
அமெரிக்கா, மே 22- அமெரிக்காவில் ஒக்ல ஹோமா நகரில் திங்கள் கிழமை வீசிய பெரும் சூறாவளியில் சிக்கி 20 குழந்தைகள் உள்பட 91 பேர் உயிரிழந்தனர். 233 பேர் காயமடைந்தனர். ஒக்லஹோமா நகரின் மூர் பகுதியில் மணிக்கு 320 கி.மீ வேகத்தில் வீசிய சூறாவளியால் அந்நக ரமே சின்னாபின்னாமாகி விட்டது. ஏராளமான வீடுகள், பள்ளிகள் முற் றிலும் சேதமடைந்தன. இச்சூறாவளியால் 20 குழந்தைகள் உள்பட 91 பேர் உயிரிழந்தனர். 70 குழந்தைகள் உள்பட....... மேலும்
22 மே 2013 15:51:03

ரியாத், மே 22- புதிய பாஸ்போர்ட்களுடன் இந்தியாவில் இருந்து எங்கள் நாட்டிற்கு வேலை செய்ய வரும் இந்தியர் களை அனுமதிக்க முடி யாது என சவுதி அரே பியா அரசு சமீபத்தில் அறிவித்தது. பழைய இந்திய பாஸ் போர்ட்களில் சம்பந் தப்பட்ட நபர்களின் புகைப்படம் இரண் டாம் பக்கத்தில் இடம் பெற்றிருந்தது. ஆனால், புதிய பாஸ்போர்ட்டில் மூன்றாம் பக்கத்தில் புகைப்படம் இடம் பெற்றுள்ளது. இவ்வகையில் மூன் றாம் பக்கத்தில் புகைப் படம் இடம்பெற்றுள்ள....... மேலும்
22 மே 2013 15:43:03

பாக்தாத், மே 21- ஈராக்கில் பெரும்பான்மையாக வசிக்கும் சன்னி பிரிவு முஸ்லிம்களுக்கும் குறைவாக உள்ள ஷியா பிரிவு முஸ்லிம்களுக்கும் இடையே சமய நம்பிக்கையில் வேறுபாடு காரணமாக மோதல்கள் நடந்து வருகின்றன. ஈராக்கை ஆண்டு வரும் ஷியா முஸ்லிமான நவுரி மாலிகியின் ஆட்சிக்கு எதிராக சன்னி பிரிவு மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால், அரசுக்கும், சன்னி பிரிவு ஆயுதம் ஏந்தியவர்களுக்கும் இடையே சமீப....... மேலும்
21 மே 2013 15:27:03

வாஷிங்டன், மே 21- 18 வயதான அமெரிக்க வாழ் இந்தியப் பெண் ஒருவர், 20 வினாடிகளில் செல் போனை சார்ஜ் செய் யக்கூடிய கருவியைக் கண்டுபிடித்துள்ளார். இதன் மூலம் மிகப் பெரிய வர்த்தக நிறுவனமான கூகுளின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்துள்ளார். கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சர கோட்டா நகரில் வாழ்ந்து வரும் ஈஷா கரே என்ற பெண் இந்த சாதனை யைப் புரிந்துள்ளார். இதற்காக, இண்டெல் அறக்கட்டளை அளித்த இளம்....... மேலும்
21 மே 2013 15:25:03

நியூயார்க், மே 21- அமெரிக்காவின் நியூ யார்க் பல்கலைக் கழ கத்தில், அமெரிக்க அர சின் நிதி உதவி பெற்று, காந்த ஒத்திசைவு குறித்த ஆராய்ச்சி ஒன்றில், மூன்று சீன நாட்டு ஆராய்ச்சி யாளர்கள் ஈடுபட்டுள்ள னர். இந்த ஆராய்ச்சி பற் றிய தகவல்களை வெளி யிட, அரசு நிதி உதவி பெறும் சீன ஆராய்ச்சி நிறுவனத்திடமிருந்து லஞ்சம் பெற்றதாக அவர் கள் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. திங்களன்று, மன் ஹாட்டன்....... மேலும்
21 மே 2013 15:23:03

டாக்கா, மே 20- வங்காள தேச சுதந்திரத்திற்காக 1971ஆம் ஆண்டு நடந்த போரில் ஜமாத் இ இஸ்லாமி கட்சியினர் அராஜகத்தில் ஈடுபட்டனர். தற்போது அவர்களுக்கு எதிராக வரும் தீர்ப்பை கண்டித்து, அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகிறார்கள். மேலும் அவர்கள் நடத்தி வரும் போராட்டத் திற்கு இந்த மாதம் முன்னதாகவே 28 பேர் கொல்லப்பட்டனர். சில அரசியல் கட்சிகளின் நிகழ்ச்சிகள் என்ற பெயரில், வங்க....... மேலும்
20 மே 2013 16:05:04

துபாய், மே 20- அரே பிய வளைகுடா நாடுகளில் தெற்கு ஆசிய நாடுகளான இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம், நேபாளி லிருந்துதான் அதிகமா னோர் ஒப்பந்த அடிப் படையில் வேலைபார்த்து வருகின்றனர். இவர்கள் அனைவ ரும் விடுதி பணி இடங் களில் தான் தூரத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள னர். அப்படி, துபாயில் பல்லாயிரக்கணக்கா னோர் மிகப்பெரிய கட் டுமானக் கம்பெனிகள், அரேப்டெக் கம்பெனி யில் வேலைபார்த்து வரு கின்றனர். இவர்கள் அதிகம் சம் பளம் உள்ளிட்ட....... மேலும்
20 மே 2013 15:57:03

மாஸ்கோ, மே 20- ரஷ்ய நாட்டின் புலனாய் வுத் துறை அதிகாரி ஒரு வரை உளவு வேலையில் ஈடுபட வைக்க முயற்சி செய்ததாகக் கூறி, கைது செய்யப்பட்ட அமெரிக் கத்தூதரக அதிகாரி, ரயான் போகில் ரஷ் யாவை விட்டு அனுப்பப் பட்டதாக ரஷ்யத் தொலைக்காட்சி இன்று தகவல் வெளியிட்டுள்ளது. மாஸ்கோவில் உள்ள ஷ்ரெமெட்யெவொ விமான நிலையத்தின் பாதுகாப்பு சோதனை யைக் கடந்து அவர் செல் வதை, அந்நிறுவனம் காட்சியாக வெளியிட்டு உள்ளது........ மேலும்
20 மே 2013 15:56:03

ஜெட்டா, மே 19- அரேபிய நாடான சவூதியில் பெண்கள் விளையாட்டில் கலந்துகொள்ள கடுமையான தடைகள் உள்ளன. அப்படிப்பட்ட நாட்டிலிருந்து முதலாவதாக ராஹா முஹாராக் (25) என்ற ஒரு பெண், நேபாளத்தில் உள்ள உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் (8848 மீட்டர்) ஏறி நேற்று சாதனை படைத்தார். ஷார்ஜா பல்கலைக்கழகத்தில் பட்டம் பயின்று வரும் ராஹா, கடந்த ஏப்ரல் 13ஆம் தேதி முதல்....... மேலும்
19 மே 2013 14:57:02

நியூயார்க், மே 19- அமெரிக்க நியூயார்க் பன்னாட்டு விமான நிலையத்திற்கு 34 பயணிகளுடன் அமெரிக்க ஏர்வேய்ஸ் விமானம் ஒன்று நேற்று வந்து இறங்கியது. அப்போது அந்த விமானத்தின் முன் சக்கரப் பகுதியில் கோளாறு ஏற்பட்டது. இதனால் விமான முன் சக்கரம் கீழிறங்காமல், விமானத்தின் முன்பகுதி தரையை கிழித்துக் கொண்டு சறுக்கி சென்றது. இதனால் விமானத் திற்குள்ளே இருந்தவர்கள் என்ன ஆவார்களோ என்று பரபரப்பு நிலவியது. இருந்தும் அந்த விமானம் சறுக்கிச் சென்று நின்றுவிட்டதால்,....... மேலும்
19 மே 2013 14:56:02

இஸ்லாமாபத், ஜூன் 10- பாகிஸ்தானின் பெஷா வர் நகரில் உள்நாட்டு செயலகப் பணியாளர் களை ஏற்றிவந்த பேருந் தில், சக்திவாய்ந்த குண்டு வெடித்ததில் 7 பெண் கள் உள்பட 19 பேர் பலியாயினர். மேலும் 40 பேர் காயம் அடைந்துள்ள னர். காயம் அடைந்தவர் கள் அங்குள்ள சர்சதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயம் அடைந்தவர்களில் 5 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ள தாக பாதுகாப்பு அதிகா ரிகள் தெரிவித்துள்ளனர். பேருந்தில் வைக்கப் பட்ட குண்டு ரிமோட் கண்ட்ரோல் மூலம் வெடிக்க வைக்கப்பட்ட தாகவும், பாகிஸ்தானில் இயங்கி வரும் தலிபான் இயக்கத்தினர்தான் இந்த தாக்குதலை நடத்தி இருப் பதாகவும் பாதுகாப்பு அதிகாரிகள் கூறியுள்ள னர். இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள பாகிஸ்தான் தகவல் தொடர்பு அமைச்சர் ஹுசைன், தீவிரவாதி களுடன் பேச்சு நடத்த நாங்கள் தயாராக உள் ளோம். ஆனால் அதை மறுத்து, தீவிரவாதிகள் இதேபோன்ற நாசவேலை களை தொடர்ந்தால், அவர்கள் மீது கடும் நட வடிக்கை எடுக்கப்படும் என்றார். பிரதமர் யூசுப் ரசா கிலானியும் இத்தாக்கு தலை வன்மையாகக் கண் டித்துள்ளார். மேலும், 'இதுபோன்ற கோழைத் தனமான தாக்குதல் களால் தீவிரவாதத்துக்கு எதிராகப் போராடி வரும், அரசின் மனத் துணிவை பலவீனப் படுத்த முடியாது எனவும் கிலானி கூறியுள்ளார்.