திருவிழாச் செய்திகளும் சமூகமும்
முன்பு அடுத்து Page:

மலேசிய ஷரியா நீதிமன்றத்தில் 2 பெண்கள் நீதிபதிகளாக நியமனம்

மலேசிய ஷரியா நீதிமன்றத்தில் 2 பெண்கள் நீதிபதிகளாக நியமனம்

மலேசிய ஷரியா நீதிமன்றத்தில் 2 பெண்கள் நீதிபதிகளாக நியமனம் ஷரியா, ஜூன் 29 மலேசிய ஷரியா உயர் நீதிமன்ற நீதிபதிகளாக இரண்டு பெண்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். நூர் ஹுதா ரோஸ்லான் 40, நென்னி சுகைதா சம்சுதீன் 41, ஆகிய இருவர் ஷரியா உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக் கப்பட்டுள்ளனர். இஸ்தானா புக்கிட் கயன்கன் நகரில் நடை பெற்ற நிகழ்ச்சியில் சிலாங்கூர் மாகாண சுல்தான் ஷராபுதீன் இத்ரீஸ் ஷா, அவ்விருவருக்கும் நீதிபதி நியமனத்துக்கான ஆணைகளை....... மேலும்

29 ஜூன் 2016 16:00:04

காற்று மாசுபடுவதால், ஆண்டுக்கு 65 லட்சம் பேர் மரணம்

காற்று மாசுபடுவதால், ஆண்டுக்கு 65 லட்சம் பேர் மரணம்

காற்று மாசுபடுவதால், ஆண்டுக்கு 65 லட்சம் பேர் மரணம் லண்டன், ஜூன் 29 சர்வதேச எரிசக்தி ஏஜென்சி சமீபத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கார்பன்-டை-ஆக்சைடு காரணமாக காற்று மாசுபடுகிறது. அதனால் ஏற்படும் நோய் களால் சர்வதேச அளவில் ஆண் டுக்கு 65 லட்சம் பேர் மரணம் அடைகின்றனர். அவற்றில் வீட்டிற்குள் ஏற்படும் காற்று மாசினால் 35 லட்சம் பேரும், வெளிகாற்று மாசுபடுவதால் 30 லட்சம் பேரும் அதில்....... மேலும்

29 ஜூன் 2016 15:58:03

இஸ்தான்புல் விமான நிலையத்தில் தீவிரவாதிகள் தாக்குதல்: 36 பேர் பலி

இஸ்தான்புல் விமான நிலையத்தில் தீவிரவாதிகள் தாக்குதல்: 36 பேர் பலி

இஸ்தான்புல் விமான நிலையத்தில் தீவிரவாதிகள் தாக்குதல்: 36 பேர் பலி இஸ்தான்புல், ஜூன் 29 துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் உள்ள சர்வதேச விமான நிலை யத்துக்கு நேற்றிரவு சுமார் 10 மணியளவில் டாக்சியில் வந்த மூன்றுபேர் பயணிகள் வருகை பகுதி கூடத்துக்குள் நுழைந்த னர். அவர்களில் ஒருவன் இயந் திர துப்பாக்கியால் அங்கிருந் தவர்களை நோக்கி சரமாரியாக சுட்டான். இதனால் பீதியடைந்த மக் கள் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்று நுழைவு வாயிலை....... மேலும்

29 ஜூன் 2016 15:56:03

ஏழ்மையில் வாடும் குழந்தைகள் மீது கவனம் செலுத்த வேண்டும்: யுனிசெப் வேண்டுகோள்

ஏழ்மையில் வாடும் குழந்தைகள் மீது கவனம் செலுத்த வேண்டும்: யுனிசெப் வேண்டுகோள்

ஏழ்மையில் வாடும் குழந்தைகள் மீது கவனம் செலுத்த வேண்டும்: யுனிசெப் வேண்டுகோள் வாஷிங்டன், ஜூன் 29 யுனிசெப் என்பது அய்க்கிய நாடுகள் குழந் தைகள் அவசர நிதி அமைப்பு ஆகும். இந்த அமைப்பானது உலகம் முழுவதும் உள்ள குழந்தைகளின் மேம்பாட்டிற் காக பணியாற்றி வருகிறது. யுனிசெப் அமைப்பானது, உலக நாடுகளின் குழந்தைகள் குறித்த ஆண்டு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், ஏழ் மையில் வாடும் குழந்தைகள் மீது உலக நாடுகள் கண்டிப்பாக கவனம் செலுத்த....... மேலும்

29 ஜூன் 2016 15:55:03

அய்.எஸ். அமைப்பிடம் இருந்து பலூஜா நகரம் மீட்கப்பட்டதாக ஈராக் பிரதமர் அறிவிப்பு

  அய்.எஸ். அமைப்பிடம் இருந்து பலூஜா நகரம் மீட்கப்பட்டதாக ஈராக் பிரதமர் அறிவிப்பு

பலூஜா, ஜூன் 28 அய்.எஸ். பிடியில் இருந்த முக்கிய நகரமான பலுஜாவை ஈராக் படையினர் மீட்டு உள்ளதாக ஈராக் பிரதமர் ஹைதர் அல் அபதி அறிவித்துள்ளார். சிரியா மற்றும்  ஈரக்கின் சில பகுதிகளை கைப்பற்றி உள்ள அய்.எஸ் அமைப்பினர் அதனை இஸ்லாமிய நாடாக அறிவித்து உள்ளனர். உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாக உள்ள இவர்களுக்கு எதிராக அமெரிக்க கூட்டுப்படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். தற்போது அய்.எஸ். பிடி யில் இருந்த முக்கிய நகரமான பலுஜாவை....... மேலும்

28 ஜூன் 2016 16:10:04

திருவிழாச் செய்திகளும் சமூகமும்

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

- முனைவர் வா.நேரு, தலைவர், மாநில பகுத்தறிவாளர் கழகம்

சென்ற மாதம் +2 மாணவர்களுக்கு தேர்வு ஆரம்பித்து சில நாட்களுக்கு முன் தான் முடிந்திருக்கிறது. 10-ஆம் வகுப்பு தேர்வுகள் ஆரம்பித்து இப்போது நடந்து கொண்டிருக்கின்றன. 6-ஆம் வகுப்பு முதல் 9-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகளுக்கு இனிமேல்தான் முழு ஆண்டுத் தேர்வுகள் நடக்க இருக் கின்றன.  படிக்கும் மாணவ மாணவி களைப் பாதிக்கும் வகையிலே ஒலி பெருக்கிகள் ஊர் தோறும் அலறிக் கொண்டிருக்கின்றன. மாதந்தோறும் பண்டிகைகளும், திரு விழாக்களும் தமிழர்களின் மானத்தையும், பணத்தையும் அழித்தாலும் இந்த்ப் பங்குனியில் வரும் உத்திரமும் பொங்கலும் ஆங்கிலத்தில் கொஞ்சம் ஓவரா இல்லே என்று சொல்லுவார்களே, அதனைப் போலவே கொஞ்சம் ஓவராகவே தமிழர் களின் மானத்தையும், உழைப்பினால் கிடைத்த பொருளையும் வாங்கும் திரு விழாக்களாக இருக்கின்றன. காளி யம்மன், மாரியம்மன், முத்தாலம்மன், இப்படி பல்வேறு பெயர்களில், அதனைப் போலவே பங்குனி உத்திரம், கொடை, பங்குனிப் பொங்கல் என்று பங்குனி மாதத்தில் வரும் செவ்வாய், புதன், வியாழன், சில ஊர்களில் வெள்ளி தொடங்கி என்று இந்தத் திருவிழாக்கள் நடக்கின்றன. நம்மைப் போன்ற சமுதாய நலன் இயக்கங்கள் ஆயிரம் முறை அனுமதி வாங்கியதை உறுதி படுத்திக் கொண்டு பின்பு 10 மணிக்குள் முடிக்க வேண்டு மென்றால் நமது பேச்சாளர்களிடம் கையைக் காட்டி, கடிகாரத்தைக் காட்டி, மைக் செட்டுக்காரரைக் காட்டி எவ்வளவு முக்கியமான பிரச்சனையாக இருந் தாலும், சுருங்கச்சொல்லி விளங்க வையுங்கள் என்று வேண்டுகோள் வைத்து கூட்டத்தை முடிக்கின்றோம். ஆனால் திருவிழா என்று சொல்லி நீங்கள் நடத் தினால்,10 மணிக்குள்ளா, தேவையே இல்லை, விடிய விடிய நீங்கள் நடத்தலாம்,.  நடக்கும் பாதையை மறிக்கலாம், நோயாளி படுத்திருக்கும் வீட்டிற்கு நேரே மைக்கைக் கட்டி விடிய விடிய கத்த விடலாம், ஆபாசக் குத்தாட்டத்தை ஏற்பாடு செய்யலாம், நடு இரவில் சாமி ஊர்வலம் என்று சொல்லி காது வெடிக்கும் அளவுக்கு பட்டாசுகளைக் கொளுத்தலாம்  ஏனென்றால் இது பக்தி சம்பந்தப்பட்ட விசயம், யாரும் தடுக்கக் கூடாது, போலீஸ் வரலாம், ஆனால் கேள்வி கேட்கக்கூடாது, எந்த கண்டிசனும் போடக்கூடாது.இதுதான் இன்றைய தமிழகத்தின்  நிலை.  ஒரு கல்லை அம்மன் என்று சொல்லி தூக்கி வைத்துக்கொண்டு அடிக்கும் கூத்துகள் பார்க்க சகிக்கவில்லை நம்மால். இவ்வாறு நான் சொன்னவுடன் `பக்த கோடிகள் சிலர் வருத்தப்படக்கூடும். சனிக்கிழமை (7.4.2012) தினத்தந்தி (மதுரை) நாளிதழில் வந்த செய்திகள் சிலவற்றைத் துணைக்கு வைத்துக்கொள் கின்றேன். முதல் செய்தி கெங்குவார்பட்டி கோவில் திருவிழாவில் போலீஸ் இன்ஸ் பெக்டர் மீது தாக்குதல் ( பக்கம் 8).

தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே கெங்குவார்பட்டியில் முத்தாலம் மன் கோவில் உள்ளது, இக்கோவிலில் பங்குனித் திருவிழா நடைபெற்று வரு கிறது.  மஞ்சள் நீராட்டத்தின்போது ஒரு சிலர் தப்பு மேளம் அடித்தபடி வந்தனர். உடனே அந்தப்பிரிவை சேர்ந்த மற்ற வர்கள் கரகம் எடுத்து வருபவர்கள் மட் டுமே ஆடிவர வேண்டும் என எச்சரித் தனர். அதனால் அந்தப்பிரிவினருக்கு இடையில் மோதல் ஏற்பட்டது, இதனை அடுத்து காவலர் அங்கு விரைந்து வந்து தகராறில் ஈடுபட்டவர்களைத் தடியடி நடத்திக் கலைத்தனர். அப்போது கூட்டத் தில் நின்ற சிலர் கற்களை வீசினார்கள் . அதில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்த், சப்-இன்ஸ்பெக்டர் பாண்டிய ராஜன் ஆகியோர் தலை மற்றும் கைகளில் கற்கள் தாக்கி காயம் அடைந்தனர் இதன் காரணமாக கெங்குவார்பட்டியில் பதற்ற மான சூழ்நிலை நிலவுகிறது முத்தாலம் மன் திருவிழாவால் ஊரில் கோஷ்டி கலாட்டா, மண்டை உடைப்பு , கைது எல்லாம் யார் உபயம் எல்லாம் அந்த ஆத்தா முத்தாலம்மன் உபயம்தான் ஒரு பகுதியில் திருவிழா நடத்துகின்றார்கள் என்றால் காரியக்காரர்கள் சிலர் களத் தில் - பண வசூலில் இறங்கிவிடுகின் றார்கள். ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.1000 வரி. இது சட்டம் போல, கட்டாயம் கட்ட வேண்டும், ஆயரமாயிரமா வசூலித்து என்ன நிகழ்ச்சி? குடிக்க நல்ல  தண்ணிர் இல்லை குளம் வெட்டப்  போகின் றார்களா? ஊரில் உள்ள பெரிசுகள் பலருக்கு குடிக்க கஞ்சி ஊற்ற நாதி யில்லை, ஊர்ப் பொதுவிலிருந்து ஊற்றப் போகின்றார்களா? என்னதான் பண் றாங்க பணத்தை வசூல் பண்ணி? சரி ஒருத்தருக்கும் கொடுக்க விருப்பமில்லை, ஓஞ்சாமியுமாச்சு, ஓந் திருவிழாவுமாச்சு, நான் ஆட்டைக்கு வரலைன்னு சொல்லி  வரியைக் கொடுக்கவில்லையென்றால் என்ன செய்வார்கள் ?

இதோ  அடுத்த செய்தி புதுக் கோட்டை மாவட்டம்  பொன்னமராவதி தாலுகா கரையான்பட்டியைச் சேர்ந்தவர் வேலுச்சாமி. ஓய்வு பெற்ற ராணுவ வீரர். இவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறி இருப்பதாவது எங்கள் கிராமத்தில் பத்திர காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வருகிற 13ஆம் தேதி திருவிழா நடக்க உள்ளது. இதையொட்டி கிராமிய ஆடல் ,பாடல் பல்சுவை நிகழ்ச்சி என்ற பெயரில் ஆபாச பாலியல் வக்கிர நடனத்தை நடத்த விழா கமிட்டியினர் திட்டமிட்டுள்ளனர். இதற்கு வரி கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர், இதற்கு நாங்கள் மறுத் தோம். இதனால் பழனியாண்டி மகன் சின்னாண்டி தலைமையில் கட்டப் பஞ்சாயத்துக்கூடி என்னையும், எனது தந்தை பழனிக்கண்ணு , எனது உறவினர் ராஜா ஆகியோரை ஊரை விட்டு ஒதுக்கி வைப்பதாகவும் , எங்களுடன் ஊரில் உள்ள வேறு யாரும் பேசக்கூடாது என்றும் உத்தரவிட்டனர். (பக்கம் 26). வரி கொடுக்கணும், வரி கொடுக்கலைன்னா ஊரை விட்டு ஒதுக்கி வைப்பாங்களாம்..
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner