முன்பு அடுத்து Page:

மேற்கு வங்க மக்களை இழிவுபடுத்தும் சிறப்புப் பார்வையாளர்களின் செயல்பாடு: மம்தா

மேற்கு வங்க மக்களை இழிவுபடுத்தும்  சிறப்புப் பார்வையாளர்களின் செயல்பாடு: மம்தா

நாதியா, ஏப்.23 மேற்கு வங்க மக்களை இழிவுபடுத்தும் வகையில் தேர்தல் ஆணையத் தின் சிறப்பு பார்வையாளர்களின் செயல்பாடு உள்ளது என அந்த மாநில முதல்வர் மம்தா பானர்ஜி ஞாயிற்றுக்கிழமை குற்றம்சாட்டினார். நாதியா மாவட்டத்தில் தேர்தல் பிரசாரத்தின்போது மம்தா பானர்ஜி பேசியதாவது: மேற்கு வங்கத்தில் தேர்தலை காரணம் காட்டி, இரண்டு ஓய்வு பெற்ற அதிகாரிகளை நியமித்து, மேற்கு வங்க அரசுக்கு எதிராக இயக்கி வருகின்றனர். இந்த அதிகாரிகள், மேற்கு வங்க மக்களை இழிவுபடுத்தும் வகையிலும்,....... மேலும்

23 ஏப்ரல் 2019 16:20:04

தொடர் குண்டுவெடிப்பு எதிரொலி இலங்கையில் அவசரநிலை அமல் பலி 290-ஆக அதிகரிப்பு; இதுவரை 24 பேர் கைத…

கொழும்பு, ஏப்.23 தொடர் குண்டு வெடிப்புகள் எதிரொலியாக, இலங்கையில் திங்கள்கிழமை நள்ளிரவு முதல் அவசரநிலை அமல்படுத்தப்பட்டது. பயங்கரவாதத்தை வலுவுடன் எதிர்கொள்ளும் வகையில், பாதுகாப்புப் படையினருக்கு பெருமள விலான அதிகாரங்களை அளிக்க இந்த அவசர நிலை அமல்படுத்தப்பட்டுள்ளது என்று அதிபர் மைத்ரிபால சிறீசேனா தெரிவித்தார். இலங்கையில் கிறித்துவ சர்ச்சுகள், நட்சத்திர விடுதிகள் என மொத்தம் 8 இடங்களில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அடுத் தடுத்து குண்டுவெடிப்புகள் நிகழ்த்தப்பட் டன. இவற்றில் பலியானோர் எண்ணிக்கை திங்கள்கிழமை....... மேலும்

23 ஏப்ரல் 2019 15:36:03

பல கோடி ஆண்டுகளுக்கு முன் நிலப்பகுதிகளில் வாழ்ந்த நான்கு கால் திமிங்கலம்

துபாய், ஏப்.23  பல கோடி ஆண்டுகளுக்கு முன், நீரில் மட்டு மின்றி 4 கால்களோடு நிலத்திலும் திமிங்கலம் வாழ்ந்து இருக்கலாம் என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். அய்ந்து கோடி ஆண்டுகளுக்கு முந்தைய திமிங்கிலத்தின் படிவங்கள் வட இந்தியாவில் இமய மலையில் பகுதிகளிலும், இன்றைய பாகிஸ்தானிலும் காணப்படுகின்றன. இந்த படிமங்கள் தீவிர ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது. இதில், அந்த காலக்கட்டத்தில் தற்போது ஆழ்கடலில் வாழும் திமிங்கலங்கள் நான்கு கால்களுடன் நிலத்திலும் வாழ்த்து இருக்கலாம் என்று....... மேலும்

23 ஏப்ரல் 2019 15:21:03

பூமியின் அளவில் புதிய கிரகம் கண்டுபிடிப்பு

துபாய்,  ஏப்.23   அமெரிக்கா வின் விண்வெளி ஆய்வு மய்யமான நாசா, புதிய கிரகங்களை கண்டறிந்து ஆய்வு மேற்கொள் வதற்காக கடந்தாண்டு டெஸ் என்ற செயற்கைக்கோளை விண் ணுக்கு அனுப்பியது. இந்த செயற் கைக் கோள் மற்றொரு கிரகத்தை கண்டு பிடித்து ஆராய்ச்சியாளர் களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தி யுள்ளது. எச்டி 21749 சி என்று அழைக்கப்படும் இந்த கிரகம் பூமியை போல், அதே அளவில் இருப்பது பெரிய ஆச்சரியத்தை அளித்துள்ளது. ....... மேலும்

23 ஏப்ரல் 2019 15:19:03

ஜாலியன் வாலாபாக் படுகொலை ஆதாரங்களை காட்சிக்கு வைத்தது பாகிஸ்தான்

ஜாலியன் வாலாபாக் படுகொலை ஆதாரங்களை  காட்சிக்கு வைத்தது பாகிஸ்தான்

லாகூர், ஏப்.23 ஜாலியன் வாலாபாக் படுகொலை ஆவணங்களை பாகிஸ்தான் முதல் முறையாக, காட்சிக்கு வைத்துள்ளது. இந்திய விடுதலை போராட்ட வரலாற்றில், ஜாலியன் வாலாபாக் படுகொலையை யாராலும் மறக்க முடியாது. 1919ஆம் ஆண்டு ரவுலட் சட்டத்தை ஆங்கிலேய அரசு கொண்டு வந்தது. இதன்படி, யாரையும் விசாரணையின்றி கைது செய்யலாம். இந்த சட்டத்தை எதிர்த்து பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே ஜாலியன் வாலாபாக் என்ற இடத்தில் கூட்டம் நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து....... மேலும்

23 ஏப்ரல் 2019 15:17:03

அதிபரின் பதவிக் காலத்தை நீட்டிக்க எகிப்தில் பொதுவாக்கெடுப்பு

கெய்ரோ, ஏப்.23  எகிப்தில் அதிபரின் பதவிக் காலத்தை நீட்டிப்பது குறித்த பொதுவாக்கெடுப்பு 2-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த பொதுவாக்கெடுப்பு வெற்றி பெற் றால், தற்போதைய அதிபர் அப்தெல் அல்-சிசி, அந்தப் பதவியில் வரும் 2030-ஆம் ஆண்டு வரை நீடிப்பதற்கு வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது: எகிப்தின் தற்போதைய அரசியல் சாசனத் தின்படி, ஒருமுறை தேர்ந்தெடுக்கப் பட்ட அதிபரின் பதவிக் காலம் 4 ஆண்டுகளுக்கு மட்டுமே நீடிக்கும். மேலும், ஒருவர் இரண்டு....... மேலும்

23 ஏப்ரல் 2019 15:08:03

ஆப்கன்: அதிபர் பதவிக் காலம் செப்டம்பர் வரை நீட்டிப்பு

ஆப்கன்: அதிபர் பதவிக் காலம்  செப்டம்பர் வரை நீட்டிப்பு

ஆப்கன், ஏப்.23 ஆப்கானிஸ்தான் தேர்தல் வரும் செப்டம்பர் மாதத்துக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ள நிலையில், அதுவரை அதிபர் அஷ்ரஃப் கனியின் பதவிக் காலத்தை நீட்டித்து அந்த நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து உச்சநீதிமன்றம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட் டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் செப்டம்பர் மாதம் 28-ஆம் தேதி வரை தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அந்தத் தேர்தல் நடைபெற்று, அடுத்த அதிபர் பொறுப்பேற்கும் வரை நாட்டின் அதிபராக அஷ்ரஃப் கனி நீடிக்கும் வகையில்....... மேலும்

23 ஏப்ரல் 2019 15:04:03

காவல்துறை எச்சரிக்கை புறக்கணிப்பு

காவல்துறை எச்சரிக்கை புறக்கணிப்பு

இலங்கை தொடர் குண்டு வெடிப்பில் பலி எண்ணிக்கை 290ஆக அதிகரிப்பு: இந்தியர்கள் 4 பேர் பலி - ஊரடங்கு உத்தரவு அமல் இலங்கை, ஏப்.22 இலங்கையில் மூன்று தேவாலயங்கள், நட்சத்திர விடுதிகள் உள்பட மொத்தம் 8 இடங்களில் ஞாயிற்றுக் கிழமை அடுத்தடுத்து நிகழ்த்தப் பட்ட குண்டுவெடிப்புகளில் 290 பேர் பலியாகி னர். 500-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர். இதைத்தொடர்ந்து, நாடெங்கிலும் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. தாக்கு தல் தொடர்பாக இதுவரை....... மேலும்

22 ஏப்ரல் 2019 17:03:05

ஏப்.22 உலக பூமி நாள்

பிரபஞ்சத்தில் அனைவருக்கும் இருக்கும் ஒரே வீடு பூமி. நம்மை சுமக்கும் பூமியை, பாதுகாப்பது நமது கடமை. இதனை சேதப்படுத் தினால், வருங்கால சந்ததி வாழ வழியிருக்காது.  பூமியை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், ஏப்., 22ஆம் தேதி உலக பூமி தினம் கடைபிடிக்கப்படுகிறது. நமது உயிரினங்களை பாதுகாப்போம் என்பது இந்தாண்டு மய்யக்கருத்து. கடந்த 1970, ஏப்., 22ஆம் தேதி, 150 ஆண்டுகால தொழிற்சாலையின் கழிவுகளால், பாதிக்கப்பட்ட பூமியின் சுற்றுச்சூழலை பாதுகாக்கக்கோரி,....... மேலும்

22 ஏப்ரல் 2019 16:05:04

இலங்கை தமிழர்களுக்கு நீதியை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்: விக்னேஸ்வரன்

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கொழும்பு, நவ. 7- இலங்கை தமிழர்களுக்கு நீதியைப் பெற் றுத்தர சர்வதேச சமூகம் நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று இலங்கை வடமாகாண முன்னாள் முதல்வர் விக்னேஸ் வரன் கூறியுள்ளார்.  இலங்கையின் பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவி வகித்து வந்த நிலையில், திடீரென அதி பர் சிறீசேனா, மகிந்த ராஜபக் சேவை பிரதமராக நியமித்த போது அரசியல் சர்ச்சை வெடித்தது.

இதற்கு எதிராக கடும் கண் டனங்கள் எழுந்த போதிலும், மகிந்த ராஜபக்சே பிரதமராக பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆதரவு திரட்டும் பணியில் அதிபர் சிறீசேனாவும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்ற னர்.

இதற்கிடையே, இலங்கை பிரதமராக மகிந்த ராஜபக்சே நியமிக்கப்பட்டது சட்டவிரோ தம் என்று இலங்கை நாடாளு மன்ற சபாநாயகர் கரு ஜெய சூர்யா அதிபர் சிறீசேனாவுக்கு கடிதம் எழுதியிருந்தார். பெரும் பான்மையை நிரூபிக்கும் வரை ரணில் விக்ரமசிங்கதான் பிரதமர் என்றும் கூறியிருந்தார்.

இலங்கை அரசியலில் பரபரப்பான சூழல் நிலவி வரும் நிலையில், அந்நாட்டு நாடாளுமன்றம் வரும் 14-ஆம் தேதி கூடுவதாக அதிபர் மைத்ரி பால சிறீசேனா ஞாயிற்றுக் கிழமை அறிவித்திருந்தார்.

இதனிடையே, இலங்கை யில் உள்நாட்டுப் போரின் போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழர்களை விடுவிக்க இலங்கை அரசு தயாராகி வருவதாக தகவல் வெளியானது. ராஜபக்சே பிரதமராகப் பதவியேற்றது அரசியல் சாச னத்துக்கு எதிரானது என்றும், நாடாளுமன்றத்தில் அவருக்கு எதிராகக் கொண்டு வரப்படும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரிப்போம் என்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு அறிவித்திருந்தது.

இந்த நிலையில், இலங்கை அரசியலில் அடுத்த திருப்ப மாக சிறீசேனாவின் அய்க்கிய மக்கள் விடுதலை முன்னணி கட்சியின் கூட்டத்தில் எடுக்கப் பட்ட முடிவின் படி, அந்நாட் டின் புதிய நாடாளுமன்றத் தலைவராக தினேஷ் குணவர்த் தனா பொறுப்பேற்றுக்கொண் டார். இந்நிலையில், ராஜபக்சே வின் மகன், நமல் ராஜபக்சே, சுட்டுரையில் தமிழில் வெளியிட்டுள்ள பதிவில், தமிழ் மக்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பு செயல் பட வேண்டும். கூட்டமைப்பில் இருக்கும் சிலருடைய சுய நலத்திற்காக, ஒட்டுமொத்த தமிழ் மக்களின் அடையாளமாக இருக்கும் அந்தக் கூட்ட மைப்பை சிலரிடம் அடகு வைப்பது என்பது தமிழ் மக் களை ஏமாளிகளாக மாற்றும் செயல் ஆகும்' என்று குறிப்பிட் டிருந்தார்.

பெரும்பான்மைக்குப் போதிய பலம் தேறாத நிலை யில், தமிழ் தேசிய கூட்ட மைப்பையும், ரணில் ஆதரவு எம்.பி.க்கள் சிலரையும் தங்கள் பக்கம் கொண்டு வருவதற்கு ராஜபக்சே தரப்பு தொடர்ந்து முயற்சித்து வருகிறது. இந்தச் சூழலில்தான், சிறையில் உள்ள தமிழர்கள் விடுவிக்கப்படவுள் ளதாக நமல் ராஜபக்சே சூசக மாகத் தெரிவித்துள்ளதாக பேசப் பட்டு வருகிறது. இதனிடையே பெரும்பான் மையை நிரூபிக்காதவரை ராஜ பக்சேவை பிரதமராக அங்கீக ரிக்க முடியாது என்று இலங்கை நாடாளுமன்ற தலைவர் கரு ஜெயசூர்யா திட்டவட்டமாகத் தெரிவித்ததுடன் அந்நாட்டு அரசியல் களத்தில் அதிபர் சிறீசேனா அண்மையில் மேற் கொண்ட மாற்றங்கள் அரச மைப்பு சட்டத்துக்கு முரணா னது என்று பெரும்பாலான எம்.பி.க்கள் கருதுவதாகவும் கூறியிருந்தார்.

இலங்கை அரசியலில் நாளுக்கு நாள் நிலவி வரும் பரபரப்பான அரசியல் சூழ்நிலை யில், இலங்கையில் பிரதமர் மகிந்த ராஜபக்சே அமைச்சர வையில் தொழில்,வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறை துணை அமைச்சராக இருந்து வந்த மனுஷா நாணயக்கார, இன்று தனது அமைச்சரவை பதவியிலிருந்து விலகினார். தனது பதவி விலகல் கடிதத்தை அதிபர் சிறீசேனவுக்கு அனுப்பி வைத்தார். தொடர்ந்து அவர் ரணில் விக்ரம்சிங்கவை சந்தித் தவர், பிரதமராக ராஜபக்சே நியமிக்கப்பட்டது அரசியல மைப்புக்கு முரணானது, ஜன நாயகத்துக்கு விரோதமானது என்றும் சட்டவிரோதமாக அரசமைக்க முயலும் இந்த முரணான நடவடிக்கைகளுக்கு என்னால் துணை போக முடி யாது  தெரிவித்துள்ளார். இலங்கை நாடாளுமன்றம் வரும் 14-ஆம் தேதி கூடும் என்று சிறீசேனா அறிவித்துள்ள நிலையில், அமைச்சர் ஒருவர் பதவி விலகியிருப்பது அந் நாட்டு அரசியலில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இலங்கை வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் விக்னேஸ்வரன் கூறி யதாவது: இலங்கை இறுதிக் கட்ட போர் குறித்து சர்வதேச போர்க்குற்ற விசாரணை நடத்த, அய்.நா மனித உரிமைகள் கூட்டத்தொடரில் வலியுறுத்த வேண்டும். தமிழ் தலைவர்களை பயன் படுத்தி தங்களுக்கு எதிரான தடைகளை உடைத்து குற்ற உணர்வு இன்றி அதிகாரப் போட்டியில் சிங்கள அரசியல் வாதிகள் ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டியுள்ளார். மேலும், இலங்கை தமி ழர்களுக்கு நீதியைப் பெற்றுத் தர சர்வதேச சமூசம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விக் னேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner