முன்பு அடுத்து Page:

புயல் தாக்குதல் - 5 பேர் பரிதாப பலி

வாசிங்டன், ஏப். 21- அமெரிக்காவில் தற்போது கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து, அங்குள்ள பல்வேறு மாநி லங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அலபாமா, மிசிசிபி, லூசியானா, டெக்சாஸ் ஆகிய மாநிலங்கள் இந்த புயலில் பெரும் சேதத்தை சந்தித்துள்ளன. தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதால் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வீடுகள் மின் வினியோகம் இன்றி இருளில் மூழ்கின. மிசிசிபி மாகாணத்தில் லிங்கன் கவுண்டி என்ற இடத்தில் மரம் வேரோடு சாய்ந்து விழுந்ததில் 63....... மேலும்

21 ஏப்ரல் 2019 16:08:04

அதிபர் டிரம்ப்பை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்: ஜனநாயகக் கட்சி வலியுறுத்தல்

அதிபர் டிரம்ப்பை தகுதி நீக்கம் செய்ய  வேண்டும்: ஜனநாயகக் கட்சி வலியுறுத்தல்

  வாசிங்டன், ஏப். 21- அமெரிக்க அதிபர் தேர்தலில் ரசியா தலை யீடு செய்தது உண்மைதான் என்று இதுகுறித்த விசாரணை அறிக்கையில் கூறப்பட்டுள்ள தால், அதிபர் டொனால்ட் டிரம்ப்பை தகுதி நீக்கம் செய் வதற்கான நடவடிக்கைகளைத் தொடங்க வேண்டும் என்று  எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி நாடாளுமன்ற உறுப்பி னர் எலிசபெத் வாரன் வலியு றுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: கடந்த 2016-ஆம் ஆண்டில் நடைபெற்ற அதிபர் தேர்தலில், குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட்....... மேலும்

21 ஏப்ரல் 2019 16:08:04

20ஆம் நூற்றாண்டின் பெரும் விபத்துகள்

20ஆம் நூற்றாண்டின் பெரும் விபத்துகள்

அய்.நா. பட்டியலில் போபால் விஷவாயு சம்பவம் ஜெனிவா, ஏப். 21- இருபதாம் நூற்றாண் டின் மிகப் பெரும் தொழிற்சாலை விபத்துகளில், போபால் வாயுக்கசிவால் ஏற்பட்ட விபத்தும் ஒன்று என அய்.நா. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக, அய்.நா.வின் உறுப்பு அமைப்பான சர்வதேச தொழி லாளர் அமைப்பு (அய்எல்ஓ) வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளதாவது: மத்தியப் பிரதேச மாநிலத்தின் தலைநகர் போபாலில், பூச்சிக்கொல்லித் தொழிற்சாலையில் கடந்த 1984-ஆம் ஆண்டு நிகழ்ந்த விசவாயுக்கசிவினால், சுமார்....... மேலும்

21 ஏப்ரல் 2019 16:08:04

வங்கதேச எல்லை வேலியைக் கடந்து வந்து வாக்களித்த அசாம் கிராமம்

அசாம், ஏப். 21- இந்திய - வங்கதேச எல்லை வேலியைக் கடந்து வந்து ஓர் அசாம் மாநில கிராமம் நடந்த மக்களவை தேர்தலில் வாக்களித்துள்ளது. இந்த மாநிலத்தில் உள்ள கரீம்கஞ்ஜ் மக்களவைத் தொகுதி இந்திய - வங்கதேச எல்லையை ஒட்டி அமைந்துள்ளது. இரு நாட்டுக்கு இடையிலான பன்னாட்டு எல்லைக் கோட்டில் மிகச்சரியாக இந்தியாவால் அங்கு எல்லை வேலி அமைக்க முடியவில்லை. எல்லை வேலிக்கும் - எல்லைக் கோட்டுக்கும் இடையில் சிக்கிக் கொண்டுள்ள....... மேலும்

21 ஏப்ரல் 2019 16:08:04

இலங்கை தேவாலயங்களில் குண்டுவெடிப்பு: 160 பேர் பலி - பலர் படுகாயம்

இலங்கை தேவாலயங்களில் குண்டுவெடிப்பு: 160 பேர் பலி - பலர் படுகாயம்

கொழும்பு, ஏப். 21- இலங்கையில் அடுத் தடுத்து 3 தேவாலயங்களில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். அதேபோல் 3 தனியார் விடுதிகளிலும் குண்டுவெடிப்பு நிகழ்ந்து இருக்கிறது. இந்த குண்டு வெடிப்பில் 160க்கும் அதிகமானோர் பலியானதாக முதற்கட்ட தகவல்கள் வருகிறது. இன்று உலகம் முழுக்க ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது. கிறிஸ்துவர்கள் நேற்று இரவு தேவால யங்களில் சென்று வழிபட்டார்கள். அதேபோல் இன்று காலையும் ஞாயிற் றுக் கிழமை என்பதால் தேவாலயங்க ளில்....... மேலும்

21 ஏப்ரல் 2019 15:19:03

மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு பெரிய பூஜ்யம் கிடைக்கும்: மம்தா

பலூர்காட், ஏப்.20 மேற்கு   பாஜக வுக்கு ஒரு மக்களவைத் தொகுதி கூட கிடைக்காது; பூஜ்யமே மிஞ்சும் என்று அந்த மாநில முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி தலை வருமான மம்தா கூறினார். மேற்கு வங்கத்தின் பலூர்காட், கங்காராம்பூர் ஆகிய இடங்களில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் பங்கேற்ற அவர், இதுதொடர்பாக பேசியதாவது: கடந்த 2014 மக்கள வைத் தேர்தலின்போது, மேற்கு வங்கத்தில் இரு தொகுதிகள் பாஜக வுக்கு கிடைத்தன. இந்த....... மேலும்

20 ஏப்ரல் 2019 16:40:04

அமெரிக்காவின் முதல் விண்வெளி வீராங்கனை காலமானார்

அமெரிக்காவின் முதல் விண்வெளி வீராங்கனை காலமானார்

நியூயார்க், ஏப். 20-  ஆண்கள் மட்டுமே கோலோச்சிவந்த அமெரிக்காவின் விண் வெளித்துறை ஆராய்ச்சி கூடமான நாசா வில் உரிய பயிற்சிகளை பெற்று 1961-ஆம் ஆண்டில் அமெரிக்காவின் முதல் விண் வெளி வீராங்கனை என்ற சிறப்பை பெற் றவர் ஜெர்ரி காப். இவருடன் சேர்ந்து மொத்தம் 13 பெண் கள் விண்வெளித்துறை ஆராய்ச்சிக்கான உடல்தகுதி தேர்வில் வெற்றி பெற்றதால் இவர்களை ‘மெர்குரி 13’ என்று ஊடகங்கள் குறிப்பிட்டன. ஆனால், தேர்ச்சிக்கு பின்னர் எந்த விண்வெளி....... மேலும்

20 ஏப்ரல் 2019 16:14:04

"அட ஆண்டவரே!" தேவாலய சுவர் விழுந்து 13 பேர் பலி

கேப் டவுன், ஏப். 20- தென்னாப் பிரிக்கா நாட்டின் கடலோர மாகாணங்களில் ஒன்றான குவாசுலு-நாட்டால் மாகாணத் தில் பழம்பெருமை மிக்க பெந்தகொஸ்தே தேவாலயம் ஒன்றுள்ளது. இந்த தேவாலயத் துக்கு தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ரமோபோசா கடந்த ஆண்டு வந்தபோது சிதிலம டைந்து வரும் இந்த தேவால யத்தை புதுப்பித்து தருமாறு இப்பகுதி மக்கள் கேட்டுக் கொண்டனர். இந்த மாகாணத்தில் சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்துவரும் நிலையில் நேற்றி ரவு இந்த....... மேலும்

20 ஏப்ரல் 2019 16:13:04

ரசியத் தலையீடு விசாரணை: விசாரணை அதிகாரியை நீக்க விரும்பினார் அதிபர் டிரம்ப் - அறிக்கையில் தகவல்

  ரசியத் தலையீடு விசாரணை:  விசாரணை அதிகாரியை நீக்க விரும்பினார் அதிபர் டிரம்ப் - அறிக்கையில் தகவல்

வாசிங்டன், ஏப். 20- அமெரிக்க அதிபர் தேர்தலில் ரசியத் தலையீடு குறித்த விசாரணையை சிறப்பு விசாரணை அதிகாரி தீவிரப்படுத்தினால், அவரை பதவியிலிருந்து நீக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விரும்பிய தாக, இதுகுறித்த விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட் டுள்ளது. கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில், குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப்புக்கு ஆதர வைத் திரட்டும் வகையில், ஜனநாயகக் கட்சி வேட்பாளர் கிலாரி கிளிண்டனின் மின்னஞ்சல் மற்றும் அலுவலகக் கணி....... மேலும்

20 ஏப்ரல் 2019 16:05:04

வர்த்தகப் பேச்சுவார்த்தை: ஜன. 30-இல் சீன துணைப் பிரதமர் அமெரிக்கா பயணம்

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பீஜிங், ஜன. 19- வர்த்தகப் போர் பதற்றத் தைத் தணிப்பதற்கான அடுத்தக்கட்டப் பேச்சுவார்த்தையை நடத்துவதற்காக சீன துணைப் பிரதமர் லியு ஹே தலை மையிலான குழு வரும் 30-ஆம் தேதி அமெரிக்கா செல்லவுள்ளது.

இதுகுறித்து சீன வர்த்தகத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையிலான அடுத்தக்கட்ட வர்த்தகப் பேச்சுவார்த்தை அமெரிக்காவில் இந்த மாதம் 30 மற்றும் 31-ஆம் தேதிகளில் நடைபெறவிருக்கிறது. இதற்காக, சீன துணைப் பிரதமர் லியு ஹே தலைமையிலான குழு அமெரிக்கா செல்லவிருக் கிறது.

கடந்த ஆண்டு ஆர்ஜென்டீனாவில் நடைபெற்ற ஜி20 மாநாட்டின்போது, அதிபர் ஷி ஜின்பிங்கும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பும் செய்து கொண்ட உடன்படிக்கைக்கு செயல் வடிவம் கொடுப்பதற்கான பேச்சுவார்த் தையை அமெரிக்க - சீன குழுவினர் மேற்கொள்வர் என்று அந்த அறிக்கை யில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் அமெரிக்க வர்த்தக மேம்பாட்டுத் துறை துணைத் தலைவர் ஜெப்ரி கெர்ரிஷ் தலைமையிலான குழுவினருடன், சீனக் குழுவினர் கடந்த வாரம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் தொடர்ச்சியாகவே, தற்போது சீனக் குழுவினர் அமெரிக்கா செல்கின்றனர். சீனாவுக்கு ஏற்றுமதி செய்யும் பொருள்களின் மதிப்பைவிட, அந்த நாட்டிடமிருந்து அமெரிக்கா இறக்குமதி செய்யும் பொருள்களின் மதிப்பு அதிக மாக இருப்பதால், இரு நாடுகளுக்கும் இடையே நியாயமற்ற அளவில் வர்த் தகப் பற்றாக்குறை நிலவி வருவதாக அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டி வரு கிறார்.

மேலும், அமெரிக்க நிறுவனங்கள் காப்புரிமை பெற்ற தொழில்நுட்பங் களைத் திருடி சீனா பயன்படுத்தி வருவதால் அமெரிக்க நிறுவனங்களுக்கு பெரும் இழப்பு ஏற்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டி வருகிறார். இதன் காரணமாக, சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பல லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பொருள்கள் மீது கூடுதல் வரி விதிக்கும் உத்தரவைப் அவர் பிறப்பித்து வந்தார்.

இதற்குப் பதிலடியாக, அமெரிக்க இறக்குமதி பொருள்கள் மீது சீனாவும் கூடுதல் வரிகளை அறிவித்து வந்தது.

இது, உலகின் மிகப் பெரிய பொரு ளாதார சக்திகளான அந்த இரு நாடு களுக்கும் இடையே வர்த்தகப் போர் வெடிக்கும் என்ற அச்சத்தை ஏற்படுத்தி யது.

இந்தச் சூழலில், அமெரிக்க அதிபர் டிரம்ப்பும், சீன அதிபர் ஷி ஜின்பிங்கும் ஆர்ஜென்டீனா தலைநகர் பியூனஸ் அயர்ஸில் கடந்த ஆண்டின் இறுதியில் நடைபெற்ற ஜி20 நாடுகளின் மாநாட் டினிடையே சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, சீனப் பொருள்கள் மீது அமெரிக்காவும், அமெரிக்கப் பொருள் கள் மீது சீனாவும் கூடுதல் வரி விதிப் பதை தாற்காலிகமாக நிறுத்திவைக்க இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்தன. இந்த தாற்காலிக சமாதான ஒப்பந்தத்தை நிரந்தரமாக்கும் வகையில், இரு நாடு களும் தற்போது பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner