முன்பு அடுத்து Page:

மேற்கு வங்க மக்களை இழிவுபடுத்தும் சிறப்புப் பார்வையாளர்களின் செயல்பாடு: மம்தா

மேற்கு வங்க மக்களை இழிவுபடுத்தும்  சிறப்புப் பார்வையாளர்களின் செயல்பாடு: மம்தா

நாதியா, ஏப்.23 மேற்கு வங்க மக்களை இழிவுபடுத்தும் வகையில் தேர்தல் ஆணையத் தின் சிறப்பு பார்வையாளர்களின் செயல்பாடு உள்ளது என அந்த மாநில முதல்வர் மம்தா பானர்ஜி ஞாயிற்றுக்கிழமை குற்றம்சாட்டினார். நாதியா மாவட்டத்தில் தேர்தல் பிரசாரத்தின்போது மம்தா பானர்ஜி பேசியதாவது: மேற்கு வங்கத்தில் தேர்தலை காரணம் காட்டி, இரண்டு ஓய்வு பெற்ற அதிகாரிகளை நியமித்து, மேற்கு வங்க அரசுக்கு எதிராக இயக்கி வருகின்றனர். இந்த அதிகாரிகள், மேற்கு வங்க மக்களை இழிவுபடுத்தும் வகையிலும்,....... மேலும்

23 ஏப்ரல் 2019 16:20:04

தொடர் குண்டுவெடிப்பு எதிரொலி இலங்கையில் அவசரநிலை அமல் பலி 290-ஆக அதிகரிப்பு; இதுவரை 24 பேர் கைத…

கொழும்பு, ஏப்.23 தொடர் குண்டு வெடிப்புகள் எதிரொலியாக, இலங்கையில் திங்கள்கிழமை நள்ளிரவு முதல் அவசரநிலை அமல்படுத்தப்பட்டது. பயங்கரவாதத்தை வலுவுடன் எதிர்கொள்ளும் வகையில், பாதுகாப்புப் படையினருக்கு பெருமள விலான அதிகாரங்களை அளிக்க இந்த அவசர நிலை அமல்படுத்தப்பட்டுள்ளது என்று அதிபர் மைத்ரிபால சிறீசேனா தெரிவித்தார். இலங்கையில் கிறித்துவ சர்ச்சுகள், நட்சத்திர விடுதிகள் என மொத்தம் 8 இடங்களில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அடுத் தடுத்து குண்டுவெடிப்புகள் நிகழ்த்தப்பட் டன. இவற்றில் பலியானோர் எண்ணிக்கை திங்கள்கிழமை....... மேலும்

23 ஏப்ரல் 2019 15:36:03

பல கோடி ஆண்டுகளுக்கு முன் நிலப்பகுதிகளில் வாழ்ந்த நான்கு கால் திமிங்கலம்

துபாய், ஏப்.23  பல கோடி ஆண்டுகளுக்கு முன், நீரில் மட்டு மின்றி 4 கால்களோடு நிலத்திலும் திமிங்கலம் வாழ்ந்து இருக்கலாம் என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். அய்ந்து கோடி ஆண்டுகளுக்கு முந்தைய திமிங்கிலத்தின் படிவங்கள் வட இந்தியாவில் இமய மலையில் பகுதிகளிலும், இன்றைய பாகிஸ்தானிலும் காணப்படுகின்றன. இந்த படிமங்கள் தீவிர ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது. இதில், அந்த காலக்கட்டத்தில் தற்போது ஆழ்கடலில் வாழும் திமிங்கலங்கள் நான்கு கால்களுடன் நிலத்திலும் வாழ்த்து இருக்கலாம் என்று....... மேலும்

23 ஏப்ரல் 2019 15:21:03

பூமியின் அளவில் புதிய கிரகம் கண்டுபிடிப்பு

துபாய்,  ஏப்.23   அமெரிக்கா வின் விண்வெளி ஆய்வு மய்யமான நாசா, புதிய கிரகங்களை கண்டறிந்து ஆய்வு மேற்கொள் வதற்காக கடந்தாண்டு டெஸ் என்ற செயற்கைக்கோளை விண் ணுக்கு அனுப்பியது. இந்த செயற் கைக் கோள் மற்றொரு கிரகத்தை கண்டு பிடித்து ஆராய்ச்சியாளர் களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தி யுள்ளது. எச்டி 21749 சி என்று அழைக்கப்படும் இந்த கிரகம் பூமியை போல், அதே அளவில் இருப்பது பெரிய ஆச்சரியத்தை அளித்துள்ளது. ....... மேலும்

23 ஏப்ரல் 2019 15:19:03

ஜாலியன் வாலாபாக் படுகொலை ஆதாரங்களை காட்சிக்கு வைத்தது பாகிஸ்தான்

ஜாலியன் வாலாபாக் படுகொலை ஆதாரங்களை  காட்சிக்கு வைத்தது பாகிஸ்தான்

லாகூர், ஏப்.23 ஜாலியன் வாலாபாக் படுகொலை ஆவணங்களை பாகிஸ்தான் முதல் முறையாக, காட்சிக்கு வைத்துள்ளது. இந்திய விடுதலை போராட்ட வரலாற்றில், ஜாலியன் வாலாபாக் படுகொலையை யாராலும் மறக்க முடியாது. 1919ஆம் ஆண்டு ரவுலட் சட்டத்தை ஆங்கிலேய அரசு கொண்டு வந்தது. இதன்படி, யாரையும் விசாரணையின்றி கைது செய்யலாம். இந்த சட்டத்தை எதிர்த்து பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே ஜாலியன் வாலாபாக் என்ற இடத்தில் கூட்டம் நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து....... மேலும்

23 ஏப்ரல் 2019 15:17:03

அதிபரின் பதவிக் காலத்தை நீட்டிக்க எகிப்தில் பொதுவாக்கெடுப்பு

கெய்ரோ, ஏப்.23  எகிப்தில் அதிபரின் பதவிக் காலத்தை நீட்டிப்பது குறித்த பொதுவாக்கெடுப்பு 2-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த பொதுவாக்கெடுப்பு வெற்றி பெற் றால், தற்போதைய அதிபர் அப்தெல் அல்-சிசி, அந்தப் பதவியில் வரும் 2030-ஆம் ஆண்டு வரை நீடிப்பதற்கு வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது: எகிப்தின் தற்போதைய அரசியல் சாசனத் தின்படி, ஒருமுறை தேர்ந்தெடுக்கப் பட்ட அதிபரின் பதவிக் காலம் 4 ஆண்டுகளுக்கு மட்டுமே நீடிக்கும். மேலும், ஒருவர் இரண்டு....... மேலும்

23 ஏப்ரல் 2019 15:08:03

ஆப்கன்: அதிபர் பதவிக் காலம் செப்டம்பர் வரை நீட்டிப்பு

ஆப்கன்: அதிபர் பதவிக் காலம்  செப்டம்பர் வரை நீட்டிப்பு

ஆப்கன், ஏப்.23 ஆப்கானிஸ்தான் தேர்தல் வரும் செப்டம்பர் மாதத்துக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ள நிலையில், அதுவரை அதிபர் அஷ்ரஃப் கனியின் பதவிக் காலத்தை நீட்டித்து அந்த நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து உச்சநீதிமன்றம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட் டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் செப்டம்பர் மாதம் 28-ஆம் தேதி வரை தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அந்தத் தேர்தல் நடைபெற்று, அடுத்த அதிபர் பொறுப்பேற்கும் வரை நாட்டின் அதிபராக அஷ்ரஃப் கனி நீடிக்கும் வகையில்....... மேலும்

23 ஏப்ரல் 2019 15:04:03

காவல்துறை எச்சரிக்கை புறக்கணிப்பு

காவல்துறை எச்சரிக்கை புறக்கணிப்பு

இலங்கை தொடர் குண்டு வெடிப்பில் பலி எண்ணிக்கை 290ஆக அதிகரிப்பு: இந்தியர்கள் 4 பேர் பலி - ஊரடங்கு உத்தரவு அமல் இலங்கை, ஏப்.22 இலங்கையில் மூன்று தேவாலயங்கள், நட்சத்திர விடுதிகள் உள்பட மொத்தம் 8 இடங்களில் ஞாயிற்றுக் கிழமை அடுத்தடுத்து நிகழ்த்தப் பட்ட குண்டுவெடிப்புகளில் 290 பேர் பலியாகி னர். 500-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர். இதைத்தொடர்ந்து, நாடெங்கிலும் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. தாக்கு தல் தொடர்பாக இதுவரை....... மேலும்

22 ஏப்ரல் 2019 17:03:05

ஏப்.22 உலக பூமி நாள்

பிரபஞ்சத்தில் அனைவருக்கும் இருக்கும் ஒரே வீடு பூமி. நம்மை சுமக்கும் பூமியை, பாதுகாப்பது நமது கடமை. இதனை சேதப்படுத் தினால், வருங்கால சந்ததி வாழ வழியிருக்காது.  பூமியை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், ஏப்., 22ஆம் தேதி உலக பூமி தினம் கடைபிடிக்கப்படுகிறது. நமது உயிரினங்களை பாதுகாப்போம் என்பது இந்தாண்டு மய்யக்கருத்து. கடந்த 1970, ஏப்., 22ஆம் தேதி, 150 ஆண்டுகால தொழிற்சாலையின் கழிவுகளால், பாதிக்கப்பட்ட பூமியின் சுற்றுச்சூழலை பாதுகாக்கக்கோரி,....... மேலும்

22 ஏப்ரல் 2019 16:05:04

பிரான்சு: 10ஆவது வாரமாக மஞ்சள் அங்கிப் போராட்டம்

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பாரிசு, ஜன. 21- பிரான்சில் அரசுக்கு எதிராக வார இறுதி நாள்களில் நடைபெற்று வரும் "மஞ்சள் அங்கி' போராட்டம், 10-ஆவது வாரமாக சனிக்கிழமை யும் நடைபெற்றது.

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

பெட்ரோல் விலை உயர்வு உள்ளிட்ட அரசின் பல்வேறு முடிவுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரான்சில் நடைபெற்று வரும் மஞ்சள் அங்கிப் போராட் டம், 10-ஆவது வாரமாக சனிக் கிழமையும் தொடர்ந்தது.

போராட்டத்தின் ஒரு பகுதி யாக, தலைநகர் பாரீசில் நூற் றுக்கணக்கானவர்கள் ஆர்ப் பாட்ட ஊர்வலம் நடத்தினர்.

அப்போது வரிவிதிப்பு, ஓய் வூதியம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் அரசின் கொள் கைகளுக்கு எதிரான முழக்கங் களைக் கொண்ட பதாகைகளை அவர்கள் ஏந்திச் சென்றனர். மேலும், அதிபர் இமானுவல் மேக்ரான் உள்ளிட்ட தலைவர் களுக்கு எதிராகவும் அவர்கள் முழக்கங்கள் எழுப்பினர். இந்தப் போராட்டத்தின்போது வன்முறைச் சம்பவங்கள் ஏற் படாமல் தடுப்பதற்காக, பாரீ சில் மட்டும் 5,000 பாதுகாப்புப் படை வீரர்கள் பணியில் ஈடு படுத்தப்பட்டனர் என்று தக வல்கள் தெரிவிக்கின்றன.

எரிபொருள் விலையேற் றம், குறைந்தபட்ச ஊதியம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சி னைகளை முன்வைத்து பிரான் சில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 17-ஆம் தேதி முதல் தன்னெழுச்சிப் போராட்டம் நடைபெற்று வருகிறது. எதிர்ப் பின் அடையாளமாக, ஒளிரும் மஞ்சள் மேலங்கியை அணிந்து கொண்டு பொதுமக்கள் நடத்தும் இந்தப் போராட்டம், "மஞ்சள் அங்கி' போராட்டம் என்றழைக்கப்படுகிறது.

வார இறுதி நாட்களில் நடைபெற்று வந்த இந்தப் போராட்டத்தின் தீவிரம் அதிகரித்ததைத் தொடர்ந்து, அதனை முடிவுக்குக் கொண்டு வரும் நோக்கில் பல்வேறு சலுகைத் திட்டங்களை அதிபர் இமானுவல் மேக்ரன் அறிவித்தார்.

அதையடுத்து, மஞ்சள் அங் கிப் போராட்டத்தின் தீவிரம் சற்று குறைந்திருந்தாலும், தற் போது 10-ஆவது வாரமாக அந்தப் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருவது குறிப் பிடத்தக்கது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner