Banner

பனகல் ஆணை

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தாழ்த்தப்பட்ட வரை குறிப் பிட்ட அள வில் பள்ளிக் கூடங்களில் சேர்த்துக் கொண்டால் தான் கல்வி மானியம் வழங்கப்படும் என்று ஆணை பிறப்பித்தது டாக்டர் சுப்பராயன் தலைமையில் அமைந்த நீதிக்கட்சி ஆதரவு அமைச்சரவைதானே (1928).

சென்னை மாநகராட்சி, பிற நகராட்சிகள், மாவட்ட நாட் டாண்மைக் கழகங்கள் போன்றவை நடத்தும் பள்ளிகளில் இன்னும் மிகுதியாகத் தாழ்த்தப்பட்ட வகுப்பு மாணவர்கள் சேர்க்கப்படவேண்டும் என்றும் ஒவ்வொரு ஆண்டு இறுதியிலும் பள்ளியில் பயில்வோர் பட்டியலை அனுப்பும்போது பள்ளி யில் சேர்க்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மாணவர் பற்றிய விவரங்களையும் அனுப்ப வேண்டும் என்றும் ஆணை பிறப்பித்தது பனகல் அரசரைப் பிரதமராகக் கொண்ட நீதிக்கட்சி ஆட்சிதானே! (G.O.No. 205 Dt. 11-2-1924 Law (Education) Dept.).

1935-_ல் தாழ்த்தப்பட்ட சமுதாய மக்களின் கல்விக் கென்றே 52 லட்ச ரூபாயை ஒதுக்கியது நீதிக்கட்சி என்றால், அந்தக் கால கட்டத்தில் அது எவ்வளவுப் பெரிய தொகை?  எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுக்குச் செல்லும் ஆதிதிராவிடர் மாணவர்கள்  தேர்வுக் கட்டணம் கட்டத் தேவை யில்லை என்றும் சலுகை செய்யப் பட்டது. 1936 இல் அவர்களுக்காக அய்ந்து விடுதிகள் கட்டப்பட்டன.


இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

அண்மைச் செயல்பாடுகள்