முன்பு அடுத்து Page:

மேற்கு வங்க மக்களை இழிவுபடுத்தும் சிறப்புப் பார்வையாளர்களின் செயல்பாடு: மம்தா

மேற்கு வங்க மக்களை இழிவுபடுத்தும்  சிறப்புப் பார்வையாளர்களின் செயல்பாடு: மம்தா

நாதியா, ஏப்.23 மேற்கு வங்க மக்களை இழிவுபடுத்தும் வகையில் தேர்தல் ஆணையத் தின் சிறப்பு பார்வையாளர்களின் செயல்பாடு உள்ளது என அந்த மாநில முதல்வர் மம்தா பானர்ஜி ஞாயிற்றுக்கிழமை குற்றம்சாட்டினார். நாதியா மாவட்டத்தில் தேர்தல் பிரசாரத்தின்போது மம்தா பானர்ஜி பேசியதாவது: மேற்கு வங்கத்தில் தேர்தலை காரணம் காட்டி, இரண்டு ஓய்வு பெற்ற அதிகாரிகளை நியமித்து, மேற்கு வங்க அரசுக்கு எதிராக இயக்கி வருகின்றனர். இந்த அதிகாரிகள், மேற்கு வங்க மக்களை இழிவுபடுத்தும் வகையிலும்,....... மேலும்

23 ஏப்ரல் 2019 16:20:04

தொடர் குண்டுவெடிப்பு எதிரொலி இலங்கையில் அவசரநிலை அமல் பலி 290-ஆக அதிகரிப்பு; இதுவரை 24 பேர் கைத…

கொழும்பு, ஏப்.23 தொடர் குண்டு வெடிப்புகள் எதிரொலியாக, இலங்கையில் திங்கள்கிழமை நள்ளிரவு முதல் அவசரநிலை அமல்படுத்தப்பட்டது. பயங்கரவாதத்தை வலுவுடன் எதிர்கொள்ளும் வகையில், பாதுகாப்புப் படையினருக்கு பெருமள விலான அதிகாரங்களை அளிக்க இந்த அவசர நிலை அமல்படுத்தப்பட்டுள்ளது என்று அதிபர் மைத்ரிபால சிறீசேனா தெரிவித்தார். இலங்கையில் கிறித்துவ சர்ச்சுகள், நட்சத்திர விடுதிகள் என மொத்தம் 8 இடங்களில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அடுத் தடுத்து குண்டுவெடிப்புகள் நிகழ்த்தப்பட் டன. இவற்றில் பலியானோர் எண்ணிக்கை திங்கள்கிழமை....... மேலும்

23 ஏப்ரல் 2019 15:36:03

பல கோடி ஆண்டுகளுக்கு முன் நிலப்பகுதிகளில் வாழ்ந்த நான்கு கால் திமிங்கலம்

துபாய், ஏப்.23  பல கோடி ஆண்டுகளுக்கு முன், நீரில் மட்டு மின்றி 4 கால்களோடு நிலத்திலும் திமிங்கலம் வாழ்ந்து இருக்கலாம் என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். அய்ந்து கோடி ஆண்டுகளுக்கு முந்தைய திமிங்கிலத்தின் படிவங்கள் வட இந்தியாவில் இமய மலையில் பகுதிகளிலும், இன்றைய பாகிஸ்தானிலும் காணப்படுகின்றன. இந்த படிமங்கள் தீவிர ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது. இதில், அந்த காலக்கட்டத்தில் தற்போது ஆழ்கடலில் வாழும் திமிங்கலங்கள் நான்கு கால்களுடன் நிலத்திலும் வாழ்த்து இருக்கலாம் என்று....... மேலும்

23 ஏப்ரல் 2019 15:21:03

பூமியின் அளவில் புதிய கிரகம் கண்டுபிடிப்பு

துபாய்,  ஏப்.23   அமெரிக்கா வின் விண்வெளி ஆய்வு மய்யமான நாசா, புதிய கிரகங்களை கண்டறிந்து ஆய்வு மேற்கொள் வதற்காக கடந்தாண்டு டெஸ் என்ற செயற்கைக்கோளை விண் ணுக்கு அனுப்பியது. இந்த செயற் கைக் கோள் மற்றொரு கிரகத்தை கண்டு பிடித்து ஆராய்ச்சியாளர் களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தி யுள்ளது. எச்டி 21749 சி என்று அழைக்கப்படும் இந்த கிரகம் பூமியை போல், அதே அளவில் இருப்பது பெரிய ஆச்சரியத்தை அளித்துள்ளது. ....... மேலும்

