முன்பு அடுத்து Page:

நவ.20-இல் பாக். பிரதமர் இம்ரான் மலேசியப் பயணம்

இசுலாமாபாத், நவ. 18- பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், இந்த மாதம் 20 மற்றும் 21-ஆம் தேதிகளில் மலேசிய சுற்றுப் பயணம் மேற் கொள்ள விருப்பதாக அந்த நாட்டு வெளியுறவுத் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனர். அவருடன் உயர்நிலைக் குழு ஒன்றும் மலேசியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு அந்த நாட்டு உயரதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தும் என்று அவர்கள் கூறினர். பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தா னுக்கு நிதியுதவி கோருவதற் காகவே, இம்ரான் மலேசியா....... மேலும்

18 நவம்பர் 2018 16:28:04

வங்கதேசம் கைவிட்டது: ரோகிங்கியாக்களை திருப்பி அனுப்பும் திட்டம்

வங்கதேசம் கைவிட்டது: ரோகிங்கியாக்களை திருப்பி அனுப்பும் திட்டம்

டாக்கா, நவ. 18-- வங்கதேசத்தில் தஞ்ச மடைந்துள்ள நூற்றுக்கணக்கான ரோகிங் கியா அகதிகளை, மியான்மாவுக்குத் திருப்பி அனுப்பும் திட்டத்தை வங்க தேசம் கைவிட்டது. தங்கள் நாட்டுக்கு அனுப்பப்படு வதை எதிர்த்து அகதிகள் போராட்டம் நடத்தியதன் காரணமாக, அந்தத் திட் டம் கைவிடப்பட்டதாகக் கூறப்படுகிறது. வன்முறைக்கு அஞ்சி, மியான்மா வின் ராக்கைன் மாகாணத்திலிருந்து சுமார் 7 லட்சம் ரோகிங்கியா முசுலிம் இனத்தவர் வங்கதேசத்தில் தஞ்சம டைந்துள்ளனர். அவர்களில் 2,000 பேரைக் கொண்ட முதல் அணியை மீண்டும்....... மேலும்

18 நவம்பர் 2018 16:28:04

2.25 கோடி குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதில்லை: ஆய்வில் தகவல்

2.25 கோடி குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதில்லை: ஆய்வில் தகவல்

இசுலாமாபாத், நவ. 18- பாகிஸ் தானில் சுமார் 2.25 கோடி குழந்தைகள் பள்ளிக்குச் செல் வதில்லை எனவும், அவர்க ளுள் பெரும்பாலானோர் சிறு மிகள் என்பதும் பன்னாட்டு மனித உரிமைகள் அமைப்பு ஒன்று நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. சிறுமிகள் கல்வி கற்பதில் உள்ள தடைகள் என்ற தலைப் பில், மனித உரிமைகள் காவல் அமைப்பு பாகிஸ்தானில் ஆய்வு மேற்கொண்டது. அந்த ஆய்வின் அறிக்கை இந்த வாரத் தொடக்கத்தில் வெளியிடப்பட்டது. அதில் தெரிவிக்....... மேலும்

18 நவம்பர் 2018 16:28:04

டிரம்புடன் வாக்குவாதம்- சிஎன்என் செய்தியாளர் வெள்ளை மாளிகை நுழைய மீண்டும் அனுமதி

டிரம்புடன் வாக்குவாதம்- சிஎன்என் செய்தியாளர் வெள்ளை மாளிகை நுழைய மீண்டும் அனுமதி

வாசிங்டன், நவ. 18- அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப் பேற்ற இரண்டு ஆண்டுகளுக் குப் பிறகு அமெரிக்காவில் இடைத் தேர்தல் நடந்து முடிந் தது. இதில் பிரதிநிதிக்களுக் கான இடைத் தேர்தலில் டிரம்ப்பின் குடியரசுக் கட்சி சரிவைச் சந்தித்தது. இதன்பிறகு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், டிரம்ப் கலந்து கொண்டார். அப்போது, சிஎன்என் செய்தியாளர் ஜிம் அகோஸ்டா, மத்திய அமெரிக் காவில் இருந்து தெற்கு அமெ ரிக்க எல்லைக்கு இடம்பெய ரும்....... மேலும்

18 நவம்பர் 2018 16:28:04

பிரெக்சிட் உடன்படிக்கை - தெரசா மே இறுதி முடிவுக்கு பிரிட்டன் அமைச்சரவை ஒப்புதல்

பிரெக்சிட் உடன்படிக்கை - தெரசா மே இறுதி முடிவுக்கு பிரிட்டன் அமைச்சரவை ஒப்புதல்

லண்டன், நவ. 17- அய்ரோப்பிய யூனிய னில் இருந்து விலக பிரிட்டன் நாடாளு மன்றம் எடுத்த முடிவு தொடர்பாக கடந்த ஆண்டு நடைபெற்ற பொது வாக்கெடுப்பில் விலகும் தீர்மானத்தை ஆதரித்து அதிகம் பேர் வாக்களித்தனர். இதையடுத்து, அய்ரோப்பிய யூனியனில் இருந்து பிரிந்துவிட்ட பிரிட்டன் தனி நாடாகவே பார்க்கப்படுகிறது. ஆனால், அய்ரோப்பிய யூனியனில் இணைந்துள்ள 27 நாடுகளுடனான நிதி கொடுக்கல் - வாங்கல், எதிர்கால பரி வர்த்தனை, விசா மற்றும் குடியுரிமை தொடர்பாக....... மேலும்

17 நவம்பர் 2018 14:36:02

வடகொரியா மீண்டும் அதி நவீன புதிய ஆயுத சோதனை: செய்தி நிறுவனங்கள் தகவல்

வடகொரியா மீண்டும் அதி நவீன புதிய ஆயுத சோதனை: செய்தி நிறுவனங்கள் தகவல்

சியோல், நவ. 17- அணு ஆயுத சோதனை, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை என உலக நாடுகளை மிரட்டி வந்த வடகொரியா, தென்கொரியாவில் நடைபெற்ற குளிர் கால ஒலிம்பிக் போட்டிகளுக்கு பிறகு தனது போக்கில் மென்மையை கையாளத்துவங்கியது. அணு ஆயுத சோதனைகளை நிறுத் திக் கொள்ள வடகொரியா  ஒப்புக்கொண் டதையடுத்து கடந்த ஜூன் மாதம் சிங் கப்பூரின் செண்டோசா தீவில் அமெரிக்க அதிபர் டிரம்ப் - வட கொரிய....... மேலும்

17 நவம்பர் 2018 14:04:02

என்னே அவலம்! கேவலம்!! இலங்கை நாடாளுமன்றத்தில் மிளகாய் பொடி தாக்குதல்!

கொழும்பு, நவ. 17- இலங்கை நாடாளுமன்றம் வெள்ளிக்கிழமை கூடியபோதும், பிரதமர் ராஜபக்சே ஆதரவு எம்.பி.க்களின் போராட்டம் காரணமாக களேபரமாகக் காட்சியளித்தது. குறிப்பாக, அவைத்தலைவர் கரு.ஜெயசூர்யா அமர வேண்டிய இருக்கையை, ஆளும் கூட்டணி எம்.பி. அருந்திகா பெர்ணான்டோ ஆக்கிரமித்துக் கொண்டார். மேலும், எதிர்தரப்பு எம்.பி.க்கள் மீது ராஜபக்சே ஆதரவு எம்.பி.க்கள் மிளகாய்ப் பொடியை தூவினர். நாற்காலிகளும் தூக்கி வீசப்பட்டன. இறுதியில் காவலர்களை உள்ளே வரவழைத்த ஜெயசூர்யா, அவையை திங்கள்கிழமை வரை ஒத்திவைப்பதாக....... மேலும்

17 நவம்பர் 2018 14:04:02

இலங்கையில் அரசியல் நெருக்கடி: எம்.பி.க்கள் இடையே மோதல் - முடங்கியது நாடாளுமன்றம்

  கொழும்பு, நவ. 16-- இலங்கை நாடாளுமன்றத்தில் இரண்டா வது நாளாக வியாழனன்றும் கூச்சல் ஏற்பட்டது. எம்.பிக்க ளுக்கிடையே மோதல்போக்கு ஏற்பட்டதுடன், நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் காயமடைந் தார். சுமார்ஒரு மணி நேரம் நாடாளுமன்ற உறுப்பினர்க ளின் கூச்சல் குழப்பம் நீடித்தது.இலங்கை நாடாளுமன்றம் வியாழக்கிழமை காலை கூடிய போது, பிரதமருக்காக ஒதுக் கப்பட்டிருந்த ஆசனத்தில் மகிந்த ராஜபக்சே அமர்ந்திருந் தார். ரணில் விக்ரமசிங்க எதிர்க் கட்சியினர் பக்கம் இருந்த ஆசனத்தில் அமர்ந்திருந்தார். சபையை....... மேலும்

16 நவம்பர் 2018 15:10:03

இந்தியாவுக்கு மிகவும் சாதகமான நாடு தகுதி வழங்கும் திட்டமில்லை

பாகிஸ்தான் அறிவிப்பு இசுலாமாபாத், நவ. 16- இந்தி யாவுக்கு மிகவும் சாதகமான நாடு என்ற தகுதியை உடன டியாக வழங்கும் திட்டமில்லை என்று பாகிஸ்தான் அறிவித் துள்ளது. உலக வர்த்தக அமைப்பின் விதியின்படி, அதில் உறுப்பி னர்களாக இருக்கும் நாடுகள், பிற உறுப்பு நாடுகளுக்கு மிக வும் சாதகமான நாடு என்ற தகுதியை அளிக்க வேண்டியது கட்டாயமாகும். அதன்படி, பாகிஸ்தான் உள்பட உலக வர்த்தக அமைப்பில் உறுப்பி னர்களாக இருக்கும் அனைத்து நாடுகளுக்கும்....... மேலும்

16 நவம்பர் 2018 15:10:03

குழந்தைகளின் மரணத்தை தள்ளிபோடும் மருந்து கண்டுபிடிப்பு

  ஜெனீவா, நவ. 16- சுவிட்சர் லாந்தில் ‘டைப்’ ஸ்பைனல் மஸ்குலர் அட்ரோபி எனப் படும் முதுகு தண்டுவட அரிய நோயுடன் ஆண்டுக்கு 8 முதல் 12 குழந்தைகள் பிறக்கின்றன. இதனால் அவதிப்பட்டு பிறந்து ஓராண்டுக்குள் மரணம் அடை கின்றன. இந்த நிலையில் சுவிட் சர்லாந்தின் ‘நோவார்டிஸ்’ நிறுவனம் அதற்கான மருந்தை கண்டுபிடித்துள்ளது. இந்த மருந்தை ஒருமுறை எடுத்துக் கொண்டால் தொடர்ந்து 13 ஆண்டுகள் மரணத்தை தள்ளிப் போட முடியும். இந்த மருந்தின்....... மேலும்

16 நவம்பர் 2018 15:10:03

பாகிஸ்தான் சிறையில் இருந்து ஆசியா பீவி விடுதலை - நெதர்லாந்து செல்வதாக தகவல்

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

இசுலாமாபாத், நவ. 9- பாகிஸ் தானில் மதநிந்தனை வழக்கில் மரண தண்டனை விதிக்கப் பட்ட கிறித்துவ பெண் ஆசியா பீவியை (வயது 47) உச்ச நீதி மன்றம் கடந்த மாதம் 31ஆம் தேதி விடுதலை செய்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து அர சியல் கட்சிகள் மற்றும் மத வாத அமைப்புகள் நாடு முழு வதும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டன. சாலைகளில் தடை அமைத்தும், டயர்களை கொளுத்தியும் அந்த அமைப் புகள் நடத்திய போராட்டத்தால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப் பட்டது. தீவிர மதப்பற்றாளர்கள் பலர், ஆசியாவுக்கு மரண தண்டனை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்கள்.

ஆசியா பீவியின் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதால், அவர் நாட்டை விட்டு வெளியேற வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் கள் வெளியாகின. மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பு வெளியாகும் வரை ஆசியா பீவியை நாட்டை விட்டு செல்ல அனுமதிக்க மாட்டோம் என்று அரசு தரப்பில் உறுதி அளிக்கப்பட் டதை அடுத்து, தெஹ்ரீ-இ-லப் பாயிக் பாகிஸ்தான் (டிஎல்பி) கட்சி போராட்டத்தை திரும்ப பெற்றது. முக்கிய கட்சியான டிஎல்பி போராட்டத்தைக் கைவிட்டதால் பாகிஸ்தானில் இயல்பு நிலை திரும்பியது.

இந்த நிலையில், வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டு ஒரு வாரத்திற்கு பிறகு முல்தானில் உள்ள பெண்கள் சிறையில் இருந்து ஆசியா பீவி விடுவிக் கப்பட்டார்.  ராவல்பிண்டியில்  உள்ள நூர் கான் விமான தளத் துக்கு அழைத்துச்செல்லப்படும் ஆசியா பீவி, அங்கிருந்து நெதர் லாந்து அழைத்துச் செல்லப்பட உள்ளதாக உள்ளூர் ஊடகங்க ளில் செய்தி வெளியாகியுள்ளது. ஆசியா பீவியை இம்ரான் கான் அரசு விடுதலை செய்துள் ளது. நெதர்லாந்து தூதர் மற்றும் அதிகாரிகள் முல்தான் சிறைக்கு சென்று விடுதலையை உறுதி செய்துள்ளனர். இதையடுத்து ஆசியா பீவியை நெதர்லாந் துக்கு அனுப்பி வைத்துள்ளனர் என டிஎல்பி கட்சி செய்தித் தொடர்பாளர் கூறியிருக்கிறார். அதேசமயம் இசுலாமாபாத் மற்றும் ராவல் பிண்டியில் டிஎல்பி கட்சி தொண்டர்கள் திரண்டு, ஆசியா பீவியை நாட்டை விட்டு செல்ல அரசு அனுமதிக்கக்கூடாது என கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner