முன்பு அடுத்து Page:

மேற்கு வங்க மக்களை இழிவுபடுத்தும் சிறப்புப் பார்வையாளர்களின் செயல்பாடு: மம்தா

மேற்கு வங்க மக்களை இழிவுபடுத்தும்  சிறப்புப் பார்வையாளர்களின் செயல்பாடு: மம்தா

நாதியா, ஏப்.23 மேற்கு வங்க மக்களை இழிவுபடுத்தும் வகையில் தேர்தல் ஆணையத் தின் சிறப்பு பார்வையாளர்களின் செயல்பாடு உள்ளது என அந்த மாநில முதல்வர் மம்தா பானர்ஜி ஞாயிற்றுக்கிழமை குற்றம்சாட்டினார். நாதியா மாவட்டத்தில் தேர்தல் பிரசாரத்தின்போது மம்தா பானர்ஜி பேசியதாவது: மேற்கு வங்கத்தில் தேர்தலை காரணம் காட்டி, இரண்டு ஓய்வு பெற்ற அதிகாரிகளை நியமித்து, மேற்கு வங்க அரசுக்கு எதிராக இயக்கி வருகின்றனர். இந்த அதிகாரிகள், மேற்கு வங்க மக்களை இழிவுபடுத்தும் வகையிலும்,....... மேலும்

23 ஏப்ரல் 2019 16:20:04

தொடர் குண்டுவெடிப்பு எதிரொலி இலங்கையில் அவசரநிலை அமல் பலி 290-ஆக அதிகரிப்பு; இதுவரை 24 பேர் கைத…

கொழும்பு, ஏப்.23 தொடர் குண்டு வெடிப்புகள் எதிரொலியாக, இலங்கையில் திங்கள்கிழமை நள்ளிரவு முதல் அவசரநிலை அமல்படுத்தப்பட்டது. பயங்கரவாதத்தை வலுவுடன் எதிர்கொள்ளும் வகையில், பாதுகாப்புப் படையினருக்கு பெருமள விலான அதிகாரங்களை அளிக்க இந்த அவசர நிலை அமல்படுத்தப்பட்டுள்ளது என்று அதிபர் மைத்ரிபால சிறீசேனா தெரிவித்தார். இலங்கையில் கிறித்துவ சர்ச்சுகள், நட்சத்திர விடுதிகள் என மொத்தம் 8 இடங்களில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அடுத் தடுத்து குண்டுவெடிப்புகள் நிகழ்த்தப்பட் டன. இவற்றில் பலியானோர் எண்ணிக்கை திங்கள்கிழமை....... மேலும்

23 ஏப்ரல் 2019 15:36:03

பல கோடி ஆண்டுகளுக்கு முன் நிலப்பகுதிகளில் வாழ்ந்த நான்கு கால் திமிங்கலம்

துபாய், ஏப்.23  பல கோடி ஆண்டுகளுக்கு முன், நீரில் மட்டு மின்றி 4 கால்களோடு நிலத்திலும் திமிங்கலம் வாழ்ந்து இருக்கலாம் என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். அய்ந்து கோடி ஆண்டுகளுக்கு முந்தைய திமிங்கிலத்தின் படிவங்கள் வட இந்தியாவில் இமய மலையில் பகுதிகளிலும், இன்றைய பாகிஸ்தானிலும் காணப்படுகின்றன. இந்த படிமங்கள் தீவிர ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது. இதில், அந்த காலக்கட்டத்தில் தற்போது ஆழ்கடலில் வாழும் திமிங்கலங்கள் நான்கு கால்களுடன் நிலத்திலும் வாழ்த்து இருக்கலாம் என்று....... மேலும்

23 ஏப்ரல் 2019 15:21:03

பூமியின் அளவில் புதிய கிரகம் கண்டுபிடிப்பு

துபாய்,  ஏப்.23   அமெரிக்கா வின் விண்வெளி ஆய்வு மய்யமான நாசா, புதிய கிரகங்களை கண்டறிந்து ஆய்வு மேற்கொள் வதற்காக கடந்தாண்டு டெஸ் என்ற செயற்கைக்கோளை விண் ணுக்கு அனுப்பியது. இந்த செயற் கைக் கோள் மற்றொரு கிரகத்தை கண்டு பிடித்து ஆராய்ச்சியாளர் களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தி யுள்ளது. எச்டி 21749 சி என்று அழைக்கப்படும் இந்த கிரகம் பூமியை போல், அதே அளவில் இருப்பது பெரிய ஆச்சரியத்தை அளித்துள்ளது. ....... மேலும்

23 ஏப்ரல் 2019 15:19:03

ஜாலியன் வாலாபாக் படுகொலை ஆதாரங்களை காட்சிக்கு வைத்தது பாகிஸ்தான்

ஜாலியன் வாலாபாக் படுகொலை ஆதாரங்களை  காட்சிக்கு வைத்தது பாகிஸ்தான்

லாகூர், ஏப்.23 ஜாலியன் வாலாபாக் படுகொலை ஆவணங்களை பாகிஸ்தான் முதல் முறையாக, காட்சிக்கு வைத்துள்ளது. இந்திய விடுதலை போராட்ட வரலாற்றில், ஜாலியன் வாலாபாக் படுகொலையை யாராலும் மறக்க முடியாது. 1919ஆம் ஆண்டு ரவுலட் சட்டத்தை ஆங்கிலேய அரசு கொண்டு வந்தது. இதன்படி, யாரையும் விசாரணையின்றி கைது செய்யலாம். இந்த சட்டத்தை எதிர்த்து பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே ஜாலியன் வாலாபாக் என்ற இடத்தில் கூட்டம் நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து....... மேலும்

23 ஏப்ரல் 2019 15:17:03

அதிபரின் பதவிக் காலத்தை நீட்டிக்க எகிப்தில் பொதுவாக்கெடுப்பு

கெய்ரோ, ஏப்.23  எகிப்தில் அதிபரின் பதவிக் காலத்தை நீட்டிப்பது குறித்த பொதுவாக்கெடுப்பு 2-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த பொதுவாக்கெடுப்பு வெற்றி பெற் றால், தற்போதைய அதிபர் அப்தெல் அல்-சிசி, அந்தப் பதவியில் வரும் 2030-ஆம் ஆண்டு வரை நீடிப்பதற்கு வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது: எகிப்தின் தற்போதைய அரசியல் சாசனத் தின்படி, ஒருமுறை தேர்ந்தெடுக்கப் பட்ட அதிபரின் பதவிக் காலம் 4 ஆண்டுகளுக்கு மட்டுமே நீடிக்கும். மேலும், ஒருவர் இரண்டு....... மேலும்

23 ஏப்ரல் 2019 15:08:03

ஆப்கன்: அதிபர் பதவிக் காலம் செப்டம்பர் வரை நீட்டிப்பு

ஆப்கன்: அதிபர் பதவிக் காலம்  செப்டம்பர் வரை நீட்டிப்பு

ஆப்கன், ஏப்.23 ஆப்கானிஸ்தான் தேர்தல் வரும் செப்டம்பர் மாதத்துக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ள நிலையில், அதுவரை அதிபர் அஷ்ரஃப் கனியின் பதவிக் காலத்தை நீட்டித்து அந்த நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து உச்சநீதிமன்றம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட் டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் செப்டம்பர் மாதம் 28-ஆம் தேதி வரை தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அந்தத் தேர்தல் நடைபெற்று, அடுத்த அதிபர் பொறுப்பேற்கும் வரை நாட்டின் அதிபராக அஷ்ரஃப் கனி நீடிக்கும் வகையில்....... மேலும்

23 ஏப்ரல் 2019 15:04:03

காவல்துறை எச்சரிக்கை புறக்கணிப்பு

காவல்துறை எச்சரிக்கை புறக்கணிப்பு

இலங்கை தொடர் குண்டு வெடிப்பில் பலி எண்ணிக்கை 290ஆக அதிகரிப்பு: இந்தியர்கள் 4 பேர் பலி - ஊரடங்கு உத்தரவு அமல் இலங்கை, ஏப்.22 இலங்கையில் மூன்று தேவாலயங்கள், நட்சத்திர விடுதிகள் உள்பட மொத்தம் 8 இடங்களில் ஞாயிற்றுக் கிழமை அடுத்தடுத்து நிகழ்த்தப் பட்ட குண்டுவெடிப்புகளில் 290 பேர் பலியாகி னர். 500-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர். இதைத்தொடர்ந்து, நாடெங்கிலும் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. தாக்கு தல் தொடர்பாக இதுவரை....... மேலும்

22 ஏப்ரல் 2019 17:03:05

ஏப்.22 உலக பூமி நாள்

பிரபஞ்சத்தில் அனைவருக்கும் இருக்கும் ஒரே வீடு பூமி. நம்மை சுமக்கும் பூமியை, பாதுகாப்பது நமது கடமை. இதனை சேதப்படுத் தினால், வருங்கால சந்ததி வாழ வழியிருக்காது.  பூமியை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், ஏப்., 22ஆம் தேதி உலக பூமி தினம் கடைபிடிக்கப்படுகிறது. நமது உயிரினங்களை பாதுகாப்போம் என்பது இந்தாண்டு மய்யக்கருத்து. கடந்த 1970, ஏப்., 22ஆம் தேதி, 150 ஆண்டுகால தொழிற்சாலையின் கழிவுகளால், பாதிக்கப்பட்ட பூமியின் சுற்றுச்சூழலை பாதுகாக்கக்கோரி,....... மேலும்

22 ஏப்ரல் 2019 16:05:04

ஜன. 21-இல் புதிய பிரெக்ஸிட் ஒப்பந்தம்: தெரசா மே உறுதி

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

லண்டன், ஜன. 19- பிரிட்டன் நாடாளுமன் றத்தால் நிராகரிக்கப்பட்ட பிரெக்ஸிட் ஒப்பந்தத்துக்கு மாற்றாக, புதிய ஒப் பந்த மசோதாவை வரும் 21-ஆம் தேதி தாக்கல் செய்வதாக நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் பிரதமர் தெரசா மே உறுதியளித்துள்ளார்.

மேலும், பிரெக்ஸிட் நடவடிக்கை களை சுமுகமாக நிறைவேற்ற ஒத்துழைப்பு அளிக்கும்படி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

பிரெக்ஸிட் தொடர்பாக அய்ரோப் பிய யூனியனுடன் அவர் மேற்கொண்ட ஒப்பந்த மசோதாவை நாடாளுமன்றம் நிராகரித்த பிறகும், அவர் மீது கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்த நிலையில் அவர் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் இவ் வாறு கோரியுள்ளார்.

இதுகுறித்து லண்டனிலுள்ள பிரதமர் இல்லத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

எனக்கு எதிராகக் கொண்டு வரப் பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்தது.

இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, அய்ரோப்பிய யூனியனிலிருந்து பிரிட் டன் வெளியேறும் (பிரெக்ஸிட்) நட வடிக்கையை ஒற்றுமையுடன் செயல் படுத்துவதில் நமது கவனத்தை செலுத் துவோம்.

தற்போது அய்ரோப்பிய யூனியனுட னான பிரெக்ஸிட் ஒப்பந்த மசோதா நாடாளுமன்றத்தில் நிராகரிக்கப்பட்டு உள்ளது. எனவே, இதுதொடர்பாக அய்ரோப்பிய யூனியன் தலைவர்களுடன் பேசி, மாற்று பிரெக்ஸிட் ஒப்பந்தத்தை நாடாளுமன்றத்தில் திங்கள்கிழமை தாக்கல் செய்வேன்.

பிரிட்டனுக்கு நன்மை அளிக்கும் பிரெக்ஸிட்டையே பெரும்பாலான மக்கள் எதிர்பார்க்கிறார்கள். எனவே, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் சொந்த நலன்களை புறம் தள்ளிவிட்டு இந்த நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார் தெரசா மே.

புதிய பிரெக்ஸிட் ஒப்பந்தத்தில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் சர்ச்சைக்குரிய அம்சங் களில் பல நீக்கப்படலாம் அல்லது மாற்றம் செய்யப்படலாம் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

அய்ரோப்பிய கண்டத்தைச் சேர்ந்த 28 நாடுகளின் கூட்டமைப்பான அய் ரோப்பிய யூனியனில், கடந்த 1973-ஆம் ஆண்டு முதல் பிரிட்டன் அங்கம் வகித்து வருகிறது.

இந்த நிலையில், அய்ரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியே றுவது தொடர்பான பொது வாக்கெடுப்பு கடந்த 2016-ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்றது.

அந்த வாக்கெடுப்பில், பெரும் பாலான வாக்காளர்கள் பிரெக்ஸிட்டுக்கு ஆதரவு தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து, அய்ரோப்பிய யூனியனி லிருந்து இந்த ஆண்டு மார்ச் மாதம் வெளியேற பிரிட்டன் முடிவு செய்து, அதற்கான நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, வெளியேற் றத்துக்குப் பிறகு பிரிட்டனும், அய் ரோப்பிய யூனியனும் பின்பற்ற வேண் டிய வர்த்தக விதிமுறைகள் குறித்த ஒப்பந்தத்தை இரு தரப்பினரும் மேற் கொண்டனர்.

இந்த ஒப்பந்தத்துக்கு கண்டனம் தெரிவித்து, தெரசா மே அமைச்சரவை யைச் சேர்ந்த 7 அமைச்சர்கள் பதவி விலகினர்.

இந்தச் சூழலில், பிரெக்ஸிட் ஒப் பந்தத்துக்கு நாடாளுமன்ற அங்கீகாரத் தைப் பெறுவதற்காக நடைபெற்ற வாக் கெடுப்பில் அது தோல்வியடைந்தது. அதனைத் தொடர்ந்து, பிரதமர் தெரசா மே மீது கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு எதிராக ஆளுங் கட்சி அதிருப்தி நாடாளுமன்ற உறுப்பி னர்கள் வாக்களித்ததால் அவரது அரசு தப்பியது.

இந்த நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் தெரசா மே இவ் வாறு உறுதியளித்துள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner