திரும்பிப் பாருங்கள் ஜெயலலிதாவை!
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

- மின்சாரம் -

தமிழ்நாட்டில் 14ஆவது சட்டப் பேரவைத் தேர்தல்.

அனேகமாக இரு அணிகள்; ஓர் அணி தி.மு.க. தலைமையில், இரண்டா வது அணி அ.இ.அ.தி.மு.க. தலைமையில்.

தி.மு.க. தலைமையில் அமைந்துள்ள அணியினைச் சேர்ந்தவர்கள் கொள்கை உடன்பாடு உடையவர்கள்.

ஆனால் அ.இ.அ.தி.மு.க.வில் உள்ள வர்கள் கொள்கையில் முரண்பாடு உடையவர்கள்.

இடதுசாரிகளைப் பொறுத்தவரை மாநில அளவில் முடிவு எடுக்க முடியாத வர்கள். தேசிய கட்சி என்ற நிலையில் டில்லியில் அவர்களின் அகில இந்தியத் தலைமை அசைக்கும் கொடிகளின் அசைவுகளுக்கு ஏற்ப நடந்து கொள்ள வேண்டிய கட்டாயத்துக்கு உட்பட்டவர்கள்.

அதற்கேற்ப சொல் ஜாலங்களைத் தயாராக வைத்துக் கொண்டு இருப்ப வர்கள். காங்கிரஸ் எதிர்ப்பு என்ற தன்மை யில் ஜெயலலிதாவோடு கூட்டுச் சேர்ந்திருக்கிறோம் என்று இடதுசாரிகள் சொல்வார்களேயானால் அதிலும் அழுத்தம் இல்லை.

காங்கிரசோடு கூட்டணிக்கு முயன்று தோற்ற நிலையில் தான் இவர்களோடு கூட்டுச் சேர்ந்துள் ளார் ஜெயலலிதா என்பது நினைவிருக் கட்டும். அந்த வகையிலும் ஜெயலலிதா சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவரல்லர்.

ஒரே ஒரு கேள்வியை மக்கள்முன் வைத்தால் அ.இ.அ.தி.மு.க. தலைமையி லான கூட்டணி மக்களைச் சந்திக்க முடி யாமல் போக நேரிடும்.

அதுதான் சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டமாகும். இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்ற உரத்த  குரல் நீண்ட காலமாகத் தமிழ் மண்ணில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.

இன்னும் சொல்லப் போனால் அ.இ.அ.தி.மு.க.வேகூட 2001 சட்டப் பேரவைத் தேர்தலில் சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை நிறைவேற்றுவோம் என்று அழுத்திக் கூறியிருந்தது. இன்றைக்கு இராமன் பாலம் - _ அதனை இடிக்கலாமா என்று கூறி உச்சநீதிமன் றத்திற்குப் படையெடுத்திருக்கும் இதே ஜெயலலிதா அம்மையார் 2001 தேர்தல் அறிக்கையில் அது இராமன் பாலம் அல்ல -_ மணல் திட்டுதான் என்று குறிப்பிடப்பட்டுள்ளது (அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை பக்கம் 83, 84).

இந்தத் திட்டம் வந்தால் தென் மாவட்டங்களில் பொருளாதார வளர்ச் சியில் புதிய திருப்பம் ஏற்படும். ஆயிரக் கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புக் கிட்டும் என்று அதிமுகவுடன் இன்று கூட்டுச் சேர்ந்திருக்கும் அத்தனைக் கட்சிகளும் கிளிப் பிள்ளைப் பாடம் போல தமிழ்நாட்டு மக்களிடத்தில் ஒப்புவித்து வந்திருக்கின்றனர்.

அ.இ.அ.தி.மு.க. தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடும் வண்ணம் நீதிமன்றம் சென்றுள்ளதே -_ இதுகுறித்து இடதுசாரிகளோ, ம.திமு.க. வோ மூச்சு விட்டதுண்டா?