23 ஏப்ரல் 2019 15:19:03

ஜாலியன் வாலாபாக் படுகொலை ஆதாரங்களை காட்சிக்கு வைத்தது பாகிஸ்தான்

ஜாலியன் வாலாபாக் படுகொலை ஆதாரங்களை  காட்சிக்கு வைத்தது பாகிஸ்தான்

லாகூர், ஏப்.23 ஜாலியன் வாலாபாக் படுகொலை ஆவணங்களை பாகிஸ்தான் முதல் முறையாக, காட்சிக்கு வைத்துள்ளது. இந்திய விடுதலை போராட்ட வரலாற்றில், ஜாலியன் வாலாபாக் படுகொலையை யாராலும் மறக்க முடியாது. 1919ஆம் ஆண்டு ரவுலட் சட்டத்தை ஆங்கிலேய அரசு கொண்டு வந்தது. இதன்படி, யாரையும் விசாரணையின்றி கைது செய்யலாம். இந்த சட்டத்தை எதிர்த்து பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே ஜாலியன் வாலாபாக் என்ற இடத்தில் கூட்டம் நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து....... மேலும்

23 ஏப்ரல் 2019 15:17:03

அதிபரின் பதவிக் காலத்தை நீட்டிக்க எகிப்தில் பொதுவாக்கெடுப்பு

கெய்ரோ, ஏப்.23  எகிப்தில் அதிபரின் பதவிக் காலத்தை நீட்டிப்பது குறித்த பொதுவாக்கெடுப்பு 2-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த பொதுவாக்கெடுப்பு வெற்றி பெற் றால், தற்போதைய அதிபர் அப்தெல் அல்-சிசி, அந்தப் பதவியில் வரும் 2030-ஆம் ஆண்டு வரை நீடிப்பதற்கு வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது: எகிப்தின் தற்போதைய அரசியல் சாசனத் தின்படி, ஒருமுறை தேர்ந்தெடுக்கப் பட்ட அதிபரின் பதவிக் காலம் 4 ஆண்டுகளுக்கு மட்டுமே நீடிக்கும். மேலும், ஒருவர் இரண்டு....... மேலும்

23 ஏப்ரல் 2019 15:08:03

ஆப்கன்: அதிபர் பதவிக் காலம் செப்டம்பர் வரை நீட்டிப்பு

ஆப்கன்: அதிபர் பதவிக் காலம்  செப்டம்பர் வரை நீட்டிப்பு

ஆப்கன், ஏப்.23 ஆப்கானிஸ்தான் தேர்தல் வரும் செப்டம்பர் மாதத்துக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ள நிலையில், அதுவரை அதிபர் அஷ்ரஃப் கனியின் பதவிக் காலத்தை நீட்டித்து அந்த நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து உச்சநீதிமன்றம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட் டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் செப்டம்பர் மாதம் 28-ஆம் தேதி வரை தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அந்தத் தேர்தல் நடைபெற்று, அடுத்த அதிபர் பொறுப்பேற்கும் வரை நாட்டின் அதிபராக அஷ்ரஃப் கனி நீடிக்கும் வகையில்....... மேலும்

23 ஏப்ரல் 2019 15:04:03

காவல்துறை எச்சரிக்கை புறக்கணிப்பு

காவல்துறை எச்சரிக்கை புறக்கணிப்பு

இலங்கை தொடர் குண்டு வெடிப்பில் பலி எண்ணிக்கை 290ஆக அதிகரிப்பு: இந்தியர்கள் 4 பேர் பலி - ஊரடங்கு உத்தரவு அமல் இலங்கை, ஏப்.22 இலங்கையில் மூன்று தேவாலயங்கள், நட்சத்திர விடுதிகள் உள்பட மொத்தம் 8 இடங்களில் ஞாயிற்றுக் கிழமை அடுத்தடுத்து நிகழ்த்தப் பட்ட குண்டுவெடிப்புகளில் 290 பேர் பலியாகி னர். 500-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர். இதைத்தொடர்ந்து, நாடெங்கிலும் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. தாக்கு தல் தொடர்பாக இதுவரை....... மேலும்

22 ஏப்ரல் 2019 17:03:05

ஏப்.22 உலக பூமி நாள்

பிரபஞ்சத்தில் அனைவருக்கும் இருக்கும் ஒரே வீடு பூமி. நம்மை சுமக்கும் பூமியை, பாதுகாப்பது நமது கடமை. இதனை சேதப்படுத் தினால், வருங்கால சந்ததி வாழ வழியிருக்காது.  பூமியை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், ஏப்., 22ஆம் தேதி உலக பூமி தினம் கடைபிடிக்கப்படுகிறது. நமது உயிரினங்களை பாதுகாப்போம் என்பது இந்தாண்டு மய்யக்கருத்து. கடந்த 1970, ஏப்., 22ஆம் தேதி, 150 ஆண்டுகால தொழிற்சாலையின் கழிவுகளால், பாதிக்கப்பட்ட பூமியின் சுற்றுச்சூழலை பாதுகாக்கக்கோரி,....... மேலும்

22 ஏப்ரல் 2019 16:05:04

உலகின் மிக வயதான தாத்தா காலமானார்

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

டோக்கியோ, ஜன. 21- உலகில் அதிககாலம் வாழ்ந்துவரும் ஆண், பெண்களை உலக சாதனை பதிவுகளை நிர்வகித்துவரும் கின்னஸ் நிறுவனம் அங்கீகாரம் அளித்து, சிறப்பித்து வருகிறது.

அவ்வகையில், பிரான்சு நாட்டை சேர்ந்த ஜீயென்னி லூயிஸ் கால்மென்ட் என்ற பெண்மணி மிக அதிககாலம் வாழ்ந்த நபராக அறியப்படுகி றார். 122 ஆண்டுகள் 164 நாட்கள் உயிர்வாழ்ந்த இவர் கடந்த 1997-ஆம் ஆண்டு மரணம் அடைந்தார்.

அவருக்கு பின்னர் 116 ஆண்டுகள் 54 நாட்கள் உயிர் வாழ்ந்து ஜப்பானில் கடந்த 2013-ஆம் ஆண்டில் மரணம் அடைந்த ஜிரோய்மோன் கிமுரா என்பவர்தான் கின்னஸ் சான்றுகளின்படி மிக அதிக காலம் வாழ்ந்தவராக கருதப் படுகிறார்.

அவருக்கு பின்னர் பல நாடுகளை சேர்ந்த ஆண்களும், பெண்களும் அதிக ஆண்டுகள் உயிரோடு வாழ்ந்த நபர்களாக கின்னஸ் நிறுவனத்தால் அங் கீகரிக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை உலகில் மிக வயதான நபராக அறியப்பட்ட ஸ்பெயின் நாட்டை சேர்ந்த பிரான்சிஸ்க்கோ நுனேஸ் ஒலி வேரா 29.-1.-2018 அன்று தனது 113-ஆவது வயதில் மரணம் அடைந்தார்.

இதைதொடர்ந்து, ஜப்பான் நாட்டை சேர்ந்த மசாஸோ நோனாக்கா(அப்போது வயது 112) என்பவரை உலகில் வாழ்ந்து வருபவர்களில் அதிக வயதான ஆண்மகனாக கின்னஸ் நிறுவனம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அங்கீகரித்தது.

கடந்த 25.-7.-1905 அன்று பிறந்த மசாஸோ நோனாக்கா, இளம்வயதில் விவசாயம் மற் றும் மரம் வெட்டும் தொழிலில் ஈடுபாடு கொண்டிருந்தார்.

இந்நிலையில், ஹொக் கைடோ தீவில் வாழ்ந்துவந்த மசாஸோ நோனாக்கா உடல் நலக்குறைவால் நேற்று மர ணம் அடைந்ததாக அவரது குடும் பத்தார் அறிவித்துள்ளனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner