புழல், ஜூலை 31-செல் போன் பேசியபடி பள்ளி குழந்தைகள் வாகனங்களை ஓட்டும் ஓட்டுநர் சங்கத்தில் இருந்து நீக்கப்படு வார் என்று தமிழ்நாடு தனியார் பள்ளி வாகன உரிமையாளர்கள், ஓட்டுநர் கள் சங்கம் தீர்மானம் நிறைவேற் றியது. செங்குன்றம் வட்டார போக்கு வரத்து அலுவலர் தரணி உத்தரவின் படி, சூரப்பட்டு வேலம்மாள் பள்ளியில் தமிழ்நாடு தனியார் பள்ளி வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் சங்கத்தின் ஆய்வு கூட்டம் நடந்தது.
அய்யப்பன் தலைமை வகித்தார். சுரேஷ்பாபு, அன்பு, சின்னதுரை, ஏழுமலை, நந்தகுமார், ரகுநாதன் முன்னிலை வகித்தனர். மாணவி ஸ்ருதி பலியான சம்பவத்திற்கு இரங் கல் தெரிவிக்கப்பட்டது. வண்டி களில் தாழ்ப்பாள் அமைக்கவும், குடித்து விட்டும், செல்போன் பேசிய படியும் ஓட்டுபவர்களை சங்கத்தி லிருந்து நீக்குவது, பள்ளி வாகனங் களில் நடத்துநர் நியமிப்பது, விபத்தில்லாமல் ஓட்டுவது, வேகத்தை கட்டுப்படுத்துவது என்பன போன்ற தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டன.