ஆர்.எஸ்.எஸின் கைப்பாவையே பி.ஜே.பியும், மத்திய அரசும்!
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ஆர்.எஸ்.எஸின் கைப்பாவையே பி.ஜே.பியும், மத்திய அரசும்!

மின்சாரம்

‘‘ஒற்றுமையாக செயல்படாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டியி ருக்கும் என தமிழக பாஜக தலைவர் களுக்கு ஆர்.எஸ்.எஸ். எச்சரிக்கை விடுத் துள்ளது.

ஆர்.எஸ்.எஸ். வழிகாட்டுதலில் இயங் கும் பாஜக, விசுவ இந்து பரிஷத் (வி.எச்.பி), அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏ.பி.வி.பி), இந்து முன்னணி போன்ற அமைப்புகள் சங்கபரிவார் என அழைக் கப்படுகின்றன. ஆண்டு தோறும் தேசிய மற்றும் மாநில அளவில் இந்த அமைப்பு களின் செயல்பாடுகளை மதிப்பிடும் ஆய்வுக் கூட்டம் நடைபெறுவது வழக்கம்.

அதன்படி தமிழகத்தில் உள்ள சங்பரி வார் அமைப்புகளின் ஓராண்டு செயல் பாடுகளை மதிப் பிடுவதற்கான ஆய்வுக் கூட்டம் கடந்த 17, 18 தேதிகளில் தேனியில் உள்ள சுவாமி ஓங்காரனந்தா ஆசிரம வளாகத்தில் நடைபெற்றது.

ஆர்.எஸ்.எஸ். தமிழ்நாடு - கேரள மாநிலத் தலைவர் இரா.வன்னியராஜன், செயலாளர் ராஜேந்திரன், அமைப்பாளர் தாணு மாலயன், பாஜக சார்பில் அதன் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய இணை அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன், மாநிலங்களவை உறுப்பினர் இல.கணேசன், தேசியச் செயலாளர் எச்.ராஜா, முன்னாள் மாநிலத் தலைவர் சி.பி.ராதா கிருஷ்ணன், மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம், மாநிலப் பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மொத்தம் 30 அமைப்புகளின் மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்றனர்.

கூட்டத்தில் ஒவ்வொரு அமைப்பின் தலைவரும் 2016ஆம் ஆண்டில் தங்களது அமைப்பின் செயல்பாடுகள் குறித்து அறிக்கை அளித்தனர். தமிழக பாஜக தலைவர் தமிழிசை அளித்த அறிக்கையில், "தமிழகத்தில் உள்ள 49 மாவட்டங்கள், 1,125 மண்டலங்களில் மாதந்தோறும் செயற் குழுக் கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. தமிழக பாஜகவில் 49 லட்சம் உறுப்பினர்கள் உள்ளனர். மொத்தமுள்ள 66 ஆயிரம் வாக்குச் சாவடிகளில் கிளைகள் அமைக் கும் பணிகள் நடைபெற்று வருகின்றன" என தெரிவித்துள்ளார். கடந்த சட்டப் பேரவைத் தேர்தல், மற்றும் இடைத் தேர்தல்களில் கட்சியின் செயல்பாடுகள் குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார்.

இந்த ஆய்வுக் கூட்டத்தை தொடங்கி வைத்துப் பேசிய ஆர்.எஸ்.எஸ். அமைப் பின் தென்னிந்திய தலைவர் இரா.வன் னியராஜன், பாஜகவில் நடக்கும் கோஷ்டி  பூசல்கள் குறித்து வேதனை தெரிவித்துள் ளார். அதனைத் தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தென்னிந்திய அமைப்பாளர் தாணு மாலயன், தமிழிசை, பொன்.ராதா கிருஷ்ணன், இல.கணேசன், எச்.ராஜா என பாஜக தலைவர்களுடன் தனித்தனியாக அவர் ஆலோசனை நடத்தியுள்ளார்.

இறுதியாக பேசிய தாணு மாலயன், ‘‘தமிழக பாஜகவில் கோஷ்டி பூசல்களை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். கட்சியில் பல குழுக்கள் உள்ளன. ஒருவரது ஆதரவாளர் மற்ற தலைவர்களை சந் தித்தால் அவரை பழிவாங்குவது, தலை வர்கள் ஒருவருக்கொருவர் முகம் கொடுத்து பேசாமல் இருப்பது போன்ற செயல்பாடுகள் வேதனை அளிக்கின்றன. கோஷ்டி பூசல்கள் கடந்த சட்டப்பேர வைத் தேர்தலில் பாதிப்பு ஏற்படுத்தியதை பலரும் எங்களிடம் ஆதாரங்களுடன் தெரிவித்துள்ளனர்.

எனவே, தலைவர்கள் மற்ற நிர்வாகிகள், தொண்டர்களுக்கு உதாரணமாக விளங் கும் வகையில் ஒற்றுமையாக செயல்பட வேண்டும். இல்லையெனில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என எச் சரித்ததாக கூட்டத்தில் பங்கேற்ற ஒருவர் தி இந்துவிடம் தெரிவித்தார்.

இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற தலை வர்கள் அனைவரும் 2 நாட்கள் வெளியே செல்ல அனு மதிக்கப்படவில்லை. ஆசிரம வளாகத்திலேயே தங்க வைக்கப்பட்டு ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.

கட்சியின் புதிய உறுப்பினர்களுக்கு இந்துத்துவ கொள்கைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட வேண்டும், கிளைக் கமிட்டி முதல் மாநில நிர்வாகிகள் வரை பாஜக பொறுப்பாளர்களை ஆர்.எஸ்.எஸ்.ஸின் பயிற்சி முகாம்களுக்கு அனுப்ப வேண்டும் என ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் அறி வுறுத்தியுள்ளனர். தேனியில் 2 நாள்கள் நடைபெற்ற ஆய்வுக் கூட்டம் தமிழக பாஜகவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது”.

மேற்கண்ட தகவல் வெளி வந்தது ‘விடுதலை’யில் அல்ல, ‘முரசொலி’யில் அல்ல, ‘தீக்கதிர்’ ஏட்டில் அல்ல, ‘ஜன சக்தி’யிலும் அல்ல.

தமிழ் இந்து ஏட்டில் தான் வெளி வந்துள்ளது (21.12.2016). இதற்கெல்லாம் என்ன பதில் சொல்லப் போகிறார்கள் என்பது தான் நமது நோக்கம், கேள்வி. பி.ஜே.பி. ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக, தொலைக்காட்சிகளில் விவாதங்கள் நடந்தபோதெல்லாம், எதிர்த்தரப்பினர் ஆர்.எஸ்.எஸ்ஸைப் பற்றிக் குறை சொன்னால் ‘இங்கு யாரும் ஆர்.எஸ்.எஸ். காரர்கள் இல்லை; இந்நிலையில் இல்லாதவர்களைப் பற்றிப் பேசுவது தவறு’ என்று உச்சப்பட்ச ஜனநாயகவாதிகள் போன்று பேசுவார்கள்.

மத்தியில் அதிகாரத்துக்கு வந்த பிறகு பிஜேபிகாரர்கள் பேசுகிற தொனியே மாறிவிட்டது. தொண் டையை கனைத்துக் கொண்டு பேச ஆரம்பித்து விட்டனர். ஆர்.எஸ். எஸைப் பற்றிப் பேசினால் ‘சுர்’ ரென்று கோபம் பொத்துக் கொண்டு கிளம்பு கிறது; மூக்குப்புடைக்கிறது.

ஆனாலும் ஆர்.எஸ்.எஸ் வேறொரு அமைப்பு - அதற்கும் எங் களுக்கும் சம்பந்தமில்லை என்று சொல்லுவதை மட்டும் விடாப்பிடியாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆர்.எஸ்.எஸ். தலைவர் இப்படி யெல்லாம் சொல்லியிருக்கிறாரே என்று கேட்டால் அது அவர்கள் கருத்து என்று சொல்லி நழுவி விடுவார்கள்.

அப்படிச் சொல்லுபவர்கள் அந்தோ பரிதாபம், வசமாக மாட்டிக் கொண்டு, இசகுப்பிசகாக மாட்டிக்கொண்டு விழி பிதுங்கி நிற்கிறார்கள்.

தமிழ் இந்து ஏட்டில் வெளிவந்த மேலே எடுத்துக்காட்டப்பட்ட செய் திக்கு என்ன பதில் சொல்லப் போகி றார்கள்?

ஒற்றுமையாக பா.ஜ.க வினர் செயல்படாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிஜேபியினர் கலந்து கொண்ட கூட்டத்தில் ஆர்.எஸ். எஸின் பொறுப்பாளர்கள் எச்சரிக்கும் அளவிற்கு, பிஜேபியை நாட்டாண்மை செய்யும் அளவுக்கல்லவா. ஆர்.எஸ். எஸின் கை ஓங்கி நிற்கிறது.

அந்தக் கூட்டத்தில் யார் யாரெல் லாம் கலந்து கொண்டுள்ளனர் என்பது முக்கியம் மிக மிக முக்கியம்.

மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், பி.ஜே.பி. யின் மாநிலங்களவை உறுப்பினர் இல.கணே சன், பி.ஜே.பி.யின் தேசியச் செயலாளர் எச்.ராஜா, பி.ஜே.பி. யின் தமிழ் மாநிலத் தலைவர் டாக்டர் தமிழிசை, மேனாள் மாநிலத் தலைவர் கோவை - சி.பி. ராஜமாணிக்கம், மாநில அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம்,

மாநிலப் பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் முதலிய முக்கியப் பொறுப்பாளர்கள் கலந்து கொண்ட முக்கிய கூட்டத்தில் தான் தென்னிந்திய ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் இரா.வன்னிய ராஜன், ஆர்.எஸ்.எஸின் தென்னிந்திய அமைப்பாளர் எஸ்.தாணு மாலயன் ஆகியோர்தான் பிஜேபியின் முக்கிய தலைவர்களைப் பார்த்து ஒற்றுமையாக செயல்படாவிட்டால் கடும் நடவ டிக்கை காத்திருக்கிறது என்று கழுத் துக்கு கத்தி பாய்ச்சுவதுபோல எச் சரித்திருக்கின்றனர்.

கூட்டத்தில் பி.ஜே.பியின் மாநிலத் தலைவர் கட்சியின் செயல்பாடுகள் குறித்து அறிக்கையொன்றையும் தாக் கல் செய்துள்ளார். அதனை ஆய்வுச் செய்யும் இடத்தில் ஆர்.எஸ்.எஸ். இருக்கிறது என்பதுதான் கவனிக்க வேண்டிய ஒன்று.

நாம் இதைச் சுட்டிக் காட்டிய போதெல்லாம் ஆர்.எஸ்.எசு.க்கும், எங் களுக்கும் சம்பந்தமில்லை. பா.ஜ.க தனித்து இயங்கக்கூடியது என்று வாய் ஜம்பம் அடிப்பவர்கள் -பதில் சொல் லட்டுமே பார்க்கலாம்..
 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner