Banner
முன்பு அடுத்து Page:

வங்காளதேசத்தில் மகாசேன் புயல் தாக்கியதில் பலி எண்ணிக்கை 45 ஆக உயர்வு

வங்காளதேசத்தில் மகாசேன் புயல் தாக்கியதில் பலி எண்ணிக்கை 45 ஆக உயர்வு

டாக்கா, மே. 18- வங்க கடலில் உருவான மகா சேன் புயல் வங்காளதேசம் மற்றும் மியான்மர் நாடு களை நோக்கி நகர்ந்தது. அது பலகீனம் அடைந்து வங்காளதேசத்தில் சிட்ட காங் அருகே கரையை கடக்கும் என அறிவிக்கப் பட்டது. அப்போது சிட் டகாங், காஸ்பஷார் ஆகிய கடற்கரை பகுதிகளில் பலத்த காற்று வீசியது. அத்துடன் மழையும் கொட்டியது. இதனால் மரங்கள் முறிந்து வேரு டன் சாய்ந்தன. ஆயிரக்கணக்கான வீடுகளின் கூரைகள் காற்....... மேலும்

18 மே 2013 18:31:06

பாகிஸ்தான் சிறையிலிருந்த 51 இந்திய மீனவர்கள் விடுவிப்பு

பாகிஸ்தான் சிறையிலிருந்த 51 இந்திய மீனவர்கள் விடுவிப்பு

பாகிஸ்தான், மே 18- பாகிஸ்தான் சிறையிலி ருந்த 51 இந்திய மீனவர் களை நல்லெண்ண அடிப் படையில் விடுதலை செய்ய நடவடிக்கை எடுத்துள்ள தாக அந்நாட்டு பிரதமர் அலுவலகம் வெளியிட் டுள்ள அறிக்கையில் தெரி விக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பாகிஸ்தான் பிரதமர் அலுவலகம் வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள தாவது: "பாகிஸ்தான் சிறையிலிருந்த 51 இந்திய மீனவர்களை விடுவிக்க இடைக்கால அரசின் பிர தமர் மிர் ஹஸர் கான் கோசோ நடவடிக்கை....... மேலும்

18 மே 2013 18:31:06

ஈராக்கில் சன்னி முஸ்லிம்களை குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல்: 49 பேர் பலி

ஈராக்கில் சன்னி முஸ்லிம்களை குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல்: 49 பேர் பலி

பாக்தாத், மே 18- ஈராக்கில் சிறுபான்மை சன்னி முஸ்லிம்களுக்கும், பெரும்பான்மையாக உள்ள ஷியா முஸ்லிம் களுக்குமிடையே அடிக் கடி மோதல் நடந்து வரு கிறது. இரு தரப்பினரும் மத வழிபாட்டு தலங் களைக் குறிவைத்து வெடி குண்டு  தாக்குதல்கள் நடத்தி பொதுமக்களைப் பலிவாங்கி வருகின்றனர். இந்நிலையில் பாக் தாத் அருகே உள்ள பகுபா நகரில் சன்னி முஸ்லிம் களின் மசூதி அருகில் அடுத்தடுத்து இரண்டு குண்டுகள் வெடித்தன. மசூதியில் தொழுகை முடிந்து....... மேலும்

18 மே 2013 18:30:06

மகாசேன் புயல் வங்காளதேசத்தில் 10 லட்சம் மக்கள் வெளியேற்றம்: வீடுகள் சேதம்; 5 பேர் பலி

மகாசேன் புயல் வங்காளதேசத்தில் 10 லட்சம் மக்கள் வெளியேற்றம்: வீடுகள் சேதம்; 5 பேர் பலி

சிட்டகாங், மே 17-  மகாசேன் புயல் காரணமாக வங்காளதேச கடலில் பெரிய அலைகள் எழுந்தன. 10 லட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். நூற்றுக்கணக் கான வீடுகள் சேதம் அடைந்ததுடன், 5 பேர் பலியானார்கள். வங்கக்கடலில் உருவான மகாசேன் புயல் வங்காளதேசம் மற்றும் மியான்மர் நாடுகளை நோக்கி நகர்ந்தது. அது வங்காளதேசத்தில் சிட்டகாங் அருகே கரையை கடக்கும் என்றும், அப்போது 100 கிலோ மீட்டர்(60 மைல்கள்) வேகத்தில் சூறாவளி....... மேலும்

17 மே 2013 16:24:04

ஸ்காட்லாந்தில் மாடு முட்டி பேராசிரியர் சாவு

ஸ்காட்லாந்தில் மாடு முட்டி பேராசிரியர் சாவு

லண்டன், மே 16- ஸ்காட்லாந்து நாட்டில் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பேராசிரியர் ஒரு வர், தனது சகோதரர் மற் றும் அவரது மனைவியு டன் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, திடீரென்று மாடுகள் கூட்டம் ஒன்று தாக்கிய தால் உயிரிழக்க நேர்ந்தது. எடின்பர்க் பல்கலைக் கழகத்தில் பேராசிரியரா கப் பணியாற்றி ஓய்வு பெற்றவர் அலிஸ்டர் போர்ட்டர்(65). இவரது சகோதரர், ஜான்(72). வில்ட்ஷயர் அருகில் உள்ள பிராட்போர்ட் ஆன் அவான் என்ற இடத்தில் சகோதரர்கள் இருவரும்,....... மேலும்

16 மே 2013 17:07:05

இந்திய வம்சாவழியினர் 5 பேர் மலேசிய அமைச்சர்களாக நியமனம்

இந்திய வம்சாவழியினர் 5 பேர் மலேசிய அமைச்சர்களாக நியமனம்

கோலாலம்பூர், மே 16- மலேசியா நாட்டின் நாடாளுமன்ற தேர்தல் கடந்த 5ஆம் தேதி நடை பெற்றது. இந்த தேர்த லில் வெற்றி பெற்று பிர தமராக பொறுப்பேற்ற நஜீப் ரசாக், தனது அமைச்சரவையில் 5 இந்திய வம்சாவழியின ருக்கு பதவி அளித்து உள்ளார். மலேசிய இந்திய காங் கிரஸ் கட்சி தலைவர் பழனி வேல் இயற்கை வளங்கள் மற்றும் சுற் றுச்சூழல் துறை அமைச் சராக நியமிக்கப்பட்டு உள்ளார். எஸ்.சுப்ரமணியம் சுகாதாரத் துறை....... மேலும்

16 மே 2013 17:06:05

சிரியா உள்நாட்டுப் போர் 2 ஆண்டுகளில் 80 ஆயிரம் பேர் சாவு அய்.நா. சபை தலைவர் தகவல்

சிரியா உள்நாட்டுப் போர் 2 ஆண்டுகளில் 80 ஆயிரம் பேர் சாவு அய்.நா. சபை தலைவர் தகவல்

பெய்ரூட், மே 16- சிரியாவில் அதிபர் பஷீர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக பொதுமக்கள் தொடர் போராட்டத் தில் ஈடுபட்டு வருகின்ற னர். அவர்களில் சிலர் ஆயுதப் போராட்டங்க ளிலும் இறங்கியுள்ளனர். ஆயுதப் போராளிகளை வேட்டையாட பஷீர் அல் ஆசாத், ராணுவத்தை ஏவி விட்டுள்ளார். சிரியாவில் வாழும் மக்கள் உயிர் பயத்தில் லெபனான், துருக்கி உள் ளிட்ட நாடுகளில் அகதி களாக தஞ்சம் அடைந் துள்ளனர். இவ்வகையில், சுமார் 3 லட்சத்துக்கும்....... மேலும்

16 மே 2013 17:05:05

கட்டட விபத்து: இடிபாடுகளில் சிக்கி 100 பேர் தவிப்பு

கட்டட விபத்து: இடிபாடுகளில் சிக்கி 100 பேர் தவிப்பு

கிகாலி, மே 15- ஆப்பிரிக்க நாடான ருவாண்டாவின் நயகாட்ரே நகரில் கட்டப்பட்டு வந்த 4 மாடி கட்டடம் நேற்று மதியம் இடிந்து விழுந்தது. இதில் இருந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புக்குழுவினர் இறந்து போன 3 பேரின் சடலங்களை வெளியே எடுத்தனர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட 21 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் 100 ....... மேலும்

15 மே 2013 17:14:05

நைஜீரியாவில் அவசர நிலைப் பிரகடனம் அறிவிப்பு

நைஜீரியாவில் அவசர நிலைப் பிரகடனம் அறிவிப்பு

லாகோஸ், மே 15- ஆப்பிரிக்காவில் அதிக மக்கள் தொகை கொண்ட நைஜீரியாவில் முஸ்லிம் ஆட்சியை வலியுறுத்தி நாட்டின் வடக்குபகுதியில் இருந்து தீவிர வாதிகள் அரசுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், நாட்டின் ஸ்திரத்தன்மையை பலஹீனப்படுத்தும் நோக்கில் கிளர்ச்சியாளர்களும், தீவிரவாதிகளும் ஒன்றிணைந்து வடகிழக்கு பகுதியில் உள்ள பல நகரங்களையும், கிராமங்களையும் திடீரென கைப்பற்றியுள்ளனர். இதனால், அதிபர் குட்லக் ஜொனாதன், நாட்டில் அவசரநிலைப் பிரகடனம் அறிவித்துள்ளார். மேலும் அதிகமான துருப்புகளை அங்கு அனுப்பவும் உறுதி....... மேலும்

15 மே 2013 17:13:05

இந்தியர்களுக்கு உடனடி விசா வழங்கும் திட்டம்: இங்கிலாந்து அரசு அறிமுகம்

இந்தியர்களுக்கு உடனடி விசா வழங்கும் திட்டம்: இங்கிலாந்து அரசு அறிமுகம்

லண்டன், மே 15- இங்கிலாந்தின் பிரதமர் டேவிட் கேமரூன், சமீ பத்தில் இந்தியா வந்தி ருந்த போது, இந்தியர் களுக்கு உடனடி விசா அளிக்கும் திட்டம் விரை வில் நடைமுறைப்படுத் தப்படும் என்று அறி வித்திருந்தார். அதன்படி நேற்று, இந்தியர்களுக்கு, 24 மணி நேரத்திற்குள், உடனடி விசா வழங்கும் அதிக முன்னுரிமை திட் டத்தை அவர் வெளியிட் டுள்ளார். ஆயினும் இந்த வசதி தற்போது டில்லி, மும்பை வாழ் இந்தியர்களுக்கு மட்டுமே....... மேலும்

15 மே 2013 17:11:05

தினமலருக்கு வெட்கமாவது, மானமாவது...

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

திராவிடர் கழகத் தலைவர் வீரமணி: கர்நாடக போலீசார் தயாரித்துள்ள குற்றப் பத்திரிகையில், நான் கிருஷ்ணனாம்; நீ கோபிகையாம் என்ற வசனத்தை அடிக்கடி பக்தைகளிடம் சொல்லக் கூடியவர் நித்யானந்தா எனக் குறிப்பிட்டுள்ளது என்றால், இந்த வார்த்தைகளுக்குள் வழிந்தோடும் ஆபாசம் என்ன என்பது வெளிப்படை.

டவுட் தனபாலு: இது ஆபாசமா...? அப்போ, கர்ப்பப்பை இருக்கறதால தான், குழந்தை பெத்துக்கிறதுல சிக்கல் வருது; அதனால, பெண்கள் எல்லாம் கர்ப்பப்பையை எடுத்துடணும்னு உங்க பகுத்தறிவுப் பகலவன் சொன்னாரே.. அதுக்குப் பேர் என்னவாம்...?

- தினமலர் 19.7.2011

மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு என்பார்களே அது தினமலர் வாளுக்குத்தான் பொருந்தும். கேட்ட கேள்விக்கு என்ன பதில்? நித்யானந்தா சொன்னது ஆபாசமே இல்லையா?! வக்கிர துர்க்குணமா இல்லையா? பந்தை அடிக்க முடியாவிட்டால் காலை அடிக்கும் கோழைத்தனம் தானே தினமலரின் பதில்?

பிள்ளைப் பெறும் எந்திரம்தான் பெண்கள் என்று கருதப்படும் சமூக அமைப்பில் பெரியார் சொன்ன புரட்சி மொழிதான் கர்ப்பப்பையை எடுங்கள் என்பது. பெண்கள் உரிமை - முன்னேற்றம் - கிளர்ச்சி என்பதை அடிப்படையாகக் கொண்ட முற்போக்குக் கருத்து. அது - பெண்ணியல்வாதிகளால் வரவேற்கப்படும் கருத்து.

ஆனால் நித்யானந்தா பக்தைகளைப் பார்த்து நான் கிருஷ்ணன் - நீ கோபிகை! என்று சொன்னது ஆபாசமானது - இரண்டும் ஒன்றல்ல.
கிருஷ்ணன் கோபிகைகளுடன் நடத்திய காம வெறியாட்டம் தினமலர் கூட்டத்திற்கு லீலைகளாக இருக்கலாம்.

குளத்தில் கோபிகைகள் நீராட, அவர்களின் உடைகளைத் திருடிச் சென்று மரக்கிளையில் உட்கார்ந்து கொண்டு பெண்களின் நிர்வாணத்தை ரசித்த ஒழுக்கக் கேடன் அவாளின் பார்வையில் உத்தமப் புத்திரக் கடவுளாக இருந்து தொலையட்டும்!

குழந்தையைப் பெற்றுக் கொள்வதற்காக உடல் முழுவதும் நெய்யைப் பூசிக் கொண்டு யாருடனும் புணரலாம் என்கிற சாத்திரத்தைக் கடைபிடிக்கும் பார்ப்பனர்களிடத்தில் ஒழுக்கத்தை எதிர்பார்க்க முடியுமா?

ஆடைகளைத் தருமாறு கோபிகைகள் கெஞ்சிக் கூத்தாட, கரைக்கு வந்து இரு கைகளையும் தலைக்குமேல்  தூக்கிக் கும்பிட்டுக் கேட்டால் தான் கொடுப்பேன் என்ற நிபந்தனையை விதித்து, பெண்களின் முழு நிர்வாணத்தை ரசித்த காலிப் பயல் அவாளின் கண்ணிறைந்த கடவுளாகவே போய்த் தொலையட்டும்!

அதைப் போய் பெண்ணுரிமைக்காகக் குரல் கொடுத்த தலைவர் பெரியார் அவர்கள் சிந்தனையோடு முடிச்சுப் போடுவது தினமலரின் சீரழிந்த, சீக்குப் பிடித்த வக்கிரப்புத்தியைத்தான் வெளிப்படுத்தும். இதே தினமலர் வார மலரில் (23.12.2007) சிதம்பரம் தீட்சதர்கள் வீட்டில் நடக்கும் குழந்தைகள் திருமணத்தைப்பற்றி எழுதியதே - நினைவு இருக்கிறதா?

பல ஆண்டுகளாகவே சிதம்பரம் தீட்சதர்கள் தங்கள் பெண்களுக்கு ஏழு வயது ஆகும் முன்னரே திருமணம் செய்து விடுகின்றனர். மாப்பிள்ளைப் பையனுக்கு 12 வயதுக்குள்தான் இருக்கும். பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்புவது கிடையாது. வீட்டிலேயே வேத பாடங்கள் சொல்லித் தருகின்றனர்.

பால்ய விவாகத்தை 5 நாள் திருமணச் சடங்காக நடத்துகின்றனர்.

திருமணம் முடிந்த கையோடு பெண்ணும் மாப்பிள்ளையும் புகுந்த வீடு போய் விடுவார்கள். துள்ளித் திரிந்து விளையாடிய பெண், மாட்டுப் பெண்ணாகி வீட்டு வேலைகளுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறார்கள்.

பெண்ணுக்கு அய்ந்து வயதில் திருமணமானாலும், மூன்று வயதில் திருமணமானாலும் அன்று முதல் அந்தப் பச்சைக் குழந்தைக்கு மடிசார் புடவை கட்டிவிடுகின்றனர். மாமன் மாமி கால்களில் விழுந்து கும்பிடவும் பழக்குகிறார்கள். 14 வயது ஆகும் திருமணமான ஒரு தீட்சதர் பெண்ணுக்கு மூன்று, நான்கு குழந்தைகள் கூடப் பிறந்து விடுகின்றன.

கம்ப்யூட்டர் உலகம் என்று பெருமை பேசிக் கொண்டிருக்கிறோம். ஆனால், உண்மை நிலையோ...

(தினமலர், வாரமலர் டிசம்பர் 23, 2007)

தீட்சதர் வீட்டு 14 வயது பெண் 4 குழந்தைகள் பெறும் நிலைக்கு என்ன பெயர்?

பிள்ளை பெறும் எந்திரமாகப் பெண் இருக்கிறாளே என்று தந்தை பெரியார் சொன்னது உண்மைதானே!

உங்காத்துப் பெண்ணுக்கும் சேர்த்துதானே பெரியார் குரல் கொடுத்தார், அதைக் கொச்சைப் படுத்துகிறாயே!

1928ஆம் ஆண்டில் ஒரு நிகழ்வு  தினமலர் போல அப்பொழுது இந்து ஏடு முந்திரிக்கெட்டையாகத் துள்ளும். அதுபற்றிய ஒரு குறிப்பு இதோ: (திராவிடன் இதழில் (13.3.1928 பக்கம் 7)

இந்து பத்திரிகையில் 10 வயது பெண்ணோ அல்லது 12 வயது பெண்ணோ ஒருவனுக்குக் கல்யாணத்துக்காக வேண்டும் என்று விளம்பரம் செய்திருந்தது. இதைப் பார்த்து ஒரு சீர்திருத்தக்காரர் இந்துவை ஒரு கேள்வி கேட்டார். அதாவது ஓ. இந்துவே! நீர்  சீர்திருத்தக்காரன் என்று முழக்கம் செய்கின்றனையே இந்தக் காலத்தில்கூட, 10 வயது அல்லது 12 வயது பெண் ஒரு மாப்பிள்ளைக்குக் கல்யாணத்திற்காக வேண்டும் என்று விளம்பரம் செய்யலாமா? என்று கேட்டார். அதற்கு இந்துப் பத்திரிகை சொன்ன பதில் என்ன என்று பாருங்கள்.

10 அல்லது 12 வயது பெண்களை இப்போது விவாகம் செய்வது என்பதாகக் காணப்படுவதாவது விவாகச் சடங்கல்ல, அது நிச்சயதார்த்தத்திற்கு ஒப்பானது. பெண்ணையும், மாப்பிள்ளையையும் வீட்டிற்குள் விட்டுக் கதவு சாத்துகின்றோமே அதுதான் விவாகம் என்று அயோக்கியத்தனமாகப் பதில் எழுதிற்று.

இதற்கு அந்தச் சீர்திருத்தக்காரர் என்ன பதில் எழுதினார் என்றால், ஓ, இந்துவா! 10 வயதிலும் 12 வயதிலும் கல்யாணம் செய்வதுபோல் கண்ணுக்குத் தெரிவதெல்லாம் கல்யாணம் அல்ல. அது நிச்சயதார்த்தம் என்று சொல்ல வருவாயானால், அந்த 10 அல்லது 12 வயது பெண்களின் நிச்சயதார்த்தம் செய்யப்பட்ட புருஷன் செத்தால் தாலி அறுபட்டதாகப் பெயர் செய்து மொட்டையடித்து, முக்காடு போட்டு, மூலையில் உட்கார வைப்பதேன்? அதுகூட உங்கள் நிச்சயதார்த்த சடங்கில் சேர்ந்த நிபந்தனையா? என்று கேட்டார். உப்புக் கண்டம் பறி கொடுத்த பார்ப்பனத்தி போல் இந்து இதற்கு ஒரு மறுமொழியும் சொல்லாமல் வாயை மூடிக் கொண்டது.

(திராவிடன் 13.3.1928 பக்கம் 7).

அந்த இந்துவின் மறு அவதாரமாக தினமலர் திரிநூல் வேலையைச் செய்து கொண்டு இருக்கிறது.

அன்று இந்து மறுமொழிகூட கூற முடியாமல் திணறியதுபோல், அனேகமாக ஒவ்வொரு நாளும் தினமலர் சவுக்கடி மட்டும் புத்தி கொள்முதல் பெற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை!

பார்ப்பனர்களுக்கு மானமாவது! வெட்கமாவது!!



.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

அண்மைச் செயல்பாடுகள்