
பெஷாவர், ஜூன் 19- பாகிஸ்தானின் வட மேற்கில் உள்ள மர்தான் மாவட்ட ஷெர்கார் என்னுமிடத்தில் பெட்ரோல் பங்க் முதலாளி ஒருவரின் சவ ஊர்வலம் சென்றது. சுமார் நூறு பேர் அந்த ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். ஆனால் புறப்பட்ட சில நிமிடங்களில் ஊர்வலத் தின் நடுவில் ஒரு குண்டு வெடித்தது. இதில் அப்பகுதி சுயேட்சை எம்.எல்.ஏ.வான இம்ரான் கான் முகமது உள்பட 10 பேர் கொல்லப்பட்டனர்........ மேலும்
19 ஜூன் 2013 16:11:04

ஹூஸ்டன், ஜூன் 19- அமெரிக்க விண்வெளி ஆய்வு மய்யமான நாசா, விண்வெளி வீரர்கள், எட்டு பேரை, புதிதாக தேர்வு செய்துள்ளது. இதில், நான்கு பேர் பெண்கள். விண்வெளி ஆராய்ச் சியில் அமெரிக்கா முன் னோடியாக உள்ளது. அமெரிக்க விண்வெளி ஆய்வு மய்யமான, நாசா' பல்வேறு கோள்களுக்கு விண்கலங்களை அனுப்பி, ஆராய்ச்சி செய்து வரு கிறது. பூமிக்கு மேலே, 360 கி.மீ., உயரத்தில், அனைத் துலக விண்வெளி நிலை யம், பல நாடுகளின்....... மேலும்
19 ஜூன் 2013 15:51:03

வாஷிங்டன், ஜூன் 16- சிரியாவில் அதிபர் ஆசாத் துக்கும் போராளிகளுக் கும் இடையே உள் நாட்டு போர் நடந்து வருகிறது. இந்த சண்டை யில் இதுவரை 93,000 பேர் கொல்லப்பட்டுள் ளனர். இந்த போரில் பொதுமக்கள் மீது அதிபர் படை இராசயன ஆயுதங்களால் தாக்கு கிறது என்று அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. இதனால் போராளி களுக்கு ஆயுதங்கள் வழங்கி அமெரிக்கா உதவும் என்று கூறியது. இதற்கு சவால் விடும் விதமாக சிரியாவின்....... மேலும்
16 ஜூன் 2013 14:41:02

ஜெருசலேம், ஜூன் 14- பாகிஸ் தானுக்கு ராணுவ சாதனங்கள் எதை யும் ஏற்றுமதி செய்யவில்லை என்றும் இந்தியாவுடன் நல்லுறவை பேணி வரு கிறோம் என்றும் இஸ்ரேல் தெரிவித் துள்ளது. பிரிட்டனிடமிருந்து ராணுவ சாதனங்களுக்கான உதிரி பாகங் களைப் பெற்று பிற நாடுகளுக்கு இஸ்ரேல் ஏற்றுமதி செய்து வருகிறது. இதற்கு பிரிட்டனிடம் இஸ்ரேல் அனுமதி பெற வேண்டும். கடந்த 2010ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு ரேடார், ராணுவ தளவாடங்களில் பொருத்தப்படும் மின்னணு சாத னங்கள் உள்ளிட்டவற்றை....... மேலும்
14 ஜூன் 2013 18:44:06

இஸ்லாமிய போராளிகள் 15 வயது சிறுவனை நாத்திகன் என்ற காரணத் தால் முகத்தில் சுட்டுக் கொன்று விட்டனர். அலெப்போ நகரில் ஒரு இஸ்லாமியக் குழு முகமது வாட்டா என்ற 15 வயது சிறுவனைக் கடத்திக் கொண்டு போய், முகத்திலும் கழுத் திலும் சுட்டுக் கொன்று விட்டது என்று சொல்லப்படுகிறது. அந்தச் சிறுவன் காஃபி விற்பவன். சமீபத்தில் அந்தப் படம் வெளி யிடப்பட்டுள்ளது. அதில், இரத்தம் ஒழுகும் வாயுடனும், கன்னங்கள் தகர்த்தெறியப்பட்டு, கழுத்தில்....... மேலும்
14 ஜூன் 2013 16:06:04

டோக்கியோ, ஜூன் 13- உலகின் மிக வயதான முதியவர் என்று கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்ற ஜிரோய்மன் கிமுரா ஜப்பானில் நேற்று மரண மடைந்தார். அவருக்கு வயது 116. 1897ஆம் ஆண்டு ஜப்பானில் பிறந்த கிமுரா, தனது இளமைப் பருவத்தில் அஞ்சல் துறை ஊழியராகப் பணியாற்றினார். தனது 115ஆவது ஆண்டு பிறந்த நாள் விழாவின் போது நீண்ட ஆயுளுக்கு அதிக நேரம் சூரிய....... மேலும்
13 ஜூன் 2013 16:33:04

பெய்ஜிங், ஜூன் 13- அமெரிக்கா, ரஷியா, ஜப் பான் உள்ளிட்ட நாடு கள் இணைந்து விண் வெளியில் சர்வதேச விண் வெளி ஆய்வுக் கூடத்தை அமைந்துள்ளன. இந்த நிலையில் கம் யூனிச நாடான சீனாவும் தனக்கென தனியாக விண்வெளியில் ஆய்வுக் கூடத்தை நிறுவும் பணி யில் ஈடுபட்டுள்ளது. அதற்கு முன்னதாக டியாங் கோங்-1 என்ற சிறிய ஆய்வு கூடத்தை விண்வெளியில் அமைத் துள்ளது. அதற்கு தேவை யான ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள....... மேலும்
13 ஜூன் 2013 16:31:04

வாஷிங்டன், ஜூன் 12- உலகின் அதி நவீன மனிதநேய மற்றும் போர் தந்திர நடவடிக் கைகளில் ஈடுபடக்கூடிய வசதியும் திறனும் படைத்த போயிங் சி-17 பெரிய போக்குவரத்து விமானங்களை அமெ ரிக்கா தயாரிக்கிறது. இந்த போர் விமானங் களை வாங்க இந்தியா முடிவெடுத்தது. அதன்படி நேற்று, கலிபோர்னியா பாம் டேல் விமானப்படை விமானத்தளத்தில் முறை யான சோதனையை முடித்த ஒரு போயிங் சி-17 விமானம் ஒன்று இந்திய விமானப்படை அதிகாரிகளிடம் ஒப்ப....... மேலும்
12 ஜூன் 2013 17:07:05

பெய்ஜிங், ஜூன் 12- அமெரிக்கா, ரஷ்யா ஆகிய நாடுகளுக்குப் போட்டியாக சீனாவும் விண்ணில் நிரந்தர ஆய்வு மய்யத்தை அமைத்து வருகிறது. இதற்காக பயிற்சி பெற்ற விண் வெளி வீரர்களை அனுப்பி பணிகள் மேற்கொள் ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இப் போது 5ஆவது முறை யாக விண்வெளிக்கு மனி தர்களை அனுப்பியுள் ளது. கான்சூ மாகாணத் தில் உள்ள ஜியூகான் செயற்கைக் கோள் ஏவுதளத்தில் இருந்து ஷென்சூ-10 விண்கலம், வெற்றிகரமாக செலுத்....... மேலும்
12 ஜூன் 2013 17:07:05

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் பெ.இராசேந்திரன் நூல்களை வெளியிட, மாரியப்பன் ஆறுமுகம் முதற்படிகளைப் பெற்றுக் கொள்ளுதல். நூலாசிரியர்மு.இளங்கோவன், மன்னர் மன்னன், முனைவர் கி.கருணாகரன், முனைவர் செ.சண்முகம், முனைவர் ந.தெய்வ சுந்தரம் ஆகியோர் பங்கேற்றனர்.கோலாலம்பூர், ஜூன் 12-புதுச்சேரி பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரி பேராசிரியர் மு.இளங்கோவன் அவர்களால் எழுதப்பட்ட இரு அரிய நூல்கள் மலேசியாவின் தலை நகரமான கோலாலம்பூரில் வெளியிடப்பட்டன. மலேசியத் தலைநகர் கோலா லம்பூர் - பெட்டாலிங்செயா தமிழ்இளைஞர் மணிமன்ற....... மேலும்
12 ஜூன் 2013 16:28:04

டோக்கியோ, ஜூன் 18- ஜப்பானில் இன்று அதிகாலை 4.30 மணியளவில் கடும் நில நடுக்கம் ஏற் பட்டது. ஹோன்சு கடற்கரை பகுதியில் ஏற்பட்ட நில நடுக்கத்தால் அப்பகுதியில் வீடுகள் குலுங்கின. அப்போது அயர்ந்து தூங்கி கொண்டிருந்த மக்கள் அதிர்ச்சியுடன் கண் விழித்தனர். நில நடுக்கம் ஏற்பட்டதை அறிந்ததும் அலறியடித்தபடி வீடுகளை விட்டு வெளியேறி ஓட்டம் பிடித்தனர். ஜப்பானில் 6.1 ரிக்டர் அளவில் நில நடுக்கம் பதிவானதாக சீன பூகம்ப ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது. ஆழ்கடலில் 40 கி.மீட்டர் ஆழத்தில் உருவானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க புவியியல் ஆய்வு மய்யம் இங்கு 6.4 ரிக்டர் அளவில் பசிபிக் கடற்கரையில் உள்ள மொரியோகோவில் 31 கி.மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக கணக்கிட்டுள்ளது. நில நடுக்கம் காரணமாக மிக உயரமான அலைகள் எழும்பின. ஆனால் சுனாமி எச்சரிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை. சேத விவரங்களும் அறிவிக்கப்படவில்லை