Banner
முன்பு அடுத்து Page:

சவுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து: 11 பேர் பலி

சவுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து: 11 பேர் பலி

சவுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து: 11 பேர் பலி ரியாத், ஆக. 31_ சவுதி யின் கிழக்கு நகரான கோபாரில் உலகிலேயே மிகவும் பெரிய எண்ணெய் நிறுவனமான சவுதி அராம்கோ செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் கச்சா எண்ணெய்யை உற்பத்தி செய்து வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது. இதில் 77 நாடுகளைச் சேர்ந்த சுமார் 61 ஆயிரம் ஊழியர்கள் வேலைபார்த்து வருகின்றனர். இவர்களுக்கென தனியாக தங்கும் அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்று....... மேலும்

31 ஆகஸ்ட் 2015 16:09:04

காதுகளின்றிப் பிறந்த சிறுவனுக்கு அமெரிக்காவில் சிறப்பு அறுவை சிகிச்சை

காதுகளின்றிப் பிறந்த சிறுவனுக்கு அமெரிக்காவில் சிறப்பு அறுவை சிகிச்சை

காதுகளின்றிப் பிறந்த சிறுவனுக்கு அமெரிக்காவில் சிறப்பு அறுவை சிகிச்சை வாஷிங்டன், ஆக. 31_ பிறவியிலேயே காதுகள் இல்லாது பிறந்த சிறுவ னுக்கு அறுவைச் சிகிச்சை மூலம் புதிய காதுகளைப் பொருத்தி சாதனை செய்தி ருக்கிறார் இந்திய வம்சா வளி மருத்துவரான அனந்த மூர்த்தி. அமெரிக்காவின் ஒஹையோ மாகாணம், கேன்டன் நகரைச் சேர்ந்த எலைஜா பெல் எனும் சிறுவன் வெளிப்புறக் காது மடல்களின்றிப் பிறந்தான். மய்யக் காதுப் பகுதியும், உட்புறக் காது உறுப்புக ளும்....... மேலும்

31 ஆகஸ்ட் 2015 16:08:04

மலேசியப் பிரதமருக்கு எதிராக மக்கள் போராட்டம்

மலேசியப் பிரதமருக்கு எதிராக மக்கள் போராட்டம்

மலேசியப் பிரதமருக்கு எதிராக மக்கள் போராட்டம் கோலாலம்பூர், ஆக. 31_- ஊழல் குற்றச்சாட்டிற்கு ஆளாகியுள்ள மலேசியா பிரதமருக்கு எதிராக காவல்துறையின் தடையை மீறி அந்நாட்டு தலைநக ரில் இரண்டாவது நாளாக நேற்றும் போராட்டம் நடைபெற்றது. சில மாதங் களுக்கு முன்பு பிரதமர் நஜிப் ரஸாக்கின் தனிப் பட்ட வங்கிக் கணக்கில் பலநூறு மில்லியன் டாலர் பணம் இருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகள் அவரை பதவி விலகும்படி கூறிவரு கின்றன. ஆனால் அவர் தனது....... மேலும்

31 ஆகஸ்ட் 2015 16:07:04

பாகிஸ்தானுக்கு ஹிலாரி கிளிண்டன் வலியுறுத்தல்

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, மே 9- மும்பை தாக்குதலில் முதன்மை சதிகாரனான ஹபீஸ் சயீத்தை நீதியின் முன் நிறுத்த வேண்டும் என்று பாகிஸ்தானை ஹிலாரி கிளிண்டன் வலியுறுத் தினார்.

மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவை அமெ ரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண் டன் நேற்று சந்தித்துப் பேச்சு வார்த்தை நடத் தினார். இந்த பேச்சு வார்த் தையைத் தொடர்ந்து ஹிலாரி கிளிண்டன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது ஹிலாரி கிளிண்டன் கூறியதாவது:-

மும்பையில் கடந்த 2008ஆம் ஆண்டு நவம் பர் 26ஆம் தேதி தீவிர வாதிகள் நடத்திய தாக் குதலில் முதன்மை சதி காரன் ஹபீஸ் சயீத் (லஸ்கர்-இ-தொய்பா தலைவன்) என அமெ ரிக்கா நம்புகிறது. மும்பை தாக்குதலில் தொடர்பு டைய சயீத் உள்ளிட்ட சதிகாரர்களை பாகிஸ் தான் நீதியின் முன் கொண்டு வந்து நிறுத்த வேண்டும்.

இத்தகைய தீவிரவாத இயக்கங்கள் பாகிஸ் தானை களமாக பயன் படுத்துவதை தடுத்து நிறுத்த வேண்டும்.

சயீத் தலைக்கு அமெ ரிக்கா 10 மில்லியன் டாலர் (சுமார் ரூ.50 கோடி) விலை அறிவித்துள்ளது. தீவிரவாதத்தை ஒழிப்ப தில் இந்தியாவுடன் இணைந்து செயல்படு வோம் என்பதை உலகத் துக்கு தெரிவிக்க விரும் பித்தான் இந்த ஹபீஸ் தலைக்கு விலை அறிவித் தோம்.

தீவிரவாதம் அமெ ரிக்காவை மட்டுமல்ல, எல்லோரையும் பாதிப் புக்கு உள்ளாக்குகிறது. தீவிரவாதிகளை சட்டத் தின் முன் கொண்டு நிறுத் துவதில் அமெரிக்கா வின் தீவிரத்தையும் சயீத் தலைக்கு விலை நிர்ண யித்தது எடுத்துக் காட்டும்.

அமெரிக்கா, ஆப்கா னிஸ்தான் மற்றும் நேச நாடுகளில் தாக்குதல்கள் நடத்தியவர்களை துரத் திச்செல்வதில் அமெரிக்கா உறுதி பூண்டுள்ளது.

தீவிரவாதத்தை கட் டுப்படுத்துவதில் பாகிஸ் தானிடமிருந்து இன்னும் அதிகம் அதிகமாக எதிர் பார்க்கிறோம்.

தனது நாட்டை தீவிர வாதிகள் அதிகளவில் பயன்படுத்துவதை பாகிஸ் தான் தடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். தீவிரவாத தாக்குதல்க ளில் பிற எந்த நாட்டை யும் விட பாகிஸ்தானில் 35 ஆயிரம் பேர் கொல் லப்பட்டுள்ளனர். இதை பாகிஸ்தான் உணர வேண்டும். - இவ்வாறு ஹிலாரி கிளிண்டன் கூறினார்..
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

அண்மைச் செயல்பாடுகள்