கரணம் தப்பினால் மரணம்!
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கரணம் தப்பினால் மரணம்!

கலி.பூங்குன்றன்,
துணைத் தலைவர்,
திராவிடர் கழகம்.

தமிழர் தலைவர் அறிக்கையின் ஒரு விரிவாக்கமே இது!

முதல்வர் ஜெயலலிதாவின் மரணம்! ‘துக்ளக்’ ஆசிரியர் சோ.இராமசாமியின் மரணம்!

அடுத்தடுத்து இருபெரும் மறைவுகள் பார்ப்பனர்களுக்கு அதிர்ச்சிதான்!

திராவிட இயக்கத்தின் படிக்கட்டு வழியில் உள்ளே சென்ற காரணத் தால்தான் ஒரு பார்ப்பனப் பெண் திரா விட கட்சி ஒன்றுக்குத் தலைமையேற் கவும், ஆட்சி அதிகாரத்தில் அமரு வதற்குமான வசதியைச் செய்து கொடுத்துவிட்டது.

அதேநேரத்தில் அவர்கள் எதிர் பார்த்த ஒரு முக்கியமான அம்சம் - இட ஒதுக்கீட்டுப் பிரச்சினையில், சமூகநீதித் தடத்தில் அவர் திராவிட இயக்கக் கொள் கையைப் பின்பற்ற மாட்டார்; அதன்மூலம் தங்களின் வாசல் கதவு அகலமாக திறந்துபட்டு விடும்; மறுபடியும் தங் களுக்கான மேய்ச்சல் தரை பசுமையாக - விரிவாகக் கிடைத்து விடும் என்று கடை வாய்ப்பற்கள் எல்லாம்கூட வெளியில் தெரிய சப்புக் கொட்டிக் கொண்டிருந்தனர்.

ஒரு கட்டத்தில் இட ஒதுக்கீட்டில் பொருளாதார அளவுகோல் என்ற கத் தரிக்கோலை முதலமைச்சர் எம்.ஜி.ஆர். உள்ளேவிட - ஆரியத்தை வீரியத்து டன் அணைத்த எம்.ஜி.ஆர். என்று கோவில் கதவு அளவில் பெரிய பெரிய சுவரொட் டிகளை அடித்து ஒட்டியவர்கள் பார்ப்ப னர்கள்.

ஆனாலும், அவர்களின் ஆசையை அற்பாயுசாக மாற்றிக் காட்டியவர் திரா விடர் கழகத் தலைவர் - மாற்றிக் காட்டிய இயக்கம் திராவிடர் கழகம். அந்த முயற் சிக்குத் தமிழ்நாடே திராவிடர் கழகத் தலைமையின்கீழ் ஒன்று திரண்டு எழுந்தது.
எம்.ஜி.ஆருக்குத் தோல்வியா? யார் சொன்னது? சினிமாவில் எப்பொழுதும் வில்லனைத் தோற்கடித்து வெற்றிச் சிரிப்பை வெளிப்படுத்தும் பொன்மனச் செம்மலுக்கா தோல்வி? அது ஒருக் காலும் இல்லை என்று ஓங்காரச் சிரிப்பினை ஒலித்துக் கிடந்தனர்.

பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக் கீட்டில் வருமான வரம்பு ஆணையைத் திணித்த எம்.ஜி.ஆர். தோற்றார் - தோற்றார் - ஆம் தோல்வியின் எல் லைக்கே துரத்தப்பட்டுத் தோல்வியின் மண் அவர் முதுகினில் படிந்தது.

39 மக்களவைத் தொகுதிகளில் போட்டி யிட்டு 37 இடங்களில் படுதோல்வியை அடைந்தார். அதன் விளைவு சமூகநீதித் தடத்தில் வெற்றி மலர்ந்து மணம் வீசியது.

வருமான வரம்பு ஆணை ரத்து செய்யப்பட்டதோடு, அதுவரை பிற் படுத்தப்பட்ட மக்களுக்கு 31 சதவிகித மாக இருந்த இட ஒதுக்கீட்டினை 50 சதவிகித மாக உயர்த்தி சமூகநீதி வரலாற்றில் சாகாப் புகழ் படைத்து விட்டார். அது பார்ப் பனர்களின் மண் டையில் விழுந்த மரண அடி!

இரண்டாவது வாய்ப்பு - அவர்களின் சமுதாயத்தைச் சேர்ந்த அய்யங்கார்ப் பெண் ஒருவர் தமிழ்நாட்டின் முதல மைச்சர் ஆனார். இவர் காலத்தில் தாங்கள் எண்ணியது நடக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏராளமாகவே இருந்தது.

மண்டல் குழுத் தொடர்பான வழக்கில் தீர்ப்பு வழங்கிய உச்சநீதி மன்றம் இட ஒதுக்கீட்டின் அளவு 50 சதவிகிதத்தை விஞ்சக் கூடாது என்று ஆணையிட்டது - பரவாயில்லை; அந்த அளவிலாவது வெற்றி கிடைத்ததே என்று ஆசுவாசப் பட்டனர் பார்ப்பனர்கள்.
அதனையும் தட்டிப் பறித்தது திரா விடர் கழகம் - அதன் தலைவர் மான மிகு கி.வீரமணி அவர்கள் அதனைச் செய்தவர்.

அதுவும் அவர்கள் குலத்துப் பெண் ணான ஜெயலலிதா அவர்களைப் பயன் படுத்தியே அந்தச் சாதனையைச் செய்து காட்டினார்.

தந்தை பெரியார் காங்கிரசை விட்டு வெளியில் வந்ததே இட ஒதுக்கீட்டுப் பிரச் சினையால்தான்! தோற்காத எம்.ஜி.ஆர். தோற்றதும் இட ஒதுக்கீட்டில் பொருளாதார அளவுகோலைத் திணித்ததால்தான்!

அந்தச் சூழலில், திராவிடர் கழகத் தலைவர் - தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் முதல மைச்சர் ஜெயலலிதா முன் ஒரு கருத்தை முன்வைத்தார்.

தந்தை பெரியார் அவர்களின் சமூக நீதி மண்ணில், அந்தக் கொள்கைக்கு ஓர் ஆபத்து வந்துவிட்டது; அதனைத் தமிழக மக்கள் சகிக்கமாட்டார்கள். தமிழக அரசு அதற்கோர் பரிகாரம் காணாவிட்டால் சகித்துக் கொள்ள மாட்டார்கள். அப்படிப்பட்ட எம்.ஜி. ஆரையே தூக்கி எறிந்தவர்கள் தமிழக மக்கள்.

இந்த நிலையில், தமிழ்நாட்டின் 69 சதவிகிததத்தைப் பாதுகாக்க ஒரே ஒரு வழி இருக்கிறது. சட்ட ரீதியான வழிதான். இந்திய அரசமைப்புச் சட்டம் 31-சி பிரி வின்படி தமிழ்நாடு அரசே சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி, நாடாளுமன் றத்தில் சட்டத் திருத்தமும் செய்யப்பட்டு, ஒன்பதாவது அட்ட வணையிலும் சேர்க்கப்பட்டால், நீதிமன்றத்தின் அதிகார வரம்பிலிருந்து அதனைக் காப்பாற்றிவிட முடியும் என்று சொன்னதோடு மட்டு மல்லாமல், அதற்கான சட்ட முன்வரை வையும் தயாரித்துக் கொடுத்தவர் திராவிடர் கழகத் தலைவர்.

என்ன செய்வது என்று தமிழக அரசு தத்தளித்துக் கொண்டிருந்த நிலையில், துடுப்புக் கிடைத்ததுபோல புத்திசாலித் தனமாக அதனைப்பற்றிக் கொண்டவர் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா. அவ்வாறே செய்து (76 ஆம் சட்ட திருத்தம்) அரசமைப்புச் சட்டம் ஒன்பதாவது அட்டவணையிலும் அது இணைக் கப்பட்டதன் விளைவை தமிழ்நாட்டு ஒடுக்கப்பட்ட மக்கள் அனுபவித்துக் கொண்டுள்ளனர்.

பார்ப்பன வட்டாரத்துக்கு மிகப் பெரிய இரண்டாவது மண்டையடி அது! நமது சமுதாயத்துப் பெண் நமக்குப் பயன் படாமல், திராவிட இயக்கத்துக்குத் துணை போய்விட்டாரே என்று துக்கம் தொண் டையை அடைக்கப் புலம்பி னார்கள்.

இந்தியாவிலேயே இட ஒதுக்கீடு என்பது வெறும் ஆணையாக இல்லாமல் ஒன்பதாவது அட்டவணைப் பாதுகாப்பில் சட்டமாகக் கம்பீரமாக வீரநடை போட்டு வருகிறது.

அதன் காரணமாகத்தான் ‘‘சமூக நீதி காத்த வீராங்கனை’’ என்ற பட்டத்தை திராவிடர் கழகம் அளித்தது. மேலும் சமூக நீதியில் ஜெயலலிதா அவர்கள் உறுதியாக நிற்கும் ஒரு பாதுகாப்பு ஏற்பாட்டை செய்து முடித்தவர் திராவிடர் கழகத் தலைவர்.

மூன்றாவதாக - நுழைவுத் தேர்வு; தொழிற்கல்லூரிகளில் சேருவதற்கு எம்.ஜி.ஆர். அவர்கள் ஆட்சிக்காலத் தில் நுழைவுத் தேர்வு முறை புகுத் தப்பட்டது. திராவிடர் கழகம் கடும் எதிர்ப்பைத் தெரி வித்தது - போராட் டங்களை நடத்தியது. என்றாலும் அதில் விடாப்பிடியாகவே இருந்தார் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். நுழைவுத் தேர்வு தொடர்ந்த காலகட்டம் வரை தன் எதிர்ப்பையும் தொடர்ந்து தெரி வித்துக் கொண்டே இருந்தது திராவிடர் கழகம்.

அந்த நுழைவுத் தேர்வையும் ரத்து செய்தவர் ஜெயலலிதா என்றவுடன், அக்கிரகாரவாசிகளுக்கு அடிவயிற்றைக் கலக்கியது. திராவிடர் கழகத் தலைவர் தெரிவித்த ஒரு யோசனையைப் பின்பற்ற தவறியதால், அந்த ஆணை சென்னை உயர்நீதிமன்றத்தால் செல் லாது என்று ஆக்கப்பட்டது.

2007 இல் மானமிகு சுயமரியாதைக் காரரான கலைஞர் அவர்களின் ஆட்சி யின்போது டாக்டர் அனந்த கிருஷ்ணன் தலைமையில் முறையாக ஒரு குழு நியமித்து அந்தக் குழு தெரிவித்த பரிந் துரையின் பேரில் ஆணை பிறப்பிக்கப் பட்ட காரணத்தால், நுழைவுத் தேர்வு ரத்து செல்லுபடியாகி இதுவரை தொடர்ந்து கொண்டுள்ளது.

பார்ப்பன வட்டாரத்துக்கு தோல்விக்கு மேல் தோல்வி - அடிக்குமேல் அடி - இடிக்குமேல் இடி!

மத்தியிலே பி.ஜே.பி.  ஆட்சி நடந்துகொண்டுள்ளது. ‘நீட்’ என்ற அகில இந்திய அளவிலான நுழைவுத் தேர்வுக்கு அது பச்சைக் கொடி காட்டிவிட்டது. அதையாவது தங்கள் அக்கிரகாரத்துப் பெண் ஆதரித்துப் பச்சைக் கொடி காட்டிவிடுவார் என்று எதிர்பார்த்த பார்ப்பன வட்டாரத்துக்குப் பதைபதைப்பு!

நாங்கள் அதனை ஏற்க முடியாது என்பதிலே முதலமைச்சர் ஜெயலலிதா உறுதியாக இருந்தார். அதன் விளைவு கடந்த ஆண்டு இந்தியா முழுமையும் ‘நீட்’ தேர்வு நடந்த நிலையில், தமிழ் நாட்டுக்கு விதிவிலக்கு!

ஜெயலலிதா ஆட்சி அதிகாரத்தில் இருந்து என்ன பயன் - பலன்? என்று நெட்டி முறித்துப் புழுங்கினார்கள். பார்ப் பனர்கள். ஆனாலும், தங்கள் குலத்துப் பெண் ஆட்சி அதிகாரத்தில் இருந்தார் என்ற மனநிறைவு நிச்சயமாக அவர் களுக்கு இருந்தது என்பது மட்டும் உண்மை.

காஞ்சி சங்கராச்சாரியார் திருவாளர் ஜெயேந்திர சரசுவதி ஒரு கொலைக் குற்றத்தில் கைது செய்யப்பட்டு, காராக் கிரகத்தில் அடைக்கப்பட்டார். அதனைத் துணிவாக செய்தவர் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா. எரிச்சல்தான் என்றாலும், என்ன செய்வது என்று கைப் பிசைந்து நின்றது அக்கிரகாரம்!

பி.ஜே.பி.யோடு ஒரு கட்டத்தில் அ.இ. அ.தி.மு.க. கூட்டணியில் கைகோர்த்து நின்ற தருணம் பார்ப்ப னர்களுக்கு பாயாசம் சாப்பிட்டது மாதிரி ருசித்தது.

பார்ப்பனர்களைப் பொறுத்தவரையில் அகில இந்திய அளவில் பி.ஜே.பி., தமிழ் நாட்டைப் பொறுத்தவரையில் அ.இ. அ.தி.மு.க.
பி.ஜே.பி.யோடான அ.இ.அ.தி. மு.கவின் இணைப்புக் கயிறு அறுந்தது அவாளுக்கு அதிரத்தக்க துக்க நாளே!

இப்பொழுது எதிர்பாராவிதமாக ஜெயலலிதா மரணம் அடைந்த நிலையில், தமிழக அரசியலில் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த கடைசிப் பார்ப்பனர் அவர்தான் என்பது அக்கிரகாரவாசிகளுக்கு நன் றாகவே தெரிந்துவிட்டது.

தமிழக அரசியலில் - இன்றைய சூழலில் அவர்களின் மனக்குரங்கு இயந்திர வேகத் தில் ‘முழு உற்பத்தியில்’ ஈடுபட்டுக் கொண் டிருக்கிறது. அவர்களின் ஊடகங்கள் எல்லாம் அ.தி.மு.க. கட்சிக்குள்ளும், ஆட்சிக்குள்ளும் மித்திரபேதம் செய்யும் - அவர்களுக்கே உரித்தான சாணக்கியத்தன வேலையில், பிரித்தாளும் தந்திரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர்.

அதனைத்தான் திராவிடர் கழகத் தலை வர் தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் ஓர் அறிக்கையின் மூலம் சுட்டிக்காட்டியுள் ளார் (8.12.2016).

ஜாதிப் பிரச்சினையைக் கிளப்பிப் பார்க்கிறார்கள்; ஜெயலலிதா மறைவு அறி விக்கப்பட்ட அந்த இரவில் என்னென்ன வெல்லாம் நடந்தது தெரியுமா? என்கிற ‘பேய்’க்கதைகளை ‘ஆவி’ நாவல்களை உதிர்க்க ஆரம்பித்து விட்டனர்.

ஒரு பிளவை ஏற்படுத்தி பாரதீய ஜனதாவின் கொட்டடியில் அதனைக் கொண்டுபோய் நிறுத்திவிட வேண்டும் என்கிற துடிப்பு அவர்களிடம் தெரிகிறது. மிஸ்டு காலில் கட்சியை வளர்ப்பவர்கள் அல்லவா!

மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு இரண்டு நாள்கள் ‘டேரா’ போட்டு நோய்ப் படுக்கையில் இருந்த ஜெயலலிதாவைச் சுற்றி என்னென்ன வெல்லாம் நடக்கிறது(?) என்பதை நேரடியாக, உன்னிப்பாக நோட் டம் விட்டுக் கொண்டிருந்தார்.

பிரதமரும் வரவேண்டும் என்றெல் லாம் ஏற்பாடும் செய்யப்பட்டது. பிரதமரும் வந்தார் - முதலமைச்சர் பன்னீர்செல் வத்தின் கைகளைப் பற்றிக் கொண்டு, தழுதழுத்த குரலில் ‘நான் இருக்கிறேன் - அஞ்சாதீர்! ஒரு தொலைப்பேசி போதும்!’ என்று உற்சாகப்படுத்துகிறார்.

ஜெயலலிதா அவர்களின் நிழலாக, தாதியாக, தோழியாக கடைசிவரை இருந்த சசிகலா அவர்களை - அவரின் தலையில் கை வைத்து, ‘உடன்பிறவா’ சகோதரர் பாவனையில் தைரியம் கொடுக்கிறார்.

இவையெல்லாம் நாடகம்தான் என்பது மோடியை சரியாக அறிந்த தமிழ்நாட்டு மக் களுக்குத் தெரியும் - நன்றாகவே தெரியும்!
காவிரி நதிநீர்ப் பிரச்சினைக்காக சந்திக்க வந்த அ.தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்களையே சந்திக்க மறுத்தவர் தான் இந்த மோடி என்று அ.தி.மு.க. வினருக்கு, முக்கிய பொறுப்பாளர் களுக்குத் தெரியாதா?

‘‘அ.இ.அ.தி.மு.க.வுக்கும், பி.ஜே.பி.,க்கும் கொள்கையில் பெரிய அளவில் வித்தியாசம் கிடையாது’’ என்று எந்த நேரத்தில் மத்திய பி.ஜே.பி. அமைச்சர் வெங்கய்யா நாயுடு சொல்லு கிறார் என்பதைக் கவனிக்கத் தவறக் கூடாது. டிசம்பர் 25 ஆம் தேதிக்குமேல் தமிழ்நாட்டில் அரசியல் மாற்றம் நிகழப் போகிறது என்ற மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதன் பின்னணி என்ன?

அவர்களின் கணக்கெல்லாம் செல்வி ஜெயலலிதா இல்லாத நிலையில், அவர் ஆளுமை அடங்கிவிட்ட சூழலில் அ.இ. அ.தி.மு.க. தொண்டர்களை இலாவகமாகப் பிடித்துத் தம் சட்டைப்பைக்குள் போட்டுக் கொண்டுவிடலாம் என்பது அவர்களின் திடமான திட்டம்.
அல்லது வழக்குப் போன்றவை களைப் பயன்படுத்தி நெருக்கடி கொடுத்துவிட லாம், வருமான வரித் துறை என்ற ஆயுதமும் இருக்கவே இருக்கிறது என்கிற திட்டமும் இருக் கக்கூடும்.

இந்த நேரத்தில்தான் திராவிட இயக் கத்தின்  தாய்க்கழகத்தின் தலைவர் அவர்கள் ஒரு முக்கியமான காலகட்டத்தில் தலையிட்டே தீர வேண்டும் - எச்சரிக்கை யாக சிவப்பு விளக்கைக் காட்டியே தீரவேண்டும் என்ற கடமை உணர்ச்சியில் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார் (‘விடுதலை’, 8.12.2016).

அந்த அறிக்கை பல தளங்களிலும் விரிவாகப் பேசப்படுகிறது - விவாதிக் கப்படுகிறது. கட்சிகளைக் கடந்துகூட கவ னமாகக் கவனத்தில் எடுத்துக் கொள் ளப்படுகிறது.

இதில் திராவிடர் கழகத்திற்கு எந்தவித உள்நோக்கத்தையும் எவ ராலும் கற்பிக்க முடியாது. திராவிடர் கழகம் எந்த ஒரு கூட்டணியிலும் இடம்பெறாத சமூகப் புரட்சி இயக்க மாகும்.

அ.இ.அ.தி.மு.க.வின் பல்வேறு நட வடிக்கைகளில் மாறுபாடான நிலைப்பாடு திராவிடர் கழகத்திற்கு உண்டு - உறுதி யாகவே உண்டு.

கடுமையான விமர்சனங்கள், போராட் டங்கள் எத்தனை எத்த னையோ கடந்த காலத்தில்! தேர்தலில்கூட அக்கட்சி தோற்கவேண்டும் என்று பாடுபட்ட பகுத்தறிவுப் பாசறை திராவிடர் கழகம்.

ஆனாலும், இது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமாயிற்றே! அதனை அதன் எதிர்ப்புத் தத்துவக் கட்சி - அமைப்பு கபளீகரம் செய்துவிடக் கூடாதே - அதன் தூண்டிலில் சிக்கி விடக் கூடாதே - நாம் வேடிக்கை பார்த்துக் கொண்டும் இருக்க முடியாதே!

காலத்தின் கலங்கரை விளக்கமாக நிற்கும் தாய்க்கழகமான திராவிடர் கழகத் தலைவரின் அறிக்கையை திராவிடர் - தமிழர்கள் அனைவரும் ஒருமுறைக்குப் பலமுறை படிப்பதும், உட்கிரகிப்பதும் அவசியம் - அவசியம்!

குறிப்பாக அ.இ.அ.தி.மு.க. நிருவாகிகள் ‘கரணம் தப்பினால் மரணம்’ என்பதை மறந்துவிடக்கூடாது!


இதற்கு என்ன பதில்?

அ.தி.மு.க.வில் பிளவை ஏற்படுத்தி - பலன் பெற பி.ஜே.பி. காய்களை நகர்த்துகிறது என்று திராவிடர் கழகத் தலைவர் சொன்னால், கொந்தளிப்பவர்கள் இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?

மத்திய அமைச்சர் பொன்.இராதாகிருஷ்ணன்

1949 இல் இருந்து பல அரசியல் மாற்றங்களை தமிழகம் சந்தித்து இருக்கிறது. இதுவரை இல்லாத அளவு மிகப்பெரிய மாற்றம் தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் நிகழ உள்ளது. அந்த நிகழ்வு ஏற்படும்போது அதை பயன்படுத்தி ஆளும் திறன் உள்ள கட்சியாக பா.ஜ.க. மாறவேண்டும். அதற்கேற்ப இந்த மாற்றத்தை நாம் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.

(நாகர்கோவிலில் பேட்டி 22.10.2016 - முதலமைச்சர் அப்பல்லோ மருத்துவமனையில் இருந்தபோது)

மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு
உண்மையில் பா.ஜ.க.வின், அ.தி.மு.க.வுடனான அணுகுமுறை என்பதில் தத்துவார்த்தக் கொள்கையின் அடிப்படையில் மிக அருகில்தான் உள்ளது.

Minister M.Venkaiah Naidu, who was present when Mr.Modi spoke to the Chief Minister in Chennai, told The Hindu that it reflected the Centre’s indeed the BJP’s, attitude towards the AIADMK, which was ‘‘ideologically near’’ to his party.

(‘தி இந்து’, 8.12.2016)

முதலமைச்சர் மறைந்த நிலையில், இவ்வாறு கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
புரிந்துகொள்வீர் - பூடகமான இந்தப் பேச்சுகள் மூலம்!.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner