சென்னை, மே 10- சென்னையில் 300 பெட்ரோல் பங்குகள் உள்ளன. இந்த பங்குகளுக்கு மணலி மற்றும் மங்களூரு எண்ணெய் சுத்திகரிப்பு நிலை யத்தில் இருந்து டீசல் விநியோகம் செய்யப்படுகிறது. மங்களூரு சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினை காரணமாக அங்கிருந்து டீசல் விநி யோகம் குறைந்துள்ளது.
அதே நேரத்தில் சென்னையின் டீசல் தேவை மிகவும் அதிகரித்துள்ளது. முன்பெல்லாம் கனரக வாகனங்களும், டீசலில் இயங்கும் இலகு ரக வாகனங்களும் தான் அதிக அளவில் டீசலை பயன் படுத்திவந்தது. ஆனால் இப்போது மின்வெட்டு காரணமாக வணிக நிறுவனங்கள், தொழிற் சாலைகள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் சிறுகடைகள் வரை ஜெனரேட்டர்களை பயன்படுத்துகிறார்கள்.
இதனால் டீசல் தேவை மிகவும் அதிகரித் துள்ளது. மின்வெட்டுக்கு முன்பு கடந்த ஜனவரி மாதம் 4.7 லட்சம் கிலோ லிட்டர் டீசல் விற் பனையானது. ஆனால் தற்போது கடந்த ஏப்ரல் மாதம் 5.4 லட்சம் கிலோ லிட்டர் டீசல் விற் பனையாகி உள்ளது.
கடந்த மாதம் தேவை மேலும் அதிகரித்தது. அதற்கு ஏற்றாற்போல் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து டீசல் விநியோகம் இல்லாததால் பெட்ரோல் பங்குகள் மூடப்படும் நிலையில் உள்ளன.
டீசல் 'ஸ்டாக்' இல்லை என்று பல பெட்ரோல் பங்குகளில் எழுதி வைக்கப் பட்டுள்ளது. அயனாவரம், பாலையா கார்டன், சோழிங்கநல்லூர், கேளம்பாக்கம், நுங்கம்பாக்கம் ஆகிய பகுதிகளில் உள்ள பெட்ரோல் பங்குகளில் கடந்த சில நாட்களாக டீசல் விற்பனை இல்லை.
சில பெட்ரோல் பங்குகள் கயிறு கட்டி மூடப்பட்டுள்ளன. பெரிய வணிக நிறுவனங்கள் மொத்தமாக டீசலை வாங்கி செல்வதால் ஓரளவு டீசல் விநியோகம் செய்யப்பட்டாலும் உடனடியாக விற்று தீர்ந்து விடுகிறது. இதனால் கனரக வாக னங்கள் டீசல் இல்லாமல் தவிக்கின்றன.
இதற் கிடையில் 2 கப்பலில் 60 ஆயிரம் மெட்ரிக் டன் டீசல் சென்னை துறைமுகத்துக்கு வந்துள்ளது. இதில் ஒரு கப்பல் சிங்கப்பூரில் இருந்து வந்துள்ளது. எனவே இன்னும் ஓரிரு நாளில் டீசல் தட்டுப்பாடு குறையும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.