முன்பு அடுத்து Page:

புயல் தாக்குதல் - 5 பேர் பரிதாப பலி

வாசிங்டன், ஏப். 21- அமெரிக்காவில் தற்போது கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து, அங்குள்ள பல்வேறு மாநி லங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அலபாமா, மிசிசிபி, லூசியானா, டெக்சாஸ் ஆகிய மாநிலங்கள் இந்த புயலில் பெரும் சேதத்தை சந்தித்துள்ளன. தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதால் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வீடுகள் மின் வினியோகம் இன்றி இருளில் மூழ்கின. மிசிசிபி மாகாணத்தில் லிங்கன் கவுண்டி என்ற இடத்தில் மரம் வேரோடு சாய்ந்து விழுந்ததில் 63....... மேலும்

21 ஏப்ரல் 2019 16:08:04

அதிபர் டிரம்ப்பை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்: ஜனநாயகக் கட்சி வலியுறுத்தல்

அதிபர் டிரம்ப்பை தகுதி நீக்கம் செய்ய  வேண்டும்: ஜனநாயகக் கட்சி வலியுறுத்தல்

  வாசிங்டன், ஏப். 21- அமெரிக்க அதிபர் தேர்தலில் ரசியா தலை யீடு செய்தது உண்மைதான் என்று இதுகுறித்த விசாரணை அறிக்கையில் கூறப்பட்டுள்ள தால், அதிபர் டொனால்ட் டிரம்ப்பை தகுதி நீக்கம் செய் வதற்கான நடவடிக்கைகளைத் தொடங்க வேண்டும் என்று  எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி நாடாளுமன்ற உறுப்பி னர் எலிசபெத் வாரன் வலியு றுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: கடந்த 2016-ஆம் ஆண்டில் நடைபெற்ற அதிபர் தேர்தலில், குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட்....... மேலும்

21 ஏப்ரல் 2019 16:08:04

20ஆம் நூற்றாண்டின் பெரும் விபத்துகள்

20ஆம் நூற்றாண்டின் பெரும் விபத்துகள்

அய்.நா. பட்டியலில் போபால் விஷவாயு சம்பவம் ஜெனிவா, ஏப். 21- இருபதாம் நூற்றாண் டின் மிகப் பெரும் தொழிற்சாலை விபத்துகளில், போபால் வாயுக்கசிவால் ஏற்பட்ட விபத்தும் ஒன்று என அய்.நா. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக, அய்.நா.வின் உறுப்பு அமைப்பான சர்வதேச தொழி லாளர் அமைப்பு (அய்எல்ஓ) வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளதாவது: மத்தியப் பிரதேச மாநிலத்தின் தலைநகர் போபாலில், பூச்சிக்கொல்லித் தொழிற்சாலையில் கடந்த 1984-ஆம் ஆண்டு நிகழ்ந்த விசவாயுக்கசிவினால், சுமார்....... மேலும்

21 ஏப்ரல் 2019 16:08:04

வங்கதேச எல்லை வேலியைக் கடந்து வந்து வாக்களித்த அசாம் கிராமம்

அசாம், ஏப். 21- இந்திய - வங்கதேச எல்லை வேலியைக் கடந்து வந்து ஓர் அசாம் மாநில கிராமம் நடந்த மக்களவை தேர்தலில் வாக்களித்துள்ளது. இந்த மாநிலத்தில் உள்ள கரீம்கஞ்ஜ் மக்களவைத் தொகுதி இந்திய - வங்கதேச எல்லையை ஒட்டி அமைந்துள்ளது. இரு நாட்டுக்கு இடையிலான பன்னாட்டு எல்லைக் கோட்டில் மிகச்சரியாக இந்தியாவால் அங்கு எல்லை வேலி அமைக்க முடியவில்லை. எல்லை வேலிக்கும் - எல்லைக் கோட்டுக்கும் இடையில் சிக்கிக் கொண்டுள்ள....... மேலும்

21 ஏப்ரல் 2019 16:08:04

இலங்கை தேவாலயங்களில் குண்டுவெடிப்பு: 160 பேர் பலி - பலர் படுகாயம்

இலங்கை தேவாலயங்களில் குண்டுவெடிப்பு: 160 பேர் பலி - பலர் படுகாயம்

கொழும்பு, ஏப். 21- இலங்கையில் அடுத் தடுத்து 3 தேவாலயங்களில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். அதேபோல் 3 தனியார் விடுதிகளிலும் குண்டுவெடிப்பு நிகழ்ந்து இருக்கிறது. இந்த குண்டு வெடிப்பில் 160க்கும் அதிகமானோர் பலியானதாக முதற்கட்ட தகவல்கள் வருகிறது. இன்று உலகம் முழுக்க ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது. கிறிஸ்துவர்கள் நேற்று இரவு தேவால யங்களில் சென்று வழிபட்டார்கள். அதேபோல் இன்று காலையும் ஞாயிற் றுக் கிழமை என்பதால் தேவாலயங்க ளில்....... மேலும்

21 ஏப்ரல் 2019 15:19:03

மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு பெரிய பூஜ்யம் கிடைக்கும்: மம்தா

பலூர்காட், ஏப்.20 மேற்கு   பாஜக வுக்கு ஒரு மக்களவைத் தொகுதி கூட கிடைக்காது; பூஜ்யமே மிஞ்சும் என்று அந்த மாநில முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி தலை வருமான மம்தா கூறினார். மேற்கு வங்கத்தின் பலூர்காட், கங்காராம்பூர் ஆகிய இடங்களில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் பங்கேற்ற அவர், இதுதொடர்பாக பேசியதாவது: கடந்த 2014 மக்கள வைத் தேர்தலின்போது, மேற்கு வங்கத்தில் இரு தொகுதிகள் பாஜக வுக்கு கிடைத்தன. இந்த....... மேலும்

20 ஏப்ரல் 2019 16:40:04

அமெரிக்காவின் முதல் விண்வெளி வீராங்கனை காலமானார்

அமெரிக்காவின் முதல் விண்வெளி வீராங்கனை காலமானார்

நியூயார்க், ஏப். 20-  ஆண்கள் மட்டுமே கோலோச்சிவந்த அமெரிக்காவின் விண் வெளித்துறை ஆராய்ச்சி கூடமான நாசா வில் உரிய பயிற்சிகளை பெற்று 1961-ஆம் ஆண்டில் அமெரிக்காவின் முதல் விண் வெளி வீராங்கனை என்ற சிறப்பை பெற் றவர் ஜெர்ரி காப். இவருடன் சேர்ந்து மொத்தம் 13 பெண் கள் விண்வெளித்துறை ஆராய்ச்சிக்கான உடல்தகுதி தேர்வில் வெற்றி பெற்றதால் இவர்களை ‘மெர்குரி 13’ என்று ஊடகங்கள் குறிப்பிட்டன. ஆனால், தேர்ச்சிக்கு பின்னர் எந்த விண்வெளி....... மேலும்

20 ஏப்ரல் 2019 16:14:04

"அட ஆண்டவரே!" தேவாலய சுவர் விழுந்து 13 பேர் பலி

கேப் டவுன், ஏப். 20- தென்னாப் பிரிக்கா நாட்டின் கடலோர மாகாணங்களில் ஒன்றான குவாசுலு-நாட்டால் மாகாணத் தில் பழம்பெருமை மிக்க பெந்தகொஸ்தே தேவாலயம் ஒன்றுள்ளது. இந்த தேவாலயத் துக்கு தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ரமோபோசா கடந்த ஆண்டு வந்தபோது சிதிலம டைந்து வரும் இந்த தேவால யத்தை புதுப்பித்து தருமாறு இப்பகுதி மக்கள் கேட்டுக் கொண்டனர். இந்த மாகாணத்தில் சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்துவரும் நிலையில் நேற்றி ரவு இந்த....... மேலும்

20 ஏப்ரல் 2019 16:13:04

ரசியத் தலையீடு விசாரணை: விசாரணை அதிகாரியை நீக்க விரும்பினார் அதிபர் டிரம்ப் - அறிக்கையில் தகவல்

  ரசியத் தலையீடு விசாரணை:  விசாரணை அதிகாரியை நீக்க விரும்பினார் அதிபர் டிரம்ப் - அறிக்கையில் தகவல்

வாசிங்டன், ஏப். 20- அமெரிக்க அதிபர் தேர்தலில் ரசியத் தலையீடு குறித்த விசாரணையை சிறப்பு விசாரணை அதிகாரி தீவிரப்படுத்தினால், அவரை பதவியிலிருந்து நீக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விரும்பிய தாக, இதுகுறித்த விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட் டுள்ளது. கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில், குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப்புக்கு ஆதர வைத் திரட்டும் வகையில், ஜனநாயகக் கட்சி வேட்பாளர் கிலாரி கிளிண்டனின் மின்னஞ்சல் மற்றும் அலுவலகக் கணி....... மேலும்

20 ஏப்ரல் 2019 16:05:04

ஆட்சி அதிகாரத்தை அரசியல் தலைமையிடம் ஒப்படைக்க கோரி மக்கள் போராட்டம்

ஆட்சி அதிகாரத்தை அரசியல் தலைமையிடம் ஒப்படைக்க கோரி மக்கள் போராட்டம்

சூடான், ஏப். 20- சூடானில் ராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள ஆட்சி அதி காரத்தை அரசியல் தலைமையிடம் ஒப்படைக்க கோரி ஆயிரக்கணக் கானோர் ராணுவ கவுன்சில் அலுவ லகம் முன்பு வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். சூடான் அதிபராக நீண்டகாலம் பதவி வகித்து வந்த ஒமர் அல் பசீருக்கு எதிராக, இனப் படுகொலை உள்ளிட்ட வழக்குகளில் பன்னாட்டு நீதிமன்றம் 2 கைது ஆணைகளை பிறப்பித்தது. இதையடுத்து, அவருக்கு எதிராக அந்தநாட்டில் மாபெரும் போராட்டம் வெடித்ததன்....... மேலும்

20 ஏப்ரல் 2019 15:39:03

ஆப்கானிஸ்தானில் தங்கச் சுரங்கம் சரிந்ததில் எட்டு பேர் உயிரிழப்பு

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

காபூல், ஜன. 19- ஆப்கானிஸ்தானின் வடகிழக்கு மாகாணமான படகாஷனில் தங்கச் சுரங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில், ராகிஸ்தான் மாவட்டத்தில் உள்ள ஒரு தங்கச் சுரங்கத் தில் நேற்று தொழிலாளர்கள், தங்கத் தாதுக்களை தோண்டி எடுக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென சுரங்கத்தின் ஒரு பகுதி சரிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளில் சிக்கி 8 தொழிலாளர்கள் பலியானார்கள். 2 பேர் காயம் அடைந்தனர். இந்த ஆண்டின் இரண்டாவது சுரங்க விபத்து இதுவாகும். இதே மாகாணத்தில் கடந்த 4ஆ-ம் தேதி ஏற்பட்ட சுரங்க விபத்தில் 40 பேர் பலியாகினர்.

ஆப்கானிஸ்தானில் உள்ள சுரங்கங்களில் பெரும்பாலான சுரங்கங்கள் மிகவும் பழமையானவை. அவை சரியான முறை யில் பராமரிக்கப்படாததால், அடிக்கடி விபத்து ஏற்படுவது குறிப்பிடத்தக்கது.

கொலம்பியா வெடிகுண்டு தாக்குதல்

அய்.நா. கடும் கண்டனம்

நியூயார்க், ஜன. 19- மத்திய அமெரிக்க நாடான கொலம்பியாவின் தலைநகரம் போகோடா. இங்குள்ள காவல்துறை அகாடமி அருகே கார் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர். இந்த  தாக்குதலுக்கு அய்.நா. சபை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளது.  'ஏற்றுக்கொள்ள முடியாத குற்றவியல் சம்பவம் நடந்துள்ளது. வன்முறையில் இருந்து விலகி, வளமான மற்றும் அமைதியான எதிர்காலத்தை உருவாக்குவதற்கு அரசு மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு எதிரான தாக்குதல். இதுபோன்ற தாக்குதல்களை வன்மையாக கண்டிக்கிறோம் என அய்நா அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இக்குண்டுவெடிப்பு, நகரின் தெற்கில் ஜெனரல் சன்டர்டர் அகாடமியில் ஒரு விழாவின் நிறைவில் நடைபெற்றுள்ளது. இதுவரை, தாக்குதல்களுக்கு காரணமானவர்கள் குறித்து எந்த தகவல்களும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner