பள்ளி சேர்க்கையில் மத்திய அரசின் சட்டமும் பார்ப்பனத்தனப் பார்வையும்
Banner
முன்பு அடுத்து Page:

படகுகள் கடலில் முழ்கி 700 அகதிகள் பலி

 படகுகள் கடலில் முழ்கி 700 அகதிகள் பலி

ரோம், மே 31_ லிபியாவில் உள்நாட்டு போர் நடைபெ றுவதால் அங்கிருந்து வெளி யேறும் பொதுமக்கள் பட குகள் மூலம் புறப்பட்டு அய்ரோப்பிய நாடுகளில் தஞ்சம் புகுந்து வருகின்ற னர். அவர்கள் வரும் வழி யில் படகுகள் கடலில் மூழ்கி உயிரிழப்புகள் ஏற்படுகின் றன. இதுபோன்ற சம்பவம் இத்தாலி கடல் பகுதியில் சமீபத்தில் நடந்தது. லிபி யாவில் இருந்து 3 படகு களில் 800-க்கும் மேற்பட் டோர் புறப்பட்டு வந்தனர். மத்திய....... மேலும்

31 மே 2016 16:37:04

கலிதா ஜியா மீது மேலும் இரண்டு வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல்

கலிதா ஜியா மீது மேலும் இரண்டு வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல்

டாக்கா, மே 31_ வங்காள தேசத்தில் பிரதமர் ஷேக் ஹசினாவின் அரசாங்கத் துக்கு எதிராக முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவின் வங்காளதேச தேசியவாத (பி.என்.பி.) கட்சியின் தலை மையில் சுமார் 20 கட்சியினர் கடந்த ஆண்டு பெரிய அளவில் போராட் டம் நடத்தினர். மூன்று மாதம் நீடித்த இந்த போராட்டம் மற்றும் வன்முறையில் 100-க்கும் மேற்பட்டோர் கொல்லப் பட்டனர். ஏராளமானோர் காயம் அடைந்தனர். இது தொடர்பாக கலிதா ஜியா உள்ளிட்ட பலர்....... மேலும்

31 மே 2016 16:25:04

மோசமான வானிலையால் 500 இந்திய பக்தர்கள் சிக்கித் தவிப்பு

 மோசமான வானிலையால் 500 இந்திய பக்தர்கள் சிக்கித் தவிப்பு

காத்மண்ட், மே 31_ கைலாஷ் மானசரோவர் சென்ற இந்திய பக்தர்கள் சுமார் 500 பேர் நேபா ளத்தில் நிலவும் மோசமான வானிலையால் அந்த பகு தியை விட்டு செல்ல முடி யாமல் சிக்கித்தவிக்கின்ற னர். மானச ரோவர் ஏரி சீன எல்லையில் திபெத் பகுதியில் உள்ளது. இங்கு ஆண்டுதோ றும் ஏராள மான பக்தர்கள் யாத்திரை செல்வது வழக்கம். இந்த ஆண்டுக்கான யாத்திரை சீசன் தொடங்கி, பக்தர்கள் சென்ற வண் ணம்....... மேலும்

31 மே 2016 16:25:04

பெரியார் மணியம்மை பல்கலைக்கழகமும், சைபீரியன் மாநில புவிசார் தொழில்நுட்ப பல்கலைக்கழகமும் இணைந்து புரி…

பெரியார் மணியம்மை பல்கலைக்கழகமும், சைபீரியன் மாநில புவிசார் தொழில்நுட்ப பல்கலைக்கழகமும் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம்

பெரியார் மணியம்மை பல்கலைக்கழகமும், சைபீரியன் மாநில புவிசார் தொழில்நுட்ப பல்கலைக்கழகமும் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் சைபீரியப் பல்கலைக்கழக மாணவர்களுக்கு பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தின் சார்பில், தந்தை பெரியார் அவர்கள் 1932இல் ரஷ்யா சென்ற கட்டுரை அடங்கிய குறிப்பேடு நினைவுப் பரிசாக வழங்கப்பட்டது ரஷ்யா சென்றிருந்த இந்திய - ரஷ்ய பொருளாதார மற்றும் தொழில்களின் கூட்டுக்குழுவின் ஒரு பணியாக கல்வி நிறுவனங்களுக்கிடையே தத்தம் கல்விப் பணிகள், தொழில்நுட்பங்கள் மற்றும் ஆராய்ச்சிப் பணிகள் குறித்து புரிந்துணர்வு....... மேலும்

31 மே 2016 15:44:03

பேஸ்புக் லைவ் மூலம் சர்வதேச விண்வெளி மய்யத்தில் உள்ளவர்களுடன் உரையாடல்

 பேஸ்புக் லைவ் மூலம் சர்வதேச விண்வெளி மய்யத்தில் உள்ளவர்களுடன் உரையாடல்

வாஷிங்டன், மே 30_ அமெ ரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் ஒன்றிணைந்து விண்வெளியில் சர்வதேச ஆய்வு மய்யத்தை அமைத்து நிர்வகித்து வருகின்றன. இந்த ஆய்வு மய்யத்துக்கு செல்லும் விண்வெளி வீரர் கள் அங்கு தங்கியிருந்தபடி புவியில் ஏற்படும் மாற்றங் கள், செவ்வாய் உள்ளிட்ட கிரகங்களில் மனிதர்கள் வாழ்வதற்கான சாத்தியக் கூறுகள் தொடர்பாக ஆய்வு செய்து வருகின்றனர். இந்நிலையில், தற்போது விண்வெளியில் தங்கியி ருக்கும் வீரர்களான டிம் கோப்ரா மற்றும் ஜெப் வில்லியம்ஸ்....... மேலும்

30 மே 2016 18:06:06

பள்ளி சேர்க்கையில் மத்திய அரசின் சட்டமும் பார்ப்பனத்தனப் பார்வையும்

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மத்திய அரசு இயற்றிய 2009 இலவச கட்டாயக் கல்வி சட்டம் அரசமைப்புச் சட்டத்தின்படி செல்லத் தக்கது என்று உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அனைவரும் ஆர்வத்துடன் வரவேற்றனர் என்றாலும், நகரில் உள்ள புகழ் பெற்ற பள்ளிகளில் பயிலும், எளிதில் உணர்ச்சி வயப்படும்  மாணவர்களின் கண்ணோட்டம்  வேறு பட்ட மனநிலைகளைக் கொண்டதாக இருப்பதாகவே தோன்றுகிறது. குறைந்த அளவு கல்வியறிவு பெற்றிருப்பது, சமூகப் பொருளாதாரப் பாகுபாடு ஆகிய குறைபாடுகளைக் களைவதில் இந்த நடவடிக்கை கொள்கை அளவில் பாராட்டத்தக்கது என்றாலும், நடைமுறைப்படுத்தும் நிலையில் குழப்பங்களும், முரண்பாடுகள் நிலவவே செய்கின்றன. பெரும்பாலான மாண வர்கள் அவர்கள்  எங்கள் பள்ளி களில் சேர்வதால் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றி எண்ணி அச்சம் கொள்பவர் களாகவே உள்ளனர்.

மாணவர்களும், ஆசிரியர்களும் புதிய சூழலுக்கு ஏற்றவாறு தங்களை மாற்றிக் கொள்ள வேண்டியிருக்கும் என்றும், ஆசிரியர்களின் பணிச்சுமையை அது கூட்டும் என்றும் ஆண்டாள் வெங்கட சுப்பாரெட்டி சீமாட்டி பள்ளி மாணவர் நவ்நீத் பட்டாட் கருதுகிறார். எங்களுக் கிடையே நிலவக் கூடிய தகவல் பரிமாற்ற இடைவெளி எங்கள் அனைவரையும் பெரிதாகப் பாதிக்கும்; சில நேரங்களில், புதிய மாணவர்களுக்காக ஆசிரியர்கள் சொன்னதையே பல முறை திருப்பித் திருப்பிச் சொல்ல வேண்டியிருக்கும். நான் ஏற்கெனவே அறிந்திருப்பவைகளை மறுபடியும் கேட்க நான் ஏன் பள்ளிக்குச் செல்லவேண்டும் என்று அவர் கேட் கிறார்.

புதிய மாணவர்களுக்கான கூடுதல் வகுப்புகள், கூடுதல் இருக்கைகள், கூடுதல் வசதிகள் ஏற்படுத்தப் படுமா? அவைகளுக்கான கூடுதல் செலவை எனது பள்ளி நிர்வாகம் எவ்வாறு  சமாளிக்கும்? கூடுதல் கட்டணத்தை எனது பெற்றோரால் அளிக்க முடியுமா? என்பவை அவரை கவலை கொள்ளச் செய்கின்றன. எல்லோரும் எல்லாப் பள்ளிகளுக்கும் செல்ல வேண்டும் என்று வலியுறுத்துவதற்கு பதிலாக அரசு பள்ளிகளைக் கூடுதலாக ஏற்படுத்தவோ அல்லது அவர்களின் வாழ்வாதாரத்திற்கு ஊக்கம் அளிக்கவோ ஏன் அரசு முயலக்கூடாது என்று அவர் கேட்கிறார்.

வேறுவகையான அச்சங்களையும் பி.எஸ்.பள்ளி மாணவர் நாராயணன் போன்றோர் கொண்டுள்ளனர்: எங்கள் பள்ளிக்கு என்று சில கலாச்சாரம் இருக்கிறது.  அது போன்ற கலாச்சாரப் பின்னணி கொண்ட மாணவர்கள் மட்டுமே இங்கு வருவார்கள் என்று எண்ணி எங்களை எங்கள் பெற்றோர் இங்கு அனுப்புகிறார்கள்.  பல்வேறுபட்ட பின்னணி கொண்ட மாணவர்களைப் பற்றி நாங்கள் அறிந்து கொள்வது நல்லதுதான்.  ஆனால் நாங்கள் எப்படி வரவேண்டும் என்று எங்கள் பெற்றோர்கள் விரும்புகிறார்களோ அப்படி நாங்கள் வராமல் போகக்கூடும். எடுத்துக்காட்டாக நாங்கள் வீடுகளில் சந்தியாவந்தனம் செய்கிறோம்.  புலால் உணவை நாங்கள் பள்ளிக்குக் கொண்டு வருவதில்லை. இப்போது உலகை நாங்கள் வேறு விதமாகத்தான் எதிர் கொள்ள வேண்டும் என்று அவர் கூறுகிறார்.

டக்கத்தில் அனுசரித்துச் செல்வதில் சில பிரச்சினைகள் தோன்ற லாம். ஆனாலும் இரு பிரிவு மாணவர் களுக்கும், ஒருவரின் வாழ்க்கை முறையைப் பற்றி மற்றவர்  அறிந்து கொள்ள இது உதவும். ஆனால் இப்போது எல்லாமே சமப்படுத்தப்பட்டு விடுவதால், கல்லூரிகளில் இட ஒதுக்கீட்டு முறையை அரசு நீக்கி விடுமா? என்று பி.எஸ்.பி.பி. பள்ளி மாணவர் கேட்கிறார்.

இந்த சட்டத்தை வரவேற்கும் சங்கரா பள்ளி மாணவர் கவுசிக் சாமிநாதன், அது நடைமுறைப் படுத்தப்படும் முறையைப் பற்றி கவலை கொள்கிறார். வகுப்பறை யில் அவர்கள் பின்தங்கிவிடக்கூடாது என்பதற்காக ஆங்கிலத்திலும், அடிப் படைக் கணிதத்திலும் புதிய மாணவர் களுக்கு ஓராண்டு பயிற்சி அளிப்பது சரியாக இருக்கும். கல்வியின் தரம் குறைந்து போனால், தற்போதுள்ள மாணவர்கள்தான் இழப்பவர்களாக இருப்பார்கள். புதிய மாணவர்களை இப்பள்ளிகளில் சேர்க்க வலியுறுத்துவதை விட, தனியார் பள்ளி ஆசிரியர்களை, அரசு பள்ளி ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்க அனுப்பலாம். இதனால் இரு சாராரும் பயனடைவார்கள்; எவருக்கும் இழப்பு ஏற்பாடாது என்று அவர் கூறுகிறார்.

புகழ் பெற்ற பள்ளிகளில் ஒரே மாதிரியான சீருடை அணியும் மேல்ஜாதி, மேல்வருவாய்ப் பிரிவு பின்னணி கொண்ட மாணவர்களை மட்டுமே சேர்ப்பதன் மூலும் பள்ளிகளையே சமூகத்திலிருந்து தனிமைப் படுத்தி விடுகின்றனர் என்று எழுத்தாளரும், சமூக வரலாற்றியலாளரு மான வி.கீதா கூறுகிறார். தங்களைச் சுற்றியுள்ளவைகளைப் பற்றி மட்டுமே மாணவர்கள் கற்றறிந்து கொள்கின்றனர்.  பெரும்பாலான பள்ளிகளில் பலவகையி லானவற்றைக் கற்கும் சூழ்நிலை நிலவுவது இல்லை என்று அவர் கூறுகிறார். ஆனால், குழந்தைகள் பற்றி நம்பிக்கை நிறைந்தவராக அவர், ஒருவருடன் ஒருவர் அனுசரித்துப் பழகும் வழியை  இறுதியில் அவர்கள் எப்படியோ கண்டு பிடித்துக் கற்றுக் கொள்கின்றனர்  கூறுகிறார்.

இந்த சட்டம் நடைமுறைப்படுத்துவதே மேலானது என்று எண்ணும் சில மாண வர்களும் இருக்கின்றனர். மொழிகளை யும், பாடங்களையும் மட்டும் ஒன்றாகப் படிப்பது மட்டுமல்லாமல், விளையாட்டு களிலும் அது மாணவர்களை ஈடுபடுத் தும் என்று  டான்பாஸ்கோ மாணவர் பகவதி சம்பத் கூறுகிறார்.

எங்கள் பள்ளி வகுப்பறைகளில் மாணவர்கள் பல வயதுப் பிரிவுகளில் இருக்கிறார்கள். இப்போது வேறு பட்ட பின்னணியில் இருந்து வரும் மாணவர் கள் இருப்பார்கள் என்று அபாகஸ் மாண்டிசோரி பள்ளி மாணவர் சிறீநிதி மதுசூதனன் கூறுகிறார்.

அவர்களுக்கு எதுவுமே தெரியாது என்று நாங்கள் தொடர்ந்து குறை கூறிக்கொண்டே இருக்கிறோம். எங் களுக்கிடையே இருக்கும் இடை வெளியைக் குறைக்கும் ஒரு வழியாகும் இது. அவர்கள் எங்களிடம் இருந்து கற்றுக் கொள்ள, நாங்கள் அவர்களிட மிருந்து மேலும் எங்களுக்குத் தெரியாத வைகளை கற்று அறிந்து கொள்வோம் என்று அவர் கூறுகிறார்.(தி ஹிந்து,  14.4.2012)

குறிப்பு: இந்து ஏட்டின் தலைப்பு வேறு விதமானது என்றாலும் - கட்டுரையின் உள்ளாழத்தில் குடி கொண்டிருக்கும் உணர்வை வெளிப்படுத்தும் வகையில் தலைப்பு நம்மால் கொடுக்கப்பட்டுள்ளது..
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

Comments  

 
#1 Ajaathasathru 2012-04-18 14:59
அரசு பள்ளியாயிருந்தா லும் , தனியார் பள்ளியாயிருந்தா லும் ஏழை பணக்காரன் வித்தியாசமில்லா மல், அந்தந்த பகுதி மக்களுக்கே முன்னுரிமை கொடுக்க வேண்டும்! SC /ST , OBC இட ஒதுக்கீட்டுக்கு ள் , உள் ஒதுக்கீடாக ஏழை மாணவருக்கு முன்னுரிமை தர வேண்டும்! பிற உயி ஜாதி மாணவர்களை, ஏழை மாணவர் என்ற போர்வையில் நுழைத்துவிட வாய்ப்பு உள்ளது! இட ஒதுக்கீடாளர்கள் கவனிக்கவும்!
இக்கருத்துக்கு உங்கள் கருத்து .?
 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner