முன்பு அடுத்து Page:

வடகொரியாவுக்கு நெருக்கடி அளிக்கவில்லை: டிரம்ப்

வாசிங்டன், பிப். 22- அமெரிக்க அதிபர் டிரம்ப், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் இடையேயான 2-ஆவது சந்திப்பு வியட்நாமின் கனோய் நகரில் வருகிற 27, 28ஆம் தேதிகளில் நடக்க இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் முழுமூச்சில் நடந்து வருகின் றன. இந்த நிலையில், வெள்ளை மாளிகையில் நேற்று பத்திரிகை யாளர்களை சந்தித்து பேசிய டிரம்ப், அணுஆயுதங்களை முழுமையாக கைவிட வட கொரியாவுக்கு அமெரிக்கா நெருக்கடி அளிக்கவில்லை என கூறினார். இதுபற்றி அவர்....... மேலும்

22 பிப்ரவரி 2019 15:59:03

திபெத் புரட்சி தினம்: வெளிநாட்டினர் வருகைக்குத் தடை

திபெத் புரட்சி தினம்: வெளிநாட்டினர் வருகைக்குத் தடை

திபெத், பிப். 22- திபெத் புரட்சி தினம், அரசுக்கு எதிரான கலவர நினைவு தினங்களையொட்டி அந்தப் பகுதியில் வெளிநாட்டினருக்கு அனுமதி மறுக்கப் பட்டுள்ளது. இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்ப தாவது: திபெத்தில் சீன அரசுக்கு எதிராக கடந்த 1959-ஆம் ஆண்டு புரட்சி வெடித் தது. அதன் 60-ஆவது ஆண்டு நினைவு தினம் அடுத்த மாதம் 10-ஆம் தேதி வருகிறது. மேலும், அரசுக்கு எதிராக கடந்த 2008-ஆம் ஆண்டு நடைபெற்ற கலவரத் தின் நினைவு தினம் மார்ச்....... மேலும்

22 பிப்ரவரி 2019 15:59:03

தீவிபத்து: உயிரிழப்பு 81-ஆக அதிகரிப்பு

தீவிபத்து: உயிரிழப்பு 81-ஆக அதிகரிப்பு

டாக்கா, பிப். 22- வங்கதேச தலைநகர் டாக்காவில் புதன்கிழமை இரவு ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தனவர்களின் எண்ணிக்கை 81ஆக வியாழக்கிழமை அதிகரித்தது. டாக்காவில் உள்ள அடுக்குமாடி கட்டடத்தில் செயல்பட்டு வந்த அமில கிடங்கில் புதன்கிழமை இரவு 10:40 மணியளவில் இந்த தீ விபத்து ஏற்பட்டது. எரிவாயு உருளை வெடித்து இவ்விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதல்கட்ட விசாரணை யில் தெரியவந்துள்ளது. மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள பகுதி என்பதால் உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும்....... மேலும்

22 பிப்ரவரி 2019 15:54:03

வெலிங்டன் புல்வாமா தாக்குதலுக்கு நியூசிலாந்து கண்டனம்

வெலிங்டன் புல்வாமா தாக்குதலுக்கு நியூசிலாந்து கண்டனம்

வாசிங்டன், பிப். 22- காஷ்மீரில் புல்வாமாவில் இந்திய ராணுவ வீரர்களைக் குறிவைத்து நடத் தப்பட்ட தாக்குதலுக்கு நியூசி லாந்து கண்டனம்  தெரிவித்து உள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில், ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதி நடத்திய தற்கொலைப்படைத் தாக்குதலில் இந்திய துணை ராணுவப்படையினர் 40 பேர் கொல்லப்பட்டனர். இந்தியா மட்டுமில்லாமல் உலக நாடுகளிடையே இந்தத் தாக்குதல் பெரும் அதிர்ச்சி அடையச் செய்தது. மேலும் இந்தத் தாக்குதல் காரணமாக இந்தியா - பாகிஸ் தான்....... மேலும்

22 பிப்ரவரி 2019 15:50:03

மடூரோவை தொடர்ந்து ஆதரித்தால் பேரிழப்பு: வெனிசுலா ராணுவத்துக்கு டிரம்ப் எச்சரிக்கை

மியான்மா, பிப். 21- வெனிசுலாவில் அதிபர் நிக்கோலஸ் மடூரோவுக்கு அளித்து வரும் ஆதரவைக் கைவிடாவிட்டால், அனைத் தையும் இழக்க நேரிடும் என்று அந்த நாட்டு ராணுவத்துக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்து உள்ளார். இதுகுறித்து, ஃபுளோரிடா மாகா ணம், மியாமி நகரிலுள்ள ஃபுளோரிடா சர்வதேச பல்கலைக்கழகத்தில் டிரம்ப் பேசியதாவது: வெனிசுலாவில் சுதந்திரத்தையும், ஜனநாயகத்தையும் விரும்பும் அந்த நாட்டு மக்களுக்கு அமெரிக்கா முழு ஆத ரவை வழங்கி வருகிறது. வெனிசுலாவில் ஜனநாயகம்....... மேலும்

21 பிப்ரவரி 2019 15:09:03

டிரம்ப்பின் அவசர நிலை அறிவிப்பை எதிர்த்து 16 மாகாண அரசுகள் வழக்கு

டிரம்ப்பின் அவசர நிலை அறிவிப்பை எதிர்த்து 16 மாகாண அரசுகள் வழக்கு

பிரான்சிஸ்கோ, பிப். 21- மெக்சிகோ எல்லைச் சுவர் எழுப்ப நிதி பெறுவ தற்காக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் செய்துள்ள அவசர நிலை பிர கடனத்தை எதிர்த்து 16 மாகாண அரசு கள் வழக்கு தொடுத்துள்ளன. இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்ப தாவது: அமெரிக்காவில் அதிபர் டிரம்ப் அவ சர நிலை அறிவித்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து  16 மாகாண அரசுகள் வழக்கு தொடுத்துள்ளன. கலிஃபோர்னியா, கோலராடோ, கனெக்டிகட், டெலவேர், ஹவாய், இல்லினாய்ஸ், மெய்னே, மேரிலாண்ட்,....... மேலும்

21 பிப்ரவரி 2019 15:08:03

அமெரிக்க அதிபர் தேர்தல் சாண்டர்ஸ் மீண்டும் போட்டி

அமெரிக்க அதிபர் தேர்தல்  சாண்டர்ஸ் மீண்டும் போட்டி

வாசிங்டன், பிப். 21- அமெரிக்காவில் அடுத்த ஆண்டு நடை பெறவுள்ள அதிபர் தேர்த லில், ஜனநாயகக் கட்சி வேட்பாளருக் கான போட்டியில் பங்கேற்கப்போவதாக அந்தக் கட்சியின் மூத்த தலைவர் பெர்னி சாண்டர்ஸ் (77) அறிவித்துள்ளார். கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின்போது ஜனநாயகக் கட்சி வேட் பாளருக்கான போட்டியில் இரண்டாவ தாக வந்த பெர்னி சாண்டர்ஸ், தற்போது மீண்டும் களமிறங்க விருக்கிறார். இதுகுறித்து, அவர் தெரிவித்துள்ளதாவது: அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் அதிபர் தேர்தலில் மீண்டும்....... மேலும்

21 பிப்ரவரி 2019 15:05:03

அமெரிக்கா பொருளாதாரப் போரை தொடுத்துள்ளது: ஈரான் குற்றச்சாட்டு

அமெரிக்கா பொருளாதாரப் போரை தொடுத்துள்ளது: ஈரான் குற்றச்சாட்டு

தெக்ரான், பிப். 20- அமெரிக்கா பொரு ளாதார ரீதியிலான  போரை தொடுத் திருப்பதாக ஈரான் குற்றம்சாட்டியுள்ளது. ஈரானின் பந்தார் அப்பாஸ் பகுதி யில் புதிதாக கட்டப்பட்டுள்ள கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை அந் நாட்டு அதிபர் ஹசன் ரவுஹானி திறந்து வைத்தார். அப்போது அவர் பேசியதாவது: ஈரான் மீது அமெரிக்கா, பொருளா தார ரீதியிலான போரைத் தொடுத்துள் ளது. ராணுவம்  நடத்தும் போரைக் காட்டிலும், பொருளாதார ரீதியிலான போர் மிகவும் கடினமானதாகும். ஈரான் மீது....... மேலும்

20 பிப்ரவரி 2019 16:33:04

இரண்டாயிரம் பாகிஸ்தான் கைதிகள் விடுதலை: சவுதி இளவரசர் உத்தரவு

இரண்டாயிரம் பாகிஸ்தான் கைதிகள்  விடுதலை: சவுதி இளவரசர் உத்தரவு

இசுலாமாபாத், பிப். 20- சவுதி அரேபியா நாட்டு சிறைகளில் பாகிஸ்தானை சேர்ந்த சுமார் 3 ஆயிரம் பேர் பல்வேறு குற்ற வழக்குகளில் விசாரணை கைதி யாகவும், தண்டனை பெற்ற கைதிகளாகவும் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், சவுதி அரே பியா இளவரசர் முஹம்மது பின் சல்மான் அல் சவுத் இரு நாள் அரசுமுறை பயணமாக இசுலாமாபாத் வந்துள்ளார். நேற்று அவரை சந்தித்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சவுதி சிறைகளில் உள்ள பாகிஸ்தான் கைதிகளை....... மேலும்

20 பிப்ரவரி 2019 16:32:04

பிரிட்டன் தொழிலாளர் கட்சியிலிருந்து ஏழு நாடாளுமன்ற உறுப்பினர்கள் விலகல்

பிரிட்டன் தொழிலாளர் கட்சியிலிருந்து  ஏழு நாடாளுமன்ற உறுப்பினர்கள் விலகல்

லண்டன், பிப். 20- பிரெக்ஸிட் விவகாரத்தில், பிரிட்டனி லுள்ள முக்கிய எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியிலிருந்து 7 நாடாளுமன்ற உறுப்பினர்கள் விலகியுள்ளனர். லண்டனில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆன் கோஃபி, ஏஞ்சலா ஸ்மித், கிறிஸ் லெஸ்லி, சுக்கா உமுன்னா, மைக் கேப் பிஸ், லூசியானா பெர்ஜர், கேவின் ஷுக்கர் ஆகிய 7 பேர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறியதா வது: பிரெக்ஸிட் மற்றும் யூதர்களுக்கு எதிரான பாகுபாடு ஆகிய விவகாரங்களில், தொழி லாளர் கட்சித்....... மேலும்

20 பிப்ரவரி 2019 16:28:04

அரசியல் குழப்பம் - உச்சகட்டம்! இலங்கைப் பிரச்சினை: இரா. சம்பந்தன் பேட்டி

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கொழும்பு, நவ. 8- ராஜபக்சே அரசுக்கு ஆதரவாக நம்பிக்கை கோரும் தீர்மானம் கொண்டுவரப்பட்டால் அதனை எதிர்க் கப்போவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு அறிவித்திருக்கிறது. அந்த முடிவு எடுக்கப் பட்டதன் பின்னணி, ராஜபக்சேவை ஆத ரிக்க முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் ஆகியவை குறித்து கூட்டமைப்பின் தலை வர் இரா.சம்பந்தன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கேள்வி : ராஜபக்சே அரசுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் வாக்களிக்கப்போவ தாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு முடிவு செய்திருக்கிறது. இந்த முடிவின் பின்னணி என்ன?

பதில் : பிரதமரை நீக்க அதிகாரமில்லை. முதலில் இருந்தது; 19வது திருத்தச் சட்டத் திற்குப் பிறகுஅந்த அதிகாரமில்லை. பிரத மராக இருந்தவரை ஜனாதிபதி இப்படி நீக்கியது தவறு. பிரதமர் முறையாக நீக்கப் பட்டால்தான், வெற்றிடம் ஏற்பட்டு புதிய பிரதமரை நியமிக்கலாம். வெற்றிடம் ஏற் படாமல் புதிய பிரதமரை நியமித்திருக் கிறார். நாடாளுமன்றத்தை ஒத்தி வைத் திருக்கிறார். இடைக்காலத்தில் பலவித மான கெடுபிடிகள் நிலவுவதை நாங்கள் அறிகிறோம். பிரதமராக பதவியேற்பவர் நாடாளுமன்றத்தில் நம்பிக்கை பெற வேண்டியது அவசியம். ஆகவே இதனை நாங்கள் கவனமாக பரிசீலித்து, இந்த செயல்பாடுகளை நாங்கள் ஏற்க முடியாது என்று முடிவெடுத்தோம். பிரதமரை நீக்கி யது தவறு; புதிய பிரதமரை நியமித்தது தவறு என்பதை வைத்து, ராஜபக்சே அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தால், மேலே சொன்ன அடிப்படையில் செயல்படலாம் என்ற முடிவுக்கு வந்திருக் கிறோம்.

அதிபர் மைத்திரிபால சிறிசேன பிரதமரை நீக்கிய பிறகு, நீங்கள் அவரை சந்தித்துப் பேசினீர்கள். என்ன பேசினீர்கள்?

அந்த சந்திப்பின்போது அரசியல் தீர்வு உட்பட பல விஷயங்களைப் பற்றிப் பேசி னேன். இதைப் பற்றியும் பேசினேன். எங் கள் கருத்தைத் தெரிவித்தோம். அவ்வளவு தான்.

இதற்குப் பிறகு ராஜபக்சேவை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினீர்கள். அப் போது அவர் உங்களுடைய ஆதரவைக் கோரியதாகத் தெரிகிறது.

ஆம். அவர் எங்களுடைய ஆதரவைக் கோரினார். ஆதரவைத் தருவது கடினமாக இருக்கும் என்று சொன்னேன். நடந்தது தவறு என்பது எங்களுடைய கருத்து. இருந்தபோதும் அரசியல் தீர்வு தொடர்பாக உங்கள் நிலைப்பாட்டை நீங்கள் முன் வைப்பதாக இருந்தால், ஏனைய நாடாளு மன்ற உறுப்பினர்களுடன் பேசி நாங்கள் ஒரு முடிவுக்கு வரலாம் என்று சொன் னேன். அரசியல் தீர்வு தொடர்பாக ஒரு தீர்மானத் திட்டத்தை முன்வைக்க வேண் டும்; எவ்விதம் நடைமுறைப்படுத்துவீர்கள்; எந்த கால வரம்புக்குள் செயல்படுத்துவீர்கள் என்பதை எழுத்து மூலமாகத் தந்தால் ஆதரவு தருவது குறித்து பரிசீலிப்போம் எனக் கூறினேன். தான் மீண்டும் தொடர்பு கொள்வதாகச் சொன்னார். ஆனால் தொடர்பு கொள்ளவில்லை.

அரசியல் தீர்வு என்றால், நீங்கள் என்ன கேட்டீர்கள் என்பதைச் சொல்ல முடியுமா?

நம்பிக்கையுடைய உறுதியான அதிகா ரப் பகிர்வு, பிராந்தியங்களின் அடிப்படை யில் அளிக்கப்படும் இந்த அதிகாரப் பகிர்வு மீளப் பெற முடியாததாக இருக்க வேண் டும். ஒரு பிராந்தியமோ, மாகாணமோ அந்த அதிகாரத்தை தன்னிச்சையாக பயன் படுத்தக்கூடியதாக இருக்க வேண்டும். மத்திய அரசு அதில் தலையிடக்கூடிய நிலை இருக்கக்கூடாது. மக்களின் அன் றாட தேவைகளை, மக்கள் தேர்வு செய்யும் பிரதிநிதிகளின் ஊடாக, ஒரு பிராந்திய அமைச்சரவையின் ஊடாக, பிராந்திய சபையின் ஊடாக செய்யப்பட வேண்டும் என்பதுதான் அந்தத் தீர்வுத் திட்டம்.

சமீபத்தில் ஜனாதிபதி பேசும்போது, வடக்கு - கிழக்கு இணைக்கப்பட மாட் டாது, பெடரல் ஆட்சி முறை இனி சாத்தியமில்லையென்றெல்லாம் கூறியிருக் கிறார்.

இது ஏற்புடையதல்ல. இது பேசித் தீர்க்க வேண்டிய விஷயம். அவர் சொன் னதை ஏற்கவில்லை. பார்க்கலாம்.

அய்க்கிய தேசியக் கட்சி உங்களிடம் ஆதரவைக் கோரியபோது, ராஜபக்சேவிடம் கேட்டதுபோல அவர்களிடம் வாக்குறுதி ஏதேனும் கேட்டீர்களா?

அய்க்கிய தேசியக் கட்சியைப் பொறுத்த வரை, நாடாளு மன்றத்தில் தற்போது ஒரு நடைமுறை நடைபெற்று வருகிறது. புதிய அரசியல் சாசனத்தை உருவாக்க, நாடாளு மன்றம் ஒரு அரசியல் சாசன சபையாக மாற்றப்பட்டு அதை விவாதித்துவந்தது. நடவடிக்கை குழு, உப குழுக்கள் நியமிக் கப்பட்டு அவர்கள் அறிக்கைகளை சமர்ப் பித்திருக்கிறார்கள். ஆகவே இது தொடர் பாக பல விஷயங்கள் நடைபெற்று வரு கின்றன. அய்க்கிய தேசியக் கட்சி அரசைப் பொறுத்தவரையில் ஒரு காரியம் நடந்து வருகிறது. அதைப் பற்றி எங்களுக்குத் தெரியும் என்பதால், புதிதாக எதையும் பேச வேண்டிய தேவை ஏற்படவில்லை.

ரணில் ஆதரவைக் கோரியபோது நீங் கள் என்ன சொன்னீர்கள்?

நாங்கள் நபர்கள் சார்ந்து முடிவெடுக்கப் போவதில்லை. எங்களைப் பொறுத்தவரை அரசியல் சாசனம் மீறப்பட்டுள்ளது. அதைக் கருத்தில்கொண்டுதான் முடிவெடுப்போம் என்று சொன்னேன்.

நாடாளுமன்றம் கூடுவது தள்ளிப் போகும் நிலையில், உறுப்பினர்கள் இடம் மாறுவது வேகமாக நடந்துவருகிறது. கூட்டமைப்பைச் சேர்ந்த ஒரு உறுப்பினரே ராஜபக்சேவுக்கு ஆதரவாக மாறியிருக் கிறார்....?

நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடம் மாறுவது உண்மை. கூட்டமைப்பின் உறுப் பினர் ஒருவர் இடம் மாறியிருக்கிறார். அப்படிச் செய்வாரென நாங்கள் நினைக்க வில்லை. அது மிகவும் கேவலமான செயல். ஆனால், அவரைப் பற்றிய சந்தேகங்கள் இருந்தன. அவர் மீது விரைவில் நடவ டிக்கை எடுத்து, நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை பறிக்க எடுக்க வேண்டிய நட வடிக்கையை எடுப்போம்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner