வீரமணி துணையுண்டு வாருங்கள்!
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

- கவிஞர் கலி.பூங்குன்றன்

பாடுவோம் பாடுவோம் பாடுவோம்

பாடி வீட்டிலிருந்து போர்ப் பாட்டு

பாடுவோம், பாடுவோம்!

ஈரோட்டு எரிமலையின் - இனக்

கோட்பாட்டு இசை மொழியில்

பாடுவோம், பாடுவோம்!

 

பிறவி பேத பார்ப்பனீயக் காட்டினை

தீ மூட்டுவோம்,  தீ மூட்டுவோம்

பெரியார் பெரும்படைத் தோள் புடைத்து

காட்டுவோம், காட்டுவோம் - திராவிட

வீரத்தை நாட்டுவோம், நாட்டுவோம்!

- பாடுவோம்

 

பெரியார் மறைந்தார் என்று துள்ளாதே!

பெரியார் பீரங்கி வயிற்றுத் துப்பாக்கி

வீரமணியிருக்கிறார் மறவாதே, மறவாதே! - வெற்று

வேட்டுச் சத்தம் போடாதே, போடாதே!

- பாடுவோம்

 

வாருங்கள் இளைஞர்களே வாருங்கள்

வற்றாத நீரூற்றாம் வள்ளல் பெரியாரின்

வார்ப்புகளை வாரி இறைப்போம் வையமெங்கும்

வாழும் நம் தலைவர் வீரமணி துணையுண்டு

வாருங்கள் இளைஞர்களே, வாருங்கள்!

- பாடுவோம்.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner