காரல் மார்க்ஸின் தத்துவம் காலத்திற்குத் தக்க, சூழ்நிலைக்கு ஏற்ப அவருடைய வழி நடந்தவர்களால் மாறுதல் செய்யப் பட்டது.அதற்காக பொதுவுடமைத் தத்துவம் தவறானது , காரல் மார்க்ஸ் கையாலாதவர் என்று கூற முடியாது. அஃதே அண்ணா அவர்களும் கருத்து வேறுபாடு கொண்டு பிறிந்த பொழுது தி.க.வின் ஆரிய எதிர்ப்பையும், இந்திய தேசிய அமைப்பின் எதிர்ப்பையும் கைவிடவில்லை. ஆரிய எதிர்ப்பினரும், தமிழ் இன உணர்வாளர்களும், திராவிடதேசிய உணர்வாளர்களும் எல்லா மதத்திலும் இருந்தனர். கடவுள் மறுப்பை கையில் எடுத்தால், பொது எதிரியான ஆரியர்களை வெல்ல தமிழ் சமுதாயத்தை ஒன்றிணைக்க முடியாது என்ற காரணத்தினால் அவர் கடவுள் மறுப்புக்கு அழுத்தம் கொடுக்கவில்லை.அதில் வெற்றியும் கண்டார். பி டி ராஜன் குடும்பத்தினர், , மற்றும் குன்றக் குடி ஆதீனம் போன்ற ஆதீனங்கள், ஆரியர் அல்லாத இந்துக்கள், முகமதியர்கள், கிரித்தவர்கள் பலரும் ஆரிய எதிற்ப்பினைக் கையில் எடுத்தனர் என்பது உண்மை. இந்தி எதிற்புப் போர் ஒன்றே சான்று.
இக்கருத்துக்கு உங்கள் கருத்து .?
 
 
#26 அன்பன் 2012-09-01 21:18
தமிழ்வாணன் அவர்களே,
நீதிக் கட்சியின் கொள்கை கடவுள் மறுப்பு அன்று. நீதிக் கட்சி சமூக ஏற்றத் தாள்வுகளுக்கு எதிறாகப் போராடியது. கல்வியிலும் வேலைவாய்ப்பிலும ் எல்லா சாதியினருக்கும் வாய்ப்பளிக்கப் பாடுபட்டு, 1921 ல் இந்தியாவில் முதல் முதலாக(அம்பேத்க ாருக்கு முன்னோடியாக) கல்வியிலும் வேலைவாய்ப்பிலும ் சாதிவாரியான இட ஒதுக்கீட்டுச் சட்டம் இயற்றி அமுல் நடத்தியது. பிராமணருக்குக் கூட 14% இட ஒதுக்கீட்டை அங்கீகரித்தது. அக்கட்ட்சியினர் ஒரு போதும் கடவுள் மறுப்புக் கொள்கையைக் கையில் எடுக்கவில்லை. அவர்கள் ஆரிய ஆதிக்கத்தின் எதிரிகள். ஆரியருக்கு எதிரானவர்கள் எல்லாம் நாத்திகராக இருக்கவேண்டும் என்று அவசியமில்லை. ஆகவே ஆரியத்துக்கு எதிரானவர்கள் எல்லாம் கடவுள் மறுப்பாளர் என்று சோ.ராமசாமி பாணியில் தவறான தகவலை இளைய தலை முறையினருக்குச் சொல்வது சரியல்ல.கடவுள் மறுப்பாளளரல்லாத ார் சாமி கும்பிடுவது இயற்கைதானே?
இக்கருத்துக்கு உங்கள் கருத்து .?
 
 
#25 Anban 2012-08-30 11:26
தமிழ்வாண அவர்களே,
பெரியார் அவர்களே மேடையில் , "நான் பெரியார் சொல்லுகிறேன் என்பதற்காக நம்பாதீர்கள். நான் கூறிய கருத்துக்களை உள்வாங்கி, உனது பகுத்தறிவில் உறைத்துப் பார்த்து ஏற்றுக் கொள்வதா இல்லையா என்று முடிவு செய் "என்றுதான் உறையைத் துவங்குவார்.புத்தனுக்கு போதி மரத்தடியில்தான் ஞானம் பிறந்தது. அவருக்கு எந்தக் கடவுளும் ஞானப் பால் ஊற்றவில்லை.அவரது பகுத்தறிவுதான் அவரின் முடிவுக்குக் காரணம்.பெரியார் சாமி கும்பிட்டவர் மட்டுமல்ல. அவரது சிறுவயதில் காசியில் சாதுவாகச் சில காலம் வாழ்ந்தவர். பெரியார் உண்மையான இந்துவாக வாழ்ந்து, இந்து மதத்தின் உண்மைத் தன்மையை பகுத்து அறிந்துதான், கடவுள் மறுப்புக் கொள்கையை ஏற்றுக் கொண்டார். அதற்காகப் பெரியார் சாமி கும்பிட்டார் என்ற ஆரியப் பிதற்றல் வேண்டாம்.
இக்கருத்துக்கு உங்கள் கருத்து .?
 
 
#24 அஞ்செழுத்து 2012-08-29 19:10
தனக்கென ஓட்டுக் கேட்காத இயக்கமான திராவிடர் கழகத்தின் விடுதலை இதழுக்கு ஓட்டு ஒரு பிரச்சினையா? பொய் சொன்னாலும் பொருந்தச் சொல்லுங்க.. சுடலை முத்து என்னும் பெயரில் வரும் பார்ப்பனரே
இக்கருத்துக்கு உங்கள் கருத்து .?
 
 
#23 tamilvanan 2012-08-27 21:20
தந்தை பெரியார் முதலில் கடவுள் நம்பிக்கையுடன் புக்கு தான் திராவிட இயக்கத்தை ஆரம்பித்தார். பிறகு பார்பன எதிர்ப்புக்கு சிறந்த வழி கடவுள் மறுப்பே என்று தெளிந்த அதன் பிறகே கடவுள் மறுப்பை திராவிடர் இயக்கத்தின் கொள்கை ஆக்கினார். பழைய விடுதலை இதழ்களை புரட்டினால் இது தெரியும். விடுதலையை துவங்கும் பொது கடவளுக்கு நன்றி சொல்லியே ஆரம்பித்தார். பல நீதி கட்சி தலைவர்கள் கடவுள் நம்பிக்கையுடன் தான் இருந்தார்கள். அவரின் தலைமை சீடரான அறிஞர் அண்ணாவையே பெரியாரால் மாற்றமுடிவில்லை யே. அண்ணா அவர்கள் கடவுள் நம்பிக்கை மிகுந்து காணப்படுவதால் ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று திருமூலரின் கூற்றை கொள்கையாக ஏற்றுக்கொண்டார் . இப்படியே தான் புத்த மதம் புத்தரை கடவுளாக ஏற்றுக்கொண்டது. கம்யூனிஸ்ட் ரஷ்யாவிலும் கடவுள் நம்பிக்கையை மாற்ற முடியவில்லையே. .
இக்கருத்துக்கு உங்கள் கருத்து .?
 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner