Banner
முன்பு அடுத்து Page:

பாகிஸ்தானின் குவாடர் துறைமுகம் சாலை, ரயில், விமானப் பாதை மூலம் இணைக்க சீனா ஒப்பந்தம்

பாகிஸ்தானின் குவாடர் துறைமுகம் சாலை, ரயில், விமானப் பாதை மூலம் இணைக்க சீனா ஒப்பந்தம்

இஸ்லாமாபாத், மே 23- பாகிஸ்தானின் முக்கிய துறைமுகங்களில் ஒன் றான குவாடர் துறை முகத்தை கையாளும் ஒப்பந்தத்தை சீனா கடந்த ஆண்டு பெற்றது. எண்ணெய் வளம் மிக்க அரபு நாடுகளில் இருந்து பெட்ரோலிய கச்சா எண்ணெய் ஏற்றி வரும் கப்பல்களுக்கு இந்த துறைமுகம் தான் மிக குறைந்த தூரத்தில் உள்ளது என்பது குறிப் பிடத்தக்கது. ஹோர்மஸ் ஜல சந்திப்பு பகுதியில் இந்த துறைமுகம் அமைந்துள் ளது. இங்கிருந்து மேற்கு சீனாவின் துறைமுகங் கள்....... மேலும்

23 மே 2013 16:05:04

அமெரிக்காவில் சூறாவளி: 91 பேர் சாவு

அமெரிக்காவில் சூறாவளி: 91 பேர் சாவு

அமெரிக்கா, மே 22- அமெரிக்காவில் ஒக்ல ஹோமா நகரில் திங்கள் கிழமை வீசிய பெரும் சூறாவளியில் சிக்கி 20 குழந்தைகள் உள்பட 91 பேர் உயிரிழந்தனர். 233 பேர் காயமடைந்தனர். ஒக்லஹோமா நகரின் மூர் பகுதியில் மணிக்கு 320 கி.மீ வேகத்தில் வீசிய சூறாவளியால் அந்நக ரமே சின்னாபின்னாமாகி விட்டது. ஏராளமான வீடுகள், பள்ளிகள் முற் றிலும் சேதமடைந்தன. இச்சூறாவளியால் 20 குழந்தைகள் உள்பட 91 பேர் உயிரிழந்தனர். 70 குழந்தைகள் உள்பட....... மேலும்

22 மே 2013 15:51:03

சவுதி அரேபியாவில் இந்திய பாஸ்போர்ட் தொடர்பான சர்ச்சை முடிவுக்கு வந்தது

சவுதி அரேபியாவில் இந்திய பாஸ்போர்ட் தொடர்பான சர்ச்சை முடிவுக்கு வந்தது

ரியாத், மே 22- புதிய பாஸ்போர்ட்களுடன் இந்தியாவில் இருந்து எங்கள் நாட்டிற்கு வேலை செய்ய வரும் இந்தியர் களை அனுமதிக்க முடி யாது என சவுதி அரே பியா அரசு சமீபத்தில் அறிவித்தது. பழைய இந்திய பாஸ் போர்ட்களில் சம்பந் தப்பட்ட நபர்களின் புகைப்படம் இரண் டாம் பக்கத்தில் இடம் பெற்றிருந்தது. ஆனால், புதிய பாஸ்போர்ட்டில் மூன்றாம் பக்கத்தில் புகைப்படம் இடம் பெற்றுள்ளது. இவ்வகையில் மூன் றாம் பக்கத்தில் புகைப் படம் இடம்பெற்றுள்ள....... மேலும்

22 மே 2013 15:43:03

சன்னி-ஷியா பிரிவினரிடையே மோதல்: 112 பேர் பலி

சன்னி-ஷியா பிரிவினரிடையே மோதல்: 112 பேர் பலி

பாக்தாத், மே 21- ஈராக்கில் பெரும்பான்மையாக வசிக்கும் சன்னி பிரிவு முஸ்லிம்களுக்கும் குறைவாக உள்ள ஷியா பிரிவு முஸ்லிம்களுக்கும் இடையே சமய நம்பிக்கையில் வேறுபாடு காரணமாக மோதல்கள் நடந்து வருகின்றன. ஈராக்கை ஆண்டு வரும் ஷியா முஸ்லிமான நவுரி மாலிகியின் ஆட்சிக்கு எதிராக சன்னி பிரிவு மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால், அரசுக்கும், சன்னி பிரிவு ஆயுதம் ஏந்தியவர்களுக்கும் இடையே சமீப....... மேலும்

21 மே 2013 15:27:03

20 வினாடிகளில் செல்போனை சார்ஜ் செய்யக்கூடிய கருவி அமெரிக்கவாழ் இந்திய மாணவி சாதனை

20 வினாடிகளில் செல்போனை சார்ஜ் செய்யக்கூடிய கருவி அமெரிக்கவாழ் இந்திய மாணவி சாதனை

வாஷிங்டன், மே 21- 18 வயதான அமெரிக்க வாழ் இந்தியப் பெண் ஒருவர், 20 வினாடிகளில் செல் போனை சார்ஜ் செய் யக்கூடிய கருவியைக் கண்டுபிடித்துள்ளார். இதன் மூலம் மிகப் பெரிய வர்த்தக நிறுவனமான கூகுளின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்துள்ளார். கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சர கோட்டா நகரில் வாழ்ந்து வரும் ஈஷா கரே என்ற பெண் இந்த சாதனை யைப் புரிந்துள்ளார். இதற்காக, இண்டெல் அறக்கட்டளை அளித்த இளம்....... மேலும்

21 மே 2013 15:25:03

லஞ்ச வழக்கு: 3 சீன ஆராய்ச்சியாளர்கள் கைது

லஞ்ச வழக்கு: 3 சீன ஆராய்ச்சியாளர்கள் கைது

நியூயார்க், மே 21- அமெரிக்காவின் நியூ யார்க் பல்கலைக் கழ கத்தில், அமெரிக்க அர சின் நிதி உதவி பெற்று, காந்த ஒத்திசைவு குறித்த ஆராய்ச்சி ஒன்றில், மூன்று சீன நாட்டு ஆராய்ச்சி யாளர்கள் ஈடுபட்டுள்ள னர். இந்த ஆராய்ச்சி பற் றிய தகவல்களை வெளி யிட, அரசு நிதி உதவி பெறும் சீன ஆராய்ச்சி நிறுவனத்திடமிருந்து லஞ்சம் பெற்றதாக அவர் கள் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. திங்களன்று, மன் ஹாட்டன்....... மேலும்

21 மே 2013 15:23:03

அரசியல் கட்சிகள் பேரணி நடத்த தடை

அரசியல் கட்சிகள் பேரணி நடத்த தடை

டாக்கா, மே 20- வங்காள தேச சுதந்திரத்திற்காக 1971ஆம் ஆண்டு நடந்த போரில் ஜமாத் இ இஸ்லாமி கட்சியினர் அராஜகத்தில் ஈடுபட்டனர். தற்போது அவர்களுக்கு எதிராக வரும் தீர்ப்பை கண்டித்து, அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகிறார்கள். மேலும் அவர்கள் நடத்தி வரும் போராட்டத் திற்கு இந்த மாதம் முன்னதாகவே 28 பேர் கொல்லப்பட்டனர். சில அரசியல் கட்சிகளின் நிகழ்ச்சிகள் என்ற பெயரில், வங்க....... மேலும்

20 மே 2013 16:05:04

கூடுதல் சம்பளம் வேண்டி தொழிலாளர்கள் அரிய போராட்டம்

கூடுதல் சம்பளம் வேண்டி தொழிலாளர்கள் அரிய போராட்டம்

துபாய், மே 20- அரே பிய வளைகுடா நாடுகளில் தெற்கு ஆசிய நாடுகளான இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம், நேபாளி லிருந்துதான் அதிகமா னோர் ஒப்பந்த அடிப் படையில் வேலைபார்த்து வருகின்றனர். இவர்கள் அனைவ ரும் விடுதி பணி இடங் களில் தான் தூரத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள னர். அப்படி, துபாயில் பல்லாயிரக்கணக்கா னோர் மிகப்பெரிய கட் டுமானக் கம்பெனிகள், அரேப்டெக் கம்பெனி யில் வேலைபார்த்து வரு கின்றனர். இவர்கள் அதிகம் சம் பளம் உள்ளிட்ட....... மேலும்

20 மே 2013 15:57:03

அமெரிக்கத் தூதரக அதிகாரி ரஷ்யாவை விட்டு வெளியேற்றம்

அமெரிக்கத் தூதரக அதிகாரி ரஷ்யாவை விட்டு வெளியேற்றம்

மாஸ்கோ, மே 20- ரஷ்ய நாட்டின் புலனாய் வுத் துறை அதிகாரி ஒரு வரை உளவு வேலையில் ஈடுபட வைக்க முயற்சி செய்ததாகக் கூறி, கைது செய்யப்பட்ட அமெரிக் கத்தூதரக அதிகாரி, ரயான் போகில் ரஷ் யாவை விட்டு அனுப்பப் பட்டதாக ரஷ்யத் தொலைக்காட்சி இன்று தகவல் வெளியிட்டுள்ளது. மாஸ்கோவில் உள்ள ஷ்ரெமெட்யெவொ விமான நிலையத்தின் பாதுகாப்பு சோதனை யைக் கடந்து அவர் செல் வதை, அந்நிறுவனம் காட்சியாக வெளியிட்டு உள்ளது........ மேலும்

20 மே 2013 15:56:03

பழைமைவாத சவூதி நாட்டின் முதல் பெண்: எவரெஸ்ட்டில் ஏறி சாதனை

பழைமைவாத சவூதி நாட்டின் முதல் பெண்: எவரெஸ்ட்டில் ஏறி சாதனை

ஜெட்டா, மே 19- அரேபிய நாடான சவூதியில் பெண்கள் விளையாட்டில் கலந்துகொள்ள கடுமையான தடைகள் உள்ளன. அப்படிப்பட்ட நாட்டிலிருந்து முதலாவதாக ராஹா முஹாராக் (25) என்ற ஒரு பெண், நேபாளத்தில் உள்ள உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் (8848 மீட்டர்) ஏறி நேற்று சாதனை படைத்தார். ஷார்ஜா பல்கலைக்கழகத்தில் பட்டம் பயின்று வரும் ராஹா, கடந்த ஏப்ரல் 13ஆம் தேதி முதல்....... மேலும்

19 மே 2013 14:57:02

பார்ப்பனரைச் சேர்த்தது ஏன்?

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தோழர்களே! பார்ப்பனர்களைச் சேர்த்துக் கொள்ளலாமா? என்கின்ற பிரச்சினையானது ஜஸ்டிஸ் கட்சியில் 1926ஆம் வருஷம் முதல் பேசப்பட்டு வருகிறது.

உதாரணமாக மதுரை மகாநாட்டில் பனகால் அரசர் பார்ப்பனர்களைச் சேர்த்துக் கொள்ள வேண்டுமென்று ஆசைப்பட்டு, அதற்கு ஒரு கமிட்டியை நியமித்துப் பார்ப்பனர்கள் விண்ணப்பங்களை கமிட்டி பரிசோதிக் கலாம் என்றும் பூணூல் இல்லாதவர்களைச் சேர்த்துக் கொள்வது என்கின்ற நிபந்தனை வைக்கலாமா என்றும் மற்றும் பலவித நிபந்தனைகளின் மீதாவது சேர்க்கலாம் என்றும் சொன்னார். பிறகு கோயம்புத்தூர் மகாநாட்டிலும், கடைசியாக நெல்லூர் மகாநாட்டிலும் பேசப்பட்டது. என்னைப் பொறுத்தவரை நான் ஆட்சேபித்தே வந்திருக்கிறேன். பொது ஜனங்களுக்கும் பிரியமில்லை என்பது எனது அபிப்பிராயம்.

ஆனால் தலைவர்களுக்கு ஏதோ அவசியமிருப்பதாகத் தெரிகின்றது. அதை உத்தேசித்தே சென்ற மாதம் கூடின ஒரு சாதாரண தனிப்பட்ட கூட்டத்தில் நான் ஆட்சேபிக்கப் போவதில்லை என்று கூறி இருக்கின்றேன். ஏனெனில் தலைவர்கள் என்பவர்கள் அதன் பயனை அடைந்து பார்க்கட்டும் என்று கருதித்தான்.

இதுபோலவே முன்னமும் ஒரு சம்பவம் நடந்திருக் கிறது. அதாவது ஜஸ்டிஸ் கட்சிக்காரர்கள் காங்கிரசில் சேர வேண்டும் என்கின்ற ஒரு பிரச்சினை கோயம்புத்தூர் மகாநாட்டில் 1927இல் எழுந்தது. நான் ஆட்சேபித்தேன். தோழர்கள் பனகால் அரசர், சர்கார், பாத்ரோ முதலியவர்கள் மிகவும் கேட்டுக் கொண்டார்கள். பொது ஆட்சேபணைகூட பலமாய் இருந்தது. கடைசியாக நான் இவர்கள் அதன் பயனை அடைந்து பார்க்கட்டும் பின்பு விஷயம் தெரிந்து கொள்ளட்டும் என்கின்ற எண்ணத்தின் மீது தான், தடுப்பதில்லை என்று சொல்லி விட்டேன். தீர்மானம் எவ்வித எதிர்ப்புமின்றி பாசாகிற்று என்றாலும் ஒரு அம்மன் காசு அளவு பயன் கூட ஏற்படவில்லை. இதன் பயனாய் முன்பை விட அதிகமாய் காங்கிரசை ஜஸ்டிஸ் கட்சியார் எதிர்க்க நேர்ந்தது. அது போலவே இப்போதும் பொது ஜனங்களுக்கு இஷ்டமில்லாத காரியத்தை ஏதோ ஒரு உள் கருத்துக் கொண்டு சேர்த்துக் கொள்ள வேண்டுமென்று சொல்லுகிறார்கள். இதன் பயனைக் கண்டிப்பாய் அனுபவிக்கப் போகிறார்கள். அந்தத் தைரியத்தின் மீதே இப்போது நான் தடுக்கப் போவதில்லையென்று சொல்லுகிறேன். இப்படிச் சொன்னதால் சில தோழர்கள் நான் சம்மதம் கொடுத்த தாகச் சொல்லுகிறார்கள். அவர்களை எனக்கு நன்றாய்த் தெரியும். பார்ப்பனர்களிடம் நான் துவேஷமாய் இருந் தாலும் சினேகமாய் இருந்தாலும் அந்தப் பலன்களை யெல்லாம் இவர்கள் தான் அடைவார்களே ஒழிய, எனக்கு ஒரு லாபமும் இல்லை. வேண்டுமானால் பார்ப்பனர்களால் ஏற்படும் விஷமமும், தொல்லையும் எனக்குச் சொந்த மாகும்.

நான் சென்ற வாரப்பத்திரிகையில் பார்ப்பனிய ஒழிப்புக் கொண்டாட்ட நாள் என்பதாக வருஷத்தில் ஒரு நாள் கொண்டாட வேண்டும் என்று எழுதி இருக்கின்றேன்.

இது நிற்க. பொதுவாக ஒரு விஷயத்தை உங்கள் ஞாபகத்துக்குக் கொண்டு வர ஆசைப்படுகிறேன்.

பார்ப்பனர்களைச் சேர்க்கக் கூடாதென்று ஏற்படுத்திக் கொண்டிருக்கும் விதியும், வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் வேண்டுமென்கின்ற ஒரு விதியும் நமக்குள் இருந்து வருகின்றது என்றாலும் இது எப்போதும் இருக்க வேண்டியதா? அல்லது எவ்வளவு காலத்துக்கு இருக்க வேண்டியது? என்று யோசித்துப் பாருங்கள். எல்லா இந்திய மக்கள் மாத்திரம் அல்லாமல் உலக மக்கள் எல்லோருமே சகோதரர்களாக தோழமையுடன் வாழ வேண்டுமென்றும் வகுப்பு வித்தியாசங்கள் என்பது எங்கும், எந்த ரூபத்திலும் காணக் கூடாதென்றும் கூப்பாடு போடுகின்ற நாம் எப்போதும் பார்ப்பனர்களைச் சேர்க்கக் கூடாது என்று சொல்ல முடியுமா? என்று யோசித்துப் பாருங்கள். சர்வ ஜன சகோதரத்துவத்துக்கும் வகுப்புப் பிரிவு மறைவுக்கும் தான் பார்ப்பனர்களைச் சேர்க்கக் கூடாதென்றும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் வேண்டும் என்றும் சொல்லுகின்றோம். இது சாதாரண அறிவுடையவர்களுக்கு விளங்காது. சிறிது கூர்மையான பகுத்தறிவைப் பயன்படுத்திப் பார்ப்பவர்களுக்கு விளங்கிவிடும்.

எப்படியெனில் ஒரு வியாதியை சவுக்கியப்படுத்த அந்த வியாதியின் சத்தை இன்ஜக்ஷன் செய்வது போல் உதாரணமாக பீனிச மூக்கு வியாதிக்காரனுக்கு அந்தப் பீனிச மூக்குச் சீயையும், கெட்ட நீரையும் எடுத்துச் சேர்த்து பக்குவம் செய்து இன்ஜக்ஷன் செய்தால் அந்த மூக்கு வியாதி சவுக்கியமாய் விடுகின்றது.

அதுபோல் பார்ப்பனர்களை விலக்கி வைப்பது என்பதில் பார்ப்பனியம் ஒழிந்து விடுகின்றது. வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் என்பதில் வகுப்புகளின் உயர்வு தாழ்வு வித்தியாசம் ஒழிந்து சமநிலைக்கு வர நேருகின்றது. இவற்றின் பலனாய் ஒற்றுமையும், சமத்துவமும் வந்து பிரிவும் பேதமும் தானாய் மறைய நேரிடுகின்றது.

இந்த நிலை ஏற்படும் வரையில்தான், நாம் பார்ப்பனர்களைச் சேர்க்கக் கூடாதென்றும், வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும் என்றும் சொல்லு கின்றோமே ஒழிய, உலகம் உள்ள வரையில், மனிதன் உள்ள வரையில் கூடாது என்றும் வேண்டும் என்றும் நாம் கருதி ஏற்படுத்தவில்லை.

இப்போது உள்ள கேள்வியெல்லாம் பார்ப்பனர்களைச் சேர்த்துக் கொள்ளவும், வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை எடுத்து விடவும் தகுதி ஆனதும் அவசியமானதுமான காலம் வந்து விட்டதா என்பதேயாகும். என்னுடைய அபிப்பிராயத்தில் இல்லை என்றே கருதுகிறேன். சிலர் வந்து விட்டது என்கிறார்கள். சிலருக்கு இரண்டும் புரியாமல், சொல்லிக் கொடுத்ததைச் சொல்லும் கிளிப் பிள்ளைகள் மாதிரி ஒரே மாதிரி சொல்லிக் கொண்டிருக் கிறார்கள். இதுதான் இன்றைய இந்த அபிப்பிராய பேதங்களுக்குக் காரணமே ஒழிய வேறில்லை.

பார்ப்பனர்களைச் சேர்த்துக் கொள்ள காலம் வந்து விட்டது என்று இன்று சொல்லுகின்றவர்கள் தலை வர்கள் என்கின்றவர்களே யாவார்கள். தோழர்கள் சர். சண்முகம், பொப்பிலி ராஜா, சர். உஸ்மான், ராஜன் போன்றவர்கள் ஆசைப்படுகின்றார்கள் என்றால் அதன் பலாபலனை அடைந்து பார்க்க அவர்களுக்குச் சந்தர்ப்பம் கொடுக்கும் வரையில் இந்தப் பிரச்சினை விஷயத்தில் ஒரு சாந்தியும் ஏற்படாது. ஆதலால் நான் குறுக்கே நிற்ப தில்லை என்று சொல்லிவிட்டேன். எனது தோழர்கள் பலரும் இதை ஒப்புக்கொண்டது எனக்குச் சந்தோஷமே.

இப்போது எனக்கும் எனது கூட்டு வேலைத் தோழர்களுக்கும் இருக்கும் முக்கியப் பிரச்சினை. இந்தப் பார்ப்பனர்களைப் பொருத்ததல்ல. பார்ப்பனர்களைச் சேர்த்துக் கொண்ட பிறகு ஜஸ்டிஸ் கட்சி செய்யப் போகும் வேலை என்ன? அதற்கு வேலைத்திட்டம் என்ன? என்பது தான் முக்கியப் பிரச்சினை. இந்தப் பிரச்சினையால் தான் தாங்கள் ஜஸ்டிஸ் கட்சியில் இருப்பதா அல்லது விலகுவதா என்கின்ற தத்துவம் இருந்து வருகின்றது.

அதைத்தான் நாங்கள் அவசியமாய் கருதுகிறோம். அந்த விஷயத்துக்கு ஒரு வேலைத் திட்டம் அனுப்பியிருக் கிறேன். அது யோசனைக்கு வரும். அதைப் பொறுத்தே எங்கள் முடிவும் இருக்கும். பார்ப்பனர்களைச் சேர்க்கும் விஷயம் முடிவடைந்தால் ஏதோ ஒரு சில கூட்டத் துக்குத்தான் பயன் உண்டாகலாம்.

நமது வேலைத்திட்ட விஷயம் முடிவடைவதில் தான், இந்த தேசப் பொது மக்களின் தலையெழுத்து நிர்ண யிக்கப்படப் போகின்றது.

ஆதலால் பார்ப்பனர்களை ஜஸ்டிஸ் கட்சியில் சேர்க்கும் விஷயத்தில் எனது அபிப்பிராயத்தைச் சொல்லிவிட்டேன். பிறகு நீங்கள் எல்லோரும் யோசித்துத் தக்கது செய்யுங்கள்.

- பகுத்தறிவு - சொற்பொழிவு - 07.10.1934



.
 

அண்மைச் செயல்பாடுகள்