இந்தத் தேர்தலில் இதுபற்றிய தங்கள் கருத்தினைக் கூறாமல் தவிர்த்திடத் திட்டமிட்டுள்ளார்களா?

எப்படி அவர்கள் வியூகம் வகுத்திருந் தாலும் தென் மாநில மக்கள் மத்தியில் செங்குத்தாக எழுந்து நிற்கும் இந்தக் கேள்வி அணுக்குண்டுக்குப் பதில் சொல் லியே தீரவேண்டியவர்கள் ஆவார்கள்.

தி.மு.க.வும் அதில் இடம் பெற்றி ருக்கும் கட்சி. கண்டிப்பாக இந்த ஒரே ஒரு பிரச்சினையின் அடிப்படையிலேயே கூட அ.தி.மு.க. அணியினரைச் சிதறடித்து விட முடியும்.

மக்கள் பிரச்சினைக்காகத் தேர்தலா -_  மக்கள் பிரச்சினைக்கு முகமூடி போட்டுவிட்டு, யாரோ ஒரு சிலர் பதவிப் பல்லக்கில் மிதக்க வேண்டும் என்பதற்காகத் தேர்தலா?

சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் கூடாது என்று ஜெயலலிதா சுப்பிரமணியசாமியோடு சேர்ந்து கொண்டு உச்சநீதிமன்றத்தில் தொடுத்திருக்கும் வழக்கில் சில முக்கியப் பிரச்சினைகள் உண்டு.

ராமன் பாலத்தை இடிக்கக் கூடாது - _ அது மத நம்பிக்கையாளர்களின் மனதைப் புண்படுத்தக் கூடியது என்பது ஜெயலலிதா தரப்பில் கூறப்படுவதாகும்.

சேது சமுத்திரத் திட்டத்தின் பின்னணியில் இருக்கும் பொருளாதார வளம் என்பது ஒருபுறம் இருக்கட்டும்; இரண்டாவதாக இராமன் பிரச்சினையைக் கொண்டு வந்து திணித்துள்ளாரே - _ இவர்களின் அணித்தலைவர் _ இது இடதுசாரிகள் ஏற்றுக் கொண்டிருக்கும் மதச் சார்பின்மையின்மீது தொடுத்துள்ள மரணத் தாக்குதல் அல்லவா?

அரசு துறையில் மேற்கொள்ளப்படும். பொருளாதார வளர்ச்சி தொடர்பான பிரச்சினை ஒன்று; இன்னொன்று மதச் சார்பின்மை என்னும் மகத்தான கொள்கை. இந்த இரண்டிலும் முரண் பாடான முரட்டுத்தனமான கொள்கையை உடையவர்தான் இடதுசாரிகள் இணைந் திருக்கும் கூட்டணிக்குத் தலைவரா?

கூட்டணி என்றால் அவற்றையெல் லாம் பார்க்கக் கூடாது; ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு கொள்கை உண்டு _ அப்படிப் பார்த்தால் எந்தக் கட்சியும் இன்னொரு கட்சியுடன் கூட்டுச் சேர முடியாது என்கிற பொதுவான - சாமர்த் தியமான நழுவல் இங்கு பொருந்தாது.

பா.ஜ.க.வுடன் அ.இ.அ.தி.மு.க. கூட்டணி வைத்தால் இடதுசாரிகள் பா.ஜ.க.வுடன் தேர்தலுக்காகக் கூட்டணி வைத்துக் கொள்ளுமா?

சோசலிசம், மதச் சார்பின்மை என்பனவற்றைப் பின்னுக்குத் தள்ளி விட்டு இடதுசாரிகள் கூட்டணி வைத்துக் கொள்வார்களா?

கூட்டணியில்லாத நேரத்தில் ஒரு கட்சி இன்னொரு கட்சிபற்றி பேசிய சொல் லாடல்கள், விமர்சனங்கள் மாறுபட்டுப் போகலாம்.

ஆனால் அடிப்படையிலேயே முரண்பாடு கொண்ட கட்சிகள் கூட்டுச் சேர்வது _ தங்களையும் ஏமாற்றிக் கொள்வது. மக்களையும் ஏமாற்றிட முயற்சி செய்வது ஆகாதா?

அயோத்தியில் கரசேவையை ஆதரித்தவர், இராமன் கோயிலை இந்தியாவில் எழுப்பாமல் வேறு எங்கு எழுப்புவது என்று கேள்வி கேட்டவர்; சிறுபான்மை மக்களை நர வேட்டையாடிய நரேந்திர மோடிக்குச் சிவப்புக் கம்பளம் கொடுத்து வரவேற்று விதவிதமான வகைகளில் எல்லாம் விருந்து படைத்தவர் _ உச்சநீதிமன்றத்தால் நீரோ மன்னன் என்று வருணிக்கப்பட்ட மோடியின் பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க தனி விமானம் மூலம் பறந்து சென்றவர் - _ மதச் சார்பின்மைக்கு விரோதியல்லவா?

அ.இ.அ.தி.மு.க.வுடன் முஸ்லிம் அமைப்பும் சேர்ந்ததுதான் வேடிக்கை வினோதம்.

இன்றைக்கு மனிதநேய மக்கள் கட்சி என்ற அரசியல் ஆடை உடுத்தியிருக்கும் த.மு.மு.க. தான் சென்னைக் கடற்கரையில் ஒரு மாபெரும் மாநாட்டை நடத்தியது (4.7.1999). அதற்கு முஸ்லிம்கள் வாழ்வுரிமை மாநாடு என்னும் பெயர்.

அம்மாநாட்டில் முத்தாய்ப்பாக ஜெயலலிதா என்ன பேசினார்?

இஸ்லாமிய சகோதரர்களுக்கு நான் ஓர் உத்தரவாதம் தருகிறேன்.

நான் முன்பு ஒரு தவறு செய்து விட்டேன். நான் செய்த தவறை ஒப்புக் கொள்ளும் துணிச்சல், தைரியம் எனக்கு உண்டு. அந்தத் தவறுக்குப் பரிகாரமாகத் தான் பி.ஜே.பி. ஆட்சியை நானே கவிழ்த்தேன்.

இனி ஒருபோதும் அ.இ.அ.தி.மு.க., பி.ஜே.பி.யுடன் தொடர்பே வைத்துக் கொள்ளாது. என்றென்றும் கடைசி வரைக்கும் _ இஸ்லாமிய சமுதாய மக்களுக்குப் பாதுகாப்பு அரணாக இருப்பேன். உற்ற தோழியாக, உங்கள் சகோதரியாக இருப்பேன். உங்கள் கஷ்ட நஷ்டங்களில் பங்கு கொள்வேன். உங்கள் குடும்பத்தில் ஒருத்தியாக இருப்பேன்!

என்று சூளுரைத்தாரே. லட்சோப லட்ச இஸ்லாமியர்கள் முன் வாக்குறுதி அளித்தாரே _ அதனைக் காப்பாற்றினாரா ஜெயலலிதா? அடுத்த தேர்தலிலேயே பா.ஜ.க.வோடு சேர்ந்து கொண்டாரே!

அப்படிப்பட்ட ஜெயலலிதாவோடு -_ அந்தத் த.மு.மு.க. இன்றைய மனிதநேய மக்கள் கட்சி கூட்டு சேர்கிறது என்றால், இதற்குள்ளிருப்பது பதவி வேட்கையோ, வேட்டையோ தவிர சமுதாயப் பாது காப்புக் கிடையாது.

சந்தர்ப்பவாதத்தோடு அ.இ.அ.தி.மு.க .வோடு கூட்டு சேர்ந்து வரும் கட்சி களுக்குத் தமிழ்நாட்டு மக்கள் பாடம் போதிக்கட்டும்!

சாதனைகளை முன்வைத்து நெஞ்சு நிமிர்த்தி வரும் மதச் சார்பற்ற தி.மு.க. அணிக்கு வெற்றி மாலையைச் சூட்டட்டும்!



.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner