சூடான் எல்லை நகரமான
முன்பு அடுத்து Page:

பொது வாக்கெடுப்பில் அய்ரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் விலகுவதற்கு ஆதரவு பிரதமர் கேமரூன் பதவி வ…

 பொது வாக்கெடுப்பில் அய்ரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் விலகுவதற்கு ஆதரவு   பிரதமர் கேமரூன் பதவி விலக முடிவு

லண்டன், ஜூன் 25 அய்ரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் விலக வேண்டும் என்று வியாழக்கிழமை நடை பெற்ற பொது வாக்கெடுப்பில் அந்த நாட்டு மக்கள் தீர்ப்பளித் தனர். இதையடுத்து, அய்ரோப்பிய யூனியனில் பிரிட்டன் நீடிக்க வேண்டும் என்று பிரசாரம் செய்து வந்த அந்நாட்டுப் பிரத மர் டேவிட் கேமரூன், தார்மீகப் பொறுப்பேற்று பதவி விலகு கிறார். பொது வாக்கெடுப்பில், அய் ரோப்பிய யூனியலிருந்து விலகு வதற்கு ஆதரவாக 51.9 சதவீதத்தி னரும், யூனியனில்....... மேலும்

25 ஜூன் 2016 16:12:04

சீனாவில் பலத்த மழை: 78 பேர் உயிரிழப்பு, 500 பேர் காயம்

சீனாவில் பலத்த மழை: 78 பேர் உயிரிழப்பு, 500 பேர் காயம்

சீனாவில் பலத்த மழை:78 பேர் உயிரிழப்பு, 500 பேர் காயம் சீனா, ஜூன் 24 சீனாவின் கிழக்குப் பகுதியில் உள்ள ஜியாங்சூ மாகா ணத்தில் பெய்து வரும் பலத்த மழை, புயல் ஆகியவற்றின் பாதிப்பு களில் சிக்கி 78 பேர் உயிரிழந்தனர். 500 பேர் காயமடைந்தனர். சீனாவில் ஆண்டுதோறும் மே மாத இறுதியில் தொடங்கும் பருவமழை, இரண்டு மாதங்க ளுக்கு நீடிப்பது வழக்கம். இந்நிலையில், சீனாவின் தெற்குப் பகுதியில் உள்ள செஜி யாங், ஜியாங்ஜி,....... மேலும்

24 ஜூன் 2016 17:01:05

திரையரங்கில் துப்பாக்கிச் சூடு: 50 பேர் காயம்

திரையரங்கில் துப்பாக்கிச் சூடு: 50 பேர் காயம்

திரையரங்கில் துப்பாக்கிச் சூடு: 50 பேர் காயம் ஜெர்மனி, ஜூன் 24 ஜெர்மனியில் முகமூடி அணிந்து வந்த மர்ம நபர் ஒருவர், பல்லடுக்கு திரையரங்கில் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தி னான். இதில் 50-க்கும் மேற்பட்டேர் காயமடைந்த நிலையில், அந்த நபரை காவல்துறையினர் சுட்டுக் கொன்றனர். ஜெர்மனியின் வியர்ன் ஹெய்ம் நகரில் ஒரே வளாகத் தில் உள்ள பல திரையரங்கு களை கொண்ட பல்லடுக்கு திரையரங்கில் நேற்று பொது மக்கள் திரைப்படம் பார்த்துக் கொண்டிருந்தபோது....... மேலும்

24 ஜூன் 2016 17:00:05

இலங்கை அகதிகளுக்கு உதவ சர்வதேச அமைப்புகளுக்கு இந்தோனேஷியா அனுமதி

இலங்கை அகதிகளுக்கு உதவ சர்வதேச அமைப்புகளுக்கு இந்தோனேஷியா அனுமதி

இலங்கை அகதிகளுக்கு உதவ சர்வதேச அமைப்புகளுக்கு இந்தோனேஷியா அனுமதி இந்தோனேஷியா, ஜூன் 23 இந் தோனேஷியாவில் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டுள்ள இலங்கை அகதிகள் 44 பேருக்கும் சர்வதேச தொண்டு நிறுவனங்கள் உதவ அந்நாட்டு அரசு அனுமதியளித்து உள்ளது. கடற்கரையில் அமைக்கப் பட்டுள்ள கூடாரங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள அகதிக ளுக்கு சர்வதேச தொண்டு நிறு வனங்கள் உதவி செய்து வரு கின்றன. இருப்பினும், மோசமான வானிலை காரணமாகவே படகு தற்காலிகமாக அனுமதிக் கப்பட்டு அகதிகள் தரையிறக் கப்பட்டு....... மேலும்

23 ஜூன் 2016 15:46:03

அய்ரோப்பிய யூனியனிலிருந்து வெளியேற்றம்? பிரிட்டனில் பொது வாக்கெடுப்பு

அய்ரோப்பிய யூனியனிலிருந்து வெளியேற்றம்? பிரிட்டனில் பொது வாக்கெடுப்பு

அய்ரோப்பிய யூனியனிலிருந்து வெளியேற்றம்? பிரிட்டனில் பொது வாக்கெடுப்பு பிரிட்டன்,  ஜூன் 23 அய்ரோப்பிய யூனியனின் உறுப்பு நாடாக நீடிக்க லாமா, வேண்டாமா என்பதற்கான முக்கியத்துவம் வாய்ந்த பொது வாக்கெடுப்பு பிரிட்டனில் இன்று நடைபெறுகிறது. இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது: 28 நாடுகளை உறுப்பினர் களாகக் கொண்ட அய்ரோப்பிய யூனியனில் பிரிட்டன் அங்கம் வகிக்கிறது. அந்த அமைப்பில் பிரிட் டன் அங்கம் வகிப்பதற்கு எதி ராக பிரிட்டனில் ஒரு சாரார் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இதுகுறித்த....... மேலும்

23 ஜூன் 2016 15:45:03

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சூடான் எல்லை நகரமான ஹெக்லி பகுதியில் விமான தாக்குதலில் சேதமடைந்த எண்ணெய் குழாய்களை சோதனையிடும் பணியாளர்.

தெற்கு சூடானுக்கு எதிராக சூடான் போர் அறிவிப்பு விமானங்கள் சரமாரி குண்டு வீச்சு

பென்டீயூ, ஏப். 25- ஆப்பிரிக்க நாடான சூடானிலிருந்து தெற்கு சூடான் கடந்த ஆண்டு தனிநாடாக பிரிந்தது. இதன் பிறகு இரு நாடு களுக்கும் இடையே மோதல் நடந்து வரு கிறது.   இருநாடுகளின் எல்லை பகுதியில் ஹெக் லிக் என்ற இடம் உள் ளது. இங்கு ஏராளமான எண்ணை கிணறுகள் உள்ளன. இவற்றுக்கு இரு நாடுகளும் சொந்தம் கொண்டாடி வருகின் றன. இதனால்தான் மோதல் நடக்கிறது. இந்த நிலையில் ஹெக் லிக் பகுதியை தெற்கு சூடான் ராணுவம் கைப் பற்றி கொண்டது. அங் கிருந்து வெளியேறும் படி சூடான் அதிபர் ஒமர் அல் பசீர் எச்சரிக்கை விடுத்தார். ஆனால் தெற்கு சூடான் அதை பொருட்படுத்தவில்லை. எனவே சூடான் விமா னங்கள் மூலம் அந்த பகுதியில் தாக்குதல் நடத் தியது. 10 நாட்களுக்குள் தெற்குசூடான் படைகள் வாபஸ் வாங்காவிட் டால் தெற்கு சூடானை நசுக்கி விடுவேன் என்று அவர் எச்சரித்தார்.  10 நாட்கள் கடந்து விட்ட பிறகும் தெற்கு சூடான் படைகள் வாபஸ் பெறவில்லை. இதனால் சூடான் அதிபர் ஒமர் அல் பசீர் தெற்கு சூடான் மீது போர் அறிவித்து உள்ளார். இந்த அறிவிப்பு வெளியானதும் சூடான் விமானங்கள் எல்லை யில் உள்ள தெற்கு சூடான் பகுதியில் சரமாரி குண்டு விசி தாக்கின. இதில் ஏராளமானோர் காயம் அடைந்தனர். தொடர்ந்து தாக்குதல் நடந்து வரு கிறது. இது தொடர்பாக தெற்குசூடான் கவர்னர் தபான்டெங் சூடா னுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். சூடான் விமான தாக்குதலை நிறுத் தாவிட்டால் நாங்களும் பதிலடி கொடுப்போம். சூடான் மீது கருணை காட்டாமல் எங்கள் தாக்குதல் தீவிரமாக இருக்கும் என்று கூறி யுள்ளார். போரினால் அந்த பகுதியில் பெரும் பதட்டம் எற்பட்டுள்ளது..
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner