Banner
முன்பு அடுத்து Page:

இடைக்காலப் பிரதமர் பதவியேற்பு அமைச்சரவை அறிவிப்பு

இடைக்காலப் பிரதமர் பதவியேற்பு அமைச்சரவை அறிவிப்பு

இடைக்காலப் பிரதமர் பதவியேற்பு அமைச்சரவை அறிவிப்பு கிரீஸ், ஆக. 29_ கிரீஸின் இடைக்காலப் பிரதமராக வாஸிலிகி தானு (65) வியாழக்கிழமை பதவி யேற்றார். கிரீஸில் பிரத மர் பதவியேற்கும் முதல் பெண் இவர்தான். பதவி யேற்றவுடன், இடைக்கால அமைச்சரவையை அவர் அறிவித்தார். இவர் கிரீஸ் நாட்டு உச்ச நீதிமன்றத் தின் தலைமை நீதிபதியாக உள்ளார். சர்வதேச நிதி அமைப்புகளிடமிருந்து கடன் பெற்றதைத் தொடர்ந்து, பொருளாதார சீர்திருத்தங்களை மேற் கொள்ள பிரதமர் அலெக் ஸிஸ்....... மேலும்

29 ஆகஸ்ட் 2015 15:49:03

கைவிடப்பட்ட லாரிக்குள் 71 பிணங்கள்: ஹங்கேரி நாட்டில் 3 பேர் கைது

கைவிடப்பட்ட லாரிக்குள் 71 பிணங்கள்: ஹங்கேரி நாட்டில் 3 பேர் கைது

கைவிடப்பட்ட லாரிக்குள் 71 பிணங்கள்: ஹங்கேரி நாட்டில் 3 பேர் கைது வியன்னா, ஆக. 29_ ஆஸ்திரியா - ஹங்கேரி நாட் டின் எல்லைப்பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் கேட்பாரற்று நின்றிருந்த ஒரு லாரிக்குள் 71 பேர் மூச்சுமுட்டி பலியாக கார ணமாக இருந்த மூன்று பேரை ஹங்கேரி நாட்டு காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடந்த புதன்கிழமை யில் இருந்து அந்த சாலை யின் ஓரமாக நிறுத்தப்பட் டிருந்த அந்த லாரியில் இருந்து கெட்டவாடை....... மேலும்

29 ஆகஸ்ட் 2015 15:47:03

இணையதள கேலி கிண்டல்களை தடுக்கும்மென்பொருளை உருவாக்கிய இந்திய வம்சாவளி மாணவி

இணையதள கேலி கிண்டல்களை தடுக்கும்மென்பொருளை உருவாக்கிய இந்திய வம்சாவளி மாணவி

இணையதள கேலி கிண்டல்களை தடுக்கும்மென்பொருளை உருவாக்கிய இந்திய வம்சாவளி மாணவி நியூயார்க், ஆக. 28-_ இணையத்தில் உண்மை யான செய்திகளை மட்டு மல்லாது, ஒரு தனிப்பட்ட மனிதனின் கருத்துக்கள் நொடிப்பொழுதில் உலகுக்கே தெரிந்துவிடுவ தால் அது பல நேரங்க ளில், பல்வேறு விஷயங் களில் அச்சுறுத்தலாகவே முடிகிறது. இதைத் தடுக்கும் வகை யில் ஒரு மென்பொருளை அமெரிக்காவின் இலி னோய்ஸ் மாநிலவாசி யான இந்திய வம்சாவளி யைச் சேர்ந்த திரிஷா பிரபு(15)....... மேலும்

28 ஆகஸ்ட் 2015 15:50:03

அமெரிக்காவில் இரண்டாவது இந்தியர் மர்ம மரணம்

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

நியூயார்க், ஏப். 26- அமெரிக்காவின் டல்லாஸ் மாகாணத்தில் இந்தியாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் மர்மமான முறையில் இறந்துள்ளார். இது குறித்த காவல்துறை தரப்பில் கூறப்படுவதாவது: அமெரிக்காவின் டல்லாஸ் பகுதியில் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டிணத்தை சேர்ந்த நிகில் கர்ணம் என்ற 28 வயது இளைஞர் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் அவர் தங்கியிருந்த வீட்டில் இருந்து கடந்த 21ஆம் தேதி முதல் துர்நாற்றம் வருவதாக அருகில் வசிப்போர் காவல்துறையில் புகார் செய்தனர். அதன்பேரில் அவரது வீடு சோதனையிடப்பட்டது. இதில் கர்ணம் 10 தினங்களுக்கு முன்னரே இறந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்தது. இது குறித்து வடக்கு அமெரிக்காவில் உளள தெலுங்கு அசோசியேஷனுக்கு தகவல் அளிக்கப் பட்டது. அசோசியேஷன் தலைவர் தெட்ட குரா கூறுகையில் கர்ணம் இறப்பு குறித்து அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு நாளில் உடல் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்படும். காவல்துறையினர் கொலை மற்றும் தற் கொலை என்று எந்த முடிவும் எடுக்கவில்லை எனவும் மருத்துவ பரிசோதனையின்போது அதன் விபரம் தெரிய வரும் என கூறினார். கடந்த ஒரு வாரத்தில் அமெரிக்காவில் இறந்த இரண்டாவது இந்தியர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 19ஆம் தேதி போஸ்டன் பல்கலைகழகத்தில் படித்து வந்த சேஷாத்திரி ராவ் என்ற மாணவன் மர்மமான முறையில் இறந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

சீனாவில் ஓட்டுனர் 300 பேருக்கு தடை

பீஜிங், ஏப். 26- சீனாவில், போக்குவரத்து விதி முறையை பல முறை மீறிய, 300 ஓட்டுனர்களுக்கு வாழ்நாள் முழுக்க வாகனங்களை இயக்க, தடை விதிக்கப்பட்டுள்ளது.

சீன தலைநகர் பீஜிங்கில், 50 லட்சத்துக்கும் அதிகமான வாகனங்கள் இயங்குகின்றன. போக்கு வரத்து விதிமுறையை அடிக்கடி மீறினால், அவர்கள் வாகனங்கள் ஓட்ட தடை விதிக்க வழி செய்யும் சட்டம், சீனாவில் கடந்த 2004இல் கொண்டு வரப்பட்டது. இந்த சட்டத்தின்படி, இதுவரை 300 பேர் தண்டிக்கப்பட்டுள்ளதாக, சீன அரசு தெரிவித்துள்ளது..
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

அண்மைச் செயல்பாடுகள